ஞாயிறு, 17 மார்ச், 2019

நியூட்டன் அறிவியல் மன்றம் என்ற பெயரில் இளங்கோ பிச்சாண்டி என்ற ஒருவர் அரைவேக்காட்டுத் தனமாக உளறிய பதிவை படிக்க நேர்ந்தது. அறிவியல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் இது போன்ற நபர்கள் எல்லாம் அறிவியல் பெயரை பயன்படுத்துவதை படிப்பதை விட வேறு கொடுமையான காலம் வந்து விடாது. இதுபோன்ற குப்பை பதிவுகளுக்கு பதில் அளிப்பது நேர விரயம் என்றாலும் அதிலும் நாலு கூமுட்டைகள் சாட்டையடி பதிவு தோழி என்கிற ரேஞ்சில் கமெண்ட் செய்வதால் இந்த விளக்கப்பதிவு. (பதிவுகளின் லிங்க் கமெண்ட்டில்)
1. ப்ளூடூத் ஹெட்செட் என்பது தனித்து இயங்காது. செல்போனுடன் இணைத்தால் மட்டுமே இயங்கும். இது செல்போன் பயன்படுத்தும் அனைவருக்குமே தெரிந்த விசயம். வெறும் ப்ளூடுத் ஹெட்செட் மட்டும் கொண்டு போய் பிட் அடிக்க முடியும் என்று சொன்னால் எல்கேஜி குழந்தை கூட பின்புறமாக சிரிக்கும். (இதை சொல்பவர் நியூட்டன் அறிவியல் மையமாம். விளங்கும்?) எதனுடம் இணைக்காத ப்ளூடூத் ஹெட் செட்டை மாட்டி பாட்டு கேட்ட விஞ்ஞானிகள் யாராவது இருக்கிறீர்களா?
2. ‎ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைத்திருந்தாலே ப்ளூடுத் சிலநேரம் ஒழுங்காக எடுக்காது. இதில் 200 அடி வரை தகவல் பரப்பலாமாம். ஓகே. தியரிட்டிக்கலி சரி. தேர்வு நடக்கும் ஹாலே 100 அடி இருக்கும். அதில் இருந்து சாதாரணமாக பள்ளி வளாகம் 400 அடிக்கும் குறைவில்லாமல் தான் இருக்கும். இதில் பல சுவர்கள் வேறு. ஒருவேளை செல்போனை வேறு ஒருவர் வைத்து கனெக்ட் செய்ய நினைத்தால் பொடனிக்கு பின்னாடி இருந்து தான் ஓவர் சொல்ல வேண்டும். இதில் அருகில் உள்ள லாட்ஜில் இருந்து ப்ளூடூத் எப்படி எடுக்கும்?
3. ‎உலகின் மிகச்சிறிய ப்ளூடுத் ஹெட் செட்டே 21 மி.மி அளவுடையது. மூக்குத்தி 2-3 மி.மி அளவுதான் இருக்கும். ஒருவேளை இன்னும் கண்டேபிடிக்கப்படாத டெக்னாலஜியை வைத்து நம் மாணவர்கள் பிட் அடிப்பார்கள் போல.
4. ‎ஒருவேளை செல்போன் இணைப்புடன் ப்ளூடூத் ஹெட் செட் மாட்டிக் கொண்டு போனாலே, லாட்ஜில் உட்காரந்து பதில் சொல்ல தயாராக இருப்பவருக்கு வினாத்தாள் படம் ஓடுவது போல தெரியாது. தேர்வு அறையில் இருந்து சத்தம் போட்டு கேள்விகளை படித்தால் அவருக்கு கேட்கும். அதை வைத்து அவர் ஆன்சர் கண்டறிந்து அந்த ஆன்சர் என்ன ஆப்சன் எனக்கண்டறிந்து ஏ, பி, சி, டி எனக் கத்தினால் ப்ளூடுத் வழியே இங்கு இருப்பவருக்கு கேட்டு அவர் பதில் எழுதலாம். இது கூட தெரியாமல் எதோ மகாபாரதத்தில் சஞ்சயன் போரைக் கண்டது போல ஒரே ஒரு ப்ளூடூத் ஹெட்செட்டில் உலகமே தெரியும் என கதைவிடக்கூடாது. இதை பற்றி பேச கருவிகளின் இன்புட், அவுட்புட் மெத்தெட் பற்றிய குறைந்தபட்ச அறிவாவது வேண்டும்.
5. ‎ செல்போன் சிக்னலை முடக்கினாலே போதும். செல்போன் இல்லாமல் ப்ளூடுத் தனியாக செயல்படாது. அதற்கு தனியாக ஜாமர் தேவையில்லை. கொசு, எலிப்பொறி என உளற வேண்டாம்.
6. ‎இறுதியாக ஆர்எஸ்எஸ்க்கு ஹேவிளம்புவது உங்கள் விருப்பம். அதற்கு நியூட்டனையும் அறிவியலையும் பயன் படுத்த வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக