ஞாயிறு, 17 மார்ச், 2019

படித்த ஆசாமிகள் கூட ஈவிஎம்மை ஹாக் செய்யலாம் என்று BBC, யூ ட்யூப் லிங்கை அனுப்புகிறார்கள். இதில் என்ன சொல்ல வருகிறார்கள்.. ? ஈவிஎம் மெஷினை எடுத்து அதில் ஒரு ப்ளூடூத் ட்ரான்ஸ்மிட்டர் அப்புறம் ஒரு சிப் அதை ஃபிக்ஸ் செய்தால். அந்த வாக்குச்சாவடியில் இருக்கும் கட்சி ஆசாமியின் மொபைல் வாயிலாய் ஓட்டுகளை மாற்றலாம் என்று போகிறது. இப்படியெல்லாம் செய்ய எலக்‌ஷன் கமிஷன் ஆபீஸில் முகமூடி போட்டுக்கொண்டுகூட இதை சாதிக்கமுடியாது.
1. இதில் உள்ள சிப் ஃபர்ம்வேர். சிப் வரும்போதே இந்த சாப்ட்வேரும் வருகிறது.. இரண்டையுமே ஆராயலாம். அதாவது இந்த மெஷினில் உள்ள சிப்பை சேதப்படுத்தாமல், இதில் உள்ளே தந்திரங்களை புகுத்தவே முடியாது. அப்படி முடியுமென்றால் ஜ ஃபோன் வைத்திருப்பவர்கள்.. இல்லாத ஃபேஸ் டைமை இன்ஸ்டால் பண்ணி காட்டுங்கள் பார்க்கலாம்.
2. இந்த சிப் வரும்போதே இப்படி பரோக்ராம் குளறுபடிகள் செய்யப்பட்டு வருகிறது என்பவர்கள்.. இதை சப்ளை செய்யும் ஈசிஐஎல் போன்ற கம்பெனியின் ஆர் அண்ட் டி பிரிவில் அல்லது ஆடிட் பிரிவில் உள்ளவர்களை விட்டே கூட ஆராயச்சொல்லலாம். இதைவிட ஈஸி, தற்போது உபி யின் உள்ளூர் தேர்தலில் உபயோகிக்கப்பட்ட ஒரு மெஷினை கோர்ட்டில் அது எப்படி வேலை செய்தது.. எப்படி வேலை செய்கிறது என்று கோர்ட் மூலம் அதை மீண்டும் பரிசீலிக்கலாம்.
(அதில் உள்ள டேட்டா 10 வருஷம் வரை வைத்திருக்கவேண்டும் என்பதால்.. அதை கோர்ட் உத்தரவின் பேரில் ஒரு ஸ்டோரேஜில் சேவ் பண்ணிவிட்டு)
3. இப்படி லாஜிக்காய் ஆராயாமல்.. இந்த ப்ளூடூத் ஜிம்பக் லிங்க் எல்லாம் அனுப்பாதீர்கள். கடுப்பாக இருக்கிறது.
4. தேர்தல் கமிஷன் புது மெஷினை ஹாக் பண்ண சொல்வதிலும் நியாயம் இருப்பதாய்த்தெரியவில்லை.
இப்படி ஊழல் நடந்து மட்டும் இருந்தால்.. பாஜக மேல் கண்டிப்பான நடவடிக்கை எடுக்கலாம்.. தேர்தல் கமிஷன் மீதும். இதில் தவறு இல்லை என்றால் மாயாவதி கட்சி முதல்.. கத்தும் யாதவ, குஜிலி கட்சிகளையும் பத்து வருஷமாவது தடைபோடுவது வரை செய்யலாம். அப்போதுதான் பொத்திக்கொண்டு இருப்பார்கள்.
டீலா? நோ டீலா..?
====================================
வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை திரும்பவும் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
வாக்கு இயந்திரங்கள் இணையத்துடனோ அல்லது வேறு நெட்ஒர்க் எதனோடோ இணைக்கப் படவில்லை. அவை தனித்தனியாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இயந்திரங்களாக இயங்குகின்றன. அதனால் யாரோ ஒரு ஹேக்கர் எங்கோ ஒரு அண்டர்கிரவுண்ட் அறையில் உட்கார்ந்து கொண்டு இந்த இயந்திரங்களை தன் விருப்பத்துக்கு கண்ட்ரோல் செய்ய இயலாது என்று நினைக்கிறன். எதாவது ஓரிரு மிஷின்களை மாற்ற முயற்சிக்கலாம். அதில் உள்ள மென்பொருள் ஒவ்வொரு சிப்-பிலும் பொறிக்கப் பட்டிருக்கிறது. அதனால் எல்லாவற்றையும் 'மாற்றி அமைக்க' ஒவ்வொரு மிஷினையும் திறந்து அதில் சிப்--களை மாற்றிப் பொறிக்க வேண்டி இருக்கும். அதற்க்கு நம்பிக்கையான நிறைய அதிகாரிகள், அலுவலர்கள், ஐடி இன்ஜினியர்கள் உதவி தேவைப்படும். அவ்வளவு பெரிய டீமை வைத்துக் கொண்டு வெளியே தகவல் கசியாமல் இதனை செய்வது இயலாத காரியம் என்று நம்புகிறேன்.
அதே நேரம் தேர்தல் ஆணையம் இந்த சர்ச்சைக்கு முடிவு கட்ட வேண்டும்..பொதுவெளியில் வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்யும் சவாலை சில மாதங்கள் முன்பு அறிவித்தார்கள். அப்புறம் சத்தமே காணோம். அதனை தாமதப் படுத்தாமல் விரைவில் நடத்த வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக