சனி, 18 ஜனவரி, 2020

நாகூரானே அஞ்சானே
ஞானசேகரன் தோழர்களே
உங்களுக்கு எங்கள் வீர வணக்கம்!
------------------------------------------------------
1982 ஜனவரி 19ல் நடந்த நாடுதழுவிய
பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்று
போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் வீர மரணம்
அடைந்த தோழர்களுக்கு செவ்வணக்கம்!

பாசிச அரக்கி இந்திராவின் ஆட்சியின்போது
பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றமைக்காக
புழுவினும் இழிந்த பாசிசக் கூத்தாடி
ராமச்சந்திர மேனனின் போலிஸ் வெறிநாய்களால்
சுட்டுக் கொல்லப்பட்டு உயிர் துறந்த
தஞ்சை மண்ணின் விவசாயத் தொழிலாளர்கள்
1) நாகூரான் 2) அஞ்சான் 3) ஞானசேகரன்
ஆகிய மூவரின் நினைவுக்கு எங்கள் அஞ்சலி!
----------------------------------------------------------------------------

தியாகிகளுக்கு எங்கள் வீர வணக்கம்!
   

இந்தப் பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றது
எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது. அப்போது
எனக்கு 28 வயது.

முன்னதாக எங்கள் தொழிற்சங்கத்தின் தமிழ் மாநில
மாநாட்டில், Platform of mass organisations என்ற அமைப்பு
விடுத்துள்ள இந்த அறைகூவலை ஏற்று இந்த
வேலைநிறுத்தத்தில் முழுமையாகப் பங்கேற்பது
என்று தீர்மானம் நிறைவேற்றி இருந்தோம்.

மூன்று தோழர்களை மேனனின் போலீஸ் சுட்டுக்
கொன்று விட்டது என்ற செய்தியை அன்று
மாலைதான் அறிந்தேன்; வருந்தினேன்.

வீரவணக்க கோஷங்கள் போடுவதற்காக நான்தான்
நாகூரானே அஞ்சானே
ஞானசேகரன் தோழர்களே
என்று அந்த வரிசையை மாற்றினேன்;
தஞ்சை CPM தோழர்கள் எழுதிய வரிசையான 
அஞ்சான், நாகூரான், ஞானசேகரன்
என்பதே சரியானது.

வீர வணக்கம் வீர வணக்கம்
உங்களுக்கு எங்கள் வீர வணக்கம்
     

உலகின் சில நாடுகளில் இன்னமும் போலியோ
உள்ளது. நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான்,
ஆப்கானிஸ்தான் நாடுகளில் இன்னும் போலியோ
உள்ளது. எனவே அங்கிருந்து நம் நாட்டுக்குப்
பரவாமல் தடுக்க நாம் போலியோ மருந்தை
உட்கொண்டே  ஆக வேண்டும்.

 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக