ஞாயிறு, 31 மார்ச், 2019

செயற்கைக்கோள் நிபுணர்கள் கவனத்திற்கு!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
பறந்து கொண்டிருக்கும் செயற்கைக்கோளை
நடுவானில் ஓர் ஏவுகணை மூலம் அண்மையில் இந்தியா
அழித்தது. மிஷன் சக்தி என்று இந்நிகழ்வுக்குப்
பெயரிடப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து முகநூலில் அநேகர்
செயற்கைக்கோள்கள் பற்றியும் ஏவுகணை பற்றியும்
அரிய கருத்துக்களைத் தெரிவித்தனர். தடுக்கி விழுந்தால்
முகநூலில் ஏவுகணை நிபுணர்கள் மீதுதான் விழ
வேண்டும் என்ற நிலை இருந்தது.

நியூட்டன் அறிவியல் மன்றம் இதை வரவேற்கிறது.
செயற்கைக்கோள் குறித்த பேரார்வம் மக்களுக்கு
இருக்கையில், அது குறித்த அறிவியல் பதிவுகளைப்
போதிய அளவு எழுதவில்லையே என்று நியூட்டன்
அறிவியல் மன்றம் நாணமுறுகிறது.

எனவே செயற்கைக்கோள் குறித்த மிகவும் எளியதொரு
கணக்குடன் நியூட்டன் அறிவியல் மன்றம் தனது
கடமையைச் செய்யத் தொடங்குகிறது.

பின்வரும் கணக்கிற்கு விடை காண்க:
---------------------------------------------------------
ஒரு செயற்கைக்கோள் பூமியை நீள்வட்டப்பாதையில்
சுற்றி வருகிறது. அதன் சேய்மை அண்மை இவற்றுக்கு
இடையிலான வேறுபாடு 30,000 கிமீ. அதன் அரைப்பேரச்சு
16,000 கிமீ. அப்படியானால் சுற்றுப்பாதையின்
மையப்பிறழ்வு என்ன?

கணக்கின் ஆங்கில வடிவம் வருமாறு:
---------------------------------------------------------
The difference between apogee and perigee of an elliptical eccentric orbit
of a satellite is 30,000 km and its semi major axis is 16,000 km.Determine
the eccentricity of the orbit.

The English version of the question alone is valid and binding.

மனிதகுல வரலாற்றில் இதைவிட எளிமையான ஒரு
கணக்கு இருக்க முடியாது. எனவே வாசகர்களிடம்
இருந்து விடைகள் காட்டாற்று வெள்ளமாய் வரும்
என்று நம்புகிறோம்.

இந்தக் கணக்கைச் செய்து செயற்கைக்கோள் பற்றிப்
பேசும் தகுதியைப் பெறுங்கள்.
***************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக