வெள்ளி, 3 ஜனவரி, 2020

1) நெல்லை கண்ணனை அவரின் இளவயது முதலே
நாங்கள் அறிவோம். அவரைப் பற்றிய முழுமையான
புரிதல் எங்களுக்கு உண்டு. அவரைப் பற்றிய அரைகுறைப்
புரிதலோடு விஷயத்தைப் பார்த்தால் உண்மை
விளங்காது.

2) நெல்லை கண்ணன் அநாதை அல்லர். திருநெல்வேலி
சைவப் பிள்ளைமார் சமூகம் அவர் பக்கம் நிற்கிறது.
வலிமை மிக்க அவரின் சமூகம் அவரைப் பாதுகாக்கும்.

3) நெல்லை கண்ணன் முகநூலில் மட்டும் இயங்கும்
பொழுதுபோக்கு அரசியல்வாதி அல்லர். அவர் முழுநேர
அரசியல்வாதி. கலைஞரையே எதிர்த்துப் போட்டியிட்ட
வரலாறு உடையவர் அவர்.

4) ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கையில் வழக்கு, கைது
என்பதை இயல்பானவை. வழக்கு கைது ஆகியவற்றைத்
தவிர்த்து விட்டு பாதுகாப்பாக அரசியல் செய்ய உலகில்
வழி எதுவும் இல்லை. இதை நெல்லை கண்ணன் நன்கறிவார்.

5) நெல்லை கண்ணனை எடப்பாடி அரசு குண்டர் சட்டத்திலோ
NSA சட்டத்திலோ UAPA சட்டத்திலோ கைது செய்திருந்தால்,
அல்லது மத்திய அரசே நேரடியாக நம் மாநிலத்தில்
தலையிட்டு, NIA அமைப்பின் மூலம் விசாரணை நடத்தி
வழக்குப் பதிவு செய்து கைது செய்திருந்தால், அது
ஜனநாயகத்துக்கு எதிரானது. வன்மையான கண்டனத்துக்கு
உரியது. அப்படி இல்லாதபோது குட்டி முதலாளித்துவத்தின்
வீண் அலட்டல் சிறுபிள்ளைத் தனமானது.

6)  அன்றாடம் தொழிற்சங்கப் போராட்டங்களில்
தொழிலாளர்கள் கைதாகிறார்கள். மாலையே விடுதலை
ஆகிறார்கள். அல்லது சிறையில் அடைக்கப்
படுகிறார்கள். ஒரு தொழிற்சங்கவாதியின்
வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். இதற்குப்
பயந்தவன் தொழிற்சங்கம் நடத்த முடியாது.

7) ஏதேனும் ஒரு வர்க்க ஸ்தாபனத்தில், உதாரணமாகத்
தொழிற்சங்கத்தில் வேலை செய்கிறவர்களால்
ஒரு கைது நடவடிக்கையை சரியாகப் புரிந்து
கொள்ள முடியும். துரதிருஷ்ட வசமாக, எந்த வர்க்க
அமைப்பிலும் வேலை செய்யாதவர்கள், லும்பன்
வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் தங்களின்
அச்சத்தை வெளிப்படுத்துவதில் ஆச்சரியம் இல்லை.

8) என்னுடைய 35 ஆண்டு காலத் தொழிற்சங்க
வாழ்க்கையில் கணக்கற்ற போராட்டங்களையும்
எஸ்மா உள்ளிட்ட அடக்குமுறைகளையும் நானும்
எங்கள் தோழர்களும் சந்தித்துள்ளோம். எதற்கும்
அலட்டிக் கொண்டதில்லை.

--------------------------------------------------------------------------

மாதம் ரூ 25,000, ரூ 30,000 சம்பளம் வாங்கிக் கொண்டு
தங்கள் வருமானத்துக்குள் குடும்பம் நடத்தும்
அரசு ஊழியர்களில் சிலர் பொது வெளியில்
அறியாத் தனமாக ஒரு கருத்தைச் சொல்லி விட்டு
 அரசு அடக்குமுறைக்கு இலக்காகிறார்கள்.

அடக்குமுறை தொடர்ந்து புதுப்புது வடிவத்தில் வந்து
கொண்டே இருக்கிறது.  சுதந்திர தின விழா நிகழ்வின்போது
தேசியக் கொடிக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை
என்று ஒரு அரசு ஊழியருக்கு மெமோ. அவருக்கு
ஆதரவாக முகநூலில் உள்ள குட்டி முதலாளித்துவம்
குரல் கொடுக்குமா? அல்லது அவர் மீதான ஒழுங்கு
நடவடிக்கையை முறியடிக்க குட்டி முதலாளித்துவத்தால்
இயலுமா?

இவர்களின் கஷ்ட நஷ்டத்தோடு ஒப்பு நோக்கும்போது
நெல்லை கண்ணன் கைது ஒன்றுமே இல்லை!


அறச்சீற்றம் போன்ற வீண் அலட்டல்கள் அந்த அரசு
ஊழியர் பாதிக்கப்பட்டபோது யாருக்கும் வரவில்லையே!
சமூகத்தின் பொதுவெளி வேறு; முகநூலின் பொதுவெளி
வேறு. ஒரு தொழிற்சங்கவாதியால்தான் பாதிக்கப்பட்ட
அரசு ஊழியருக்கு பாதுகாப்புத் தர முடியும். ஏனெனில்
ஒரு தொழிற்சங்கவாதி சமூகத்தின் பொதுவெளியில்
வேலை செய்கிறான். அவன் முகநூலுடன்
முடங்குவதில்லை.


முகநூலுக்கென்று எனக்கு ஒரு கொள்கை கிடையாது.
சமூகத்தின் பொதுவெளியில் எனக்கு என்ன கொள்கையோ
அது மட்டும்தான்.

விவசாயிகளுக்கென்று விவசாய சங்கங்கள் இருக்கின்றன.
அவை வலிமையானவையே.
வலிமையான சங்கம் இல்லாமல்  இருக்கும்
வர்க்கத்தட்டு இந்தியாவில் எதுவென்றால்,
UNORGANISED SECTORல் பணிபுரியும்
தொழிலாளர்கள்தான். அவர்களுக்குத்தான் சமூகத்தின்
ஆதரவு தேவை.


இல்லை என்று யார் சொன்னார்கள்? இந்தியாவிலேயே
வலிமையான சங்கம் எங்கள் தொலைத்தொடர்புத்
தொழிற்சங்கம். அதில் பணியாற்றியவன் நான்.




இதுபோன்ற பூச்சாண்டிகள் சிரிப்பு மூட்டுகின்றன. நிற்க.
முகநூலில் மட்டும் இயங்கும் குட்டி முதலாளித்துவத்தின்
கண்ணோட்டம் வேறு; சமூகத்தின் பொதுவெளியில்
இயங்கும் என்னுடைய கண்ணோட்டம் வேறு.
இரண்டும் முரண்பட்டவை.


நான்  ஏற்கனவே சொன்னது போல, இந்தக் கைது
அலட்டிக் கொள்ள வேண்டிய ஒரு கைது அல்ல.
குட்டி முதலாளித்துவம் எதற்கெல்லாம் அலட்டிக்
கொள்கிறதோ, அதற்கெல்லாம் நான் அலட்டிக்
கொள்வதில்லை.

ஒரு தொழிற்சங்கப் போராட்டத்தில்
124A பிரிவில் கைதாகி சிறையில் இருந்தபோது,
என்னுடன் இருந்த சக தோழரான சகாதேவனிடம்
(இவர் மாநிலச் செயலாளர்) எங்கள் தலைவர் ஜெகன்
124Aயில் நாம் கைதாகி இருக்கிறோம் தோழர் என்று
கூறினார்.. ஆனால் தோழர் சகாதேவன் அதைப்பற்றி
எல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை.
ஏனெனில் அவர் பாட்டாளி வர்க்கத்தவர்.

இதுவே குட்டி முதலாளி வர்க்கமாக இருந்திருந்தால்
எவ்வளவு அலட்டல் இருந்திருக்கும்?


எனது கொள்கை போலிக் கம்யூனிசத்துக்கு எதிரானது.


பெரியாரின் சிந்தனை முறையில் எந்த ஒரு
விஷயத்தையும் சாதியில் இருந்து விலக்கிப்
பார்க்க இயலாது. இது அவரின் modus operandi.
எந்தவொரு விஷயத்திலும் சாதிய அம்சத்தை
மட்டுமே பார்த்து பிற அம்சங்களைப் புறக்கணிப்பது
அவரின் சிந்தனை முறை.


unmaith

உண்மைதான் 




       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக