வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவல்
----------------------------------------------------
மேலாண்மை பொன்னுச்சாமி விமர்சனம்
------------------------------------------
----------------------------------------------------
மேலாண்மை பொன்னுச்சாமி விமர்சனம்
------------------------------------------
மார்க்சிஸ்ட் மதுரை வேட்பாளர் சு.வெங்கடேசன் ஒரு இன வெறி பற்றாளர் என்பதற்கு அவரது காவல் கோட்டம் நாவல் ஒன்றே போதுமானது..நாயக்க மன்னர்கள் தமிழர்களை அடிமைப்படுத்தியதை அவர் பெருமையோடு கூறிய விதம் தமிழர்ககளை இழிவுபடுத்தியதையும் திரு மேலாண்மை பொன்னுசாமி போகிற போக்கில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.அதற்கு மேல் அவரால் விமர்சிக்கமுடியவில்லை ஏன்?
மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் காவல் கோட்டம் நாவல் பற்றிய விமர்சனத்தின் ஒரு பகுதி..
///மார்க்சியப் பேரறிஞர் ராகுல்ஜியின் ‘வால்கா முதல் கங்கை வரை’ நூலை வாசித்து முடித்தால் சகல மன்னர்களையும், மன்னர்களின் அதிகாரத்தை காப்பாற்ற தத்துவங்களும், தந்திரங்களும் கற்றுத்தந்த அறிவுசார் வேதியர்களையும் முழுசாக வெறுக்கத் தோன்றும்; ‘மக்கள் விரோதிகள்’ என்ற சிந்தனை எழும். அப்படியொரு உணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, மன்னர்களை மதிக்கத் தூண்டுகிறதே, இந்த நாவல். இது சரியா? நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மனோபாவத்தை வாசகனிடம் உருவாக்க வேண்டிய கடமையிலிருந்து நாவல் நழுவவில்லையா? ஒரு முற்போக்கு சமூகப் பார்வை காணாமல் போய்விடவில்லையா?

மன்னர்கள் வரலாறு, மக்கள் நோக்கிலிருந்து பார்க்கப்படாமல், தெலுங்கு மன்னர்களை மட்டும் கொண்டாட வைக்கிற, மதித்துப் போற்றுகிற, காவிய நாயகர்களாக சித்தரிப்பது சரியா?
நாவலின் பெரும்பகுதியும் களவும் காவலுமாக சித்தரித்து அவர்களது சாகசத்தை கொண்டாடுவது போதுமானதா? ஆடு வளர்க்கிற, மாடு வளர்க்கிற, கதிர் விளைய வைக்கிற, பொருளுற்பத்தி செய்து தேசத்துக்கு சோறு போடுகிற, வீடுகள் கட்டுகிற அந்த உழைப்பாளி உழவு மக்களும் தமிழ் மக்கள் தானே. களவுகள் தருகிற அந்த மக்களின் வலிகள் ???
சமூக உற்பத்தியின் ஈடுபடுகிற சமூக சக்திகளான தமிழர்களைத் தவிர்த்து விட்டு, களவும் காவலுமென இருந்த ஒரு சிறுபகுதியை மட்டுமே பிரதானப்படுத்தி அதுவே ‘தமிழக முழுமை’ என்ற மாயத்தோற்றம் தருவது சரிதானா?
களவும் காவலுமென இருந்தவர்கள் காலம் பூராவிலும் அப்படித்தான் இருந்தவர்களா? மூவேந்தர்களுக்கு ராணுவ அதிகாரமாக இருந்து, தோற்கடிக்கப்பட்டு, சிதறடிக்கப்பட்ட பூர்வீகத் தமிழ்ப் படைகளாக ஏன் இருந்திருக்கக் கூடாது?
நாயக்க மன்னர்களின் ஆட்சித் திறமையும், திருமலை நாயக்கர் தந்த காவலதிகாரம், அதைச் சிதைத்து சட்டம், ஜனநாயகம், நீதிபரிபாலன ஒழுங்கு முறை, ஆலைகள், ஆலைத்தொழில் உற்பத்தி, சகலருக்கும் கல்வி என்று முதலாளித்துவ வாழ்க்கை முறைமையை உருவாக்க முயன்று வெற்றி பெறுகிற காலனிய ஆட்சியை எதிர்த்த குரலுடன் இந்த நாவல் முடிகிறது.
இயங்கியல் வரலாற்றுப் பொருள்வாதத்தத்துவ நோக்கில், மார்க்சிய வெளிச்சத்தில் சமுதாய வளர்ச்சிப் படிநிலைகளை பார்த்தால்.. நிலப்பிரபுத்துவத்தை விட, முதலாளித்துவ வாழ்க்கை முறைமை முற்போக்கானதல்லவா? சகலருக்கும் கல்வி தந்து, வர்ணாசிரம வேரறுத்து, ஆலைத்தொழில் உற்பத்தியை தருகிற முதலாளித்துவ முறைமை, நிலப்புரபுத்துவத்தை விடவும் முற்போக்கானதல்லவா?///...
===============================
காவல் கோட்டம் நாவலில் மதுரை வடுக ஆட்சியாளர்களின் போர் புகழுக்கு பங்கம் விளைவிக்க கூடாதென கள்ளர்களின் வரலாற்றை திரிபு செய்தவர். கள்ளர்களின் வீரப்போரால் கொல்லப்பட்ட வடுக தளபதியை வரலாற்று நிகழ்வை திரித்து உள் மோதலில் கொல்லப்பட்டதாக எழுதியிருப்பார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக