சனி, 4 ஜனவரி, 2020

நாசா வெளியிட்ட சூரியனின் ஓசை!
-------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------
சூரியன் ஓசை எழுப்புகிறதா? எழுப்புவதாக வைத்துக்
கொள்வோம். அந்த ஓசை பூமியில் இருக்கும் நமக்குக்
கேட்குமா?

சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் 15 கோடி கிமீ.
சூரியன் எழுப்பும் ஓசை இந்த 15 கோடி கிமீ தூரத்தைக்
கடந்து வர வேண்டும். அப்படியானால் இவ்வளவு தூரத்தை
உள்ளடக்கிய ஒரு ஊடகம் (material medium) வேண்டும்.

ஒலி பரவுவதற்கு ஒரு ஊடகம் வேண்டும். ஊடகம் இல்லாமல்
வெற்றிடத்தில் ஒலி பரவாது. ஆனால் ஒளி அப்படியல்ல. அது
வெற்றிடத்தின் வழியாகச் செல்லும்.

நமது சூரிய மண்டலத்தில் பூமிக்கும் சூரியனுக்கும்
இடையிலான தூரத்தில், குறிப்பாக ஆழ் வெளிப் பகுதியில்
(deep space) பருப்பொருளின் அடர்த்தி மிகவும் குறைவு.
கிட்டத்தட்ட வெற்றிடம் என்றே கூறலாம். எனவே இந்த
வெற்றிடத்தின் வழியாக ஒலி பரவ இயலாது. எனவே சூரியன்
ஏதேனும் ஓசையை எழுப்பி இருக்குமானால், அது பூமியில்
இருக்கும் நம்மை வந்தடைய இயலாது.

அப்படியானால் நாசா வெளியிட்ட சூரியனின் ஓசை
என்பது என்ன? அது செயற்கையாக உருவாக்கப்பட்ட
ஓசை. சூரியனின் அதிர்வுகளை உரிய விதத்தில் மாற்றி
அமைத்து உருவாக்கப்பட்ட ஓசை.
(The vibrations of the sun are translated into sound).

சூரியன் மட்டுமல்ல, இந்த ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்திலும்
உள்ள பொருட்கள் அனைத்தும் சதா இயங்கிக் கொண்டே
இருக்கின்றன. இயக்கம் என்பது பொருள் இருத்தலின்
வடிவம் (motion is the mode of existence of matter) என்பது
மார்க்சியப் பொருள்முதல்வாத ஆசான் பிரடரிக் எங்கல்ஸ்
கூறிய புகழ் பெற்ற வாக்கியம்.

எனவே சதா இயங்கிக் கொண்டிருக்கும், எப்போதுமே
சுழன்று கொண்டிருக்கும் வான் பொருட்களில் பல்வேறு
காரணங்களால் அதிர்வுகள் (vibrations) ஏற்படக் கூடும்.
சூரியனின் வளிமண்டலத்தில் ஏற்படும் இத்தகைய
அதிர்வுகளைக் கடந்த இருபதாண்டுகளாக நாசாவும்
(SOHO, NASA) ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் (ESA)
தங்களின் விண்கலன்கள் மூலமாகப் படம் எடுத்துள்ளன.

இந்தச் சித்திரங்களை (images) ஆய்வகத்தில் ஆய்வு செய்து
அவற்றின் அதிர்வெண் மாறாமல், ஓசைகளாகப் பெயர்த்தனர்.
இவ்வாறு பெயர்க்கப்பட்ட ஓசைகளை மனிதச் செவிகளால்
அப்படியே கேட்க இயலாது. ஏனெனில் 20 ஹெர்ட்ஸ் முதல்
20,000 ஹெர்ட்ஸ் வரையிலான அதிர்வெண் கொண்ட
ஒலியையே மனிதனால் கேட்க இயலும் (human audible limit).

எனவே மனிதனால் கேட்கத்தக்க அதிர்வெண்ணில் சூரிய
ஓசையை நாசா உருவாக்கியது. அதை அனைவரும்
அறியுமாறு பொதுவெளியில் வெளியிட்டு உள்ளது.

அதிர்வு (vibration) என்பதும், ஓசை (sound) என்பதும்
யாந்திரீக நிகழ்வுகளே (mechanical phenomenon).
எனவே ஒன்றை மற்றொன்றாக மாற்றுவதில் தவறில்லை.
இப்படி மாற்றுவதானது விஞ்ஞானிகளுக்குத் தேவைப்
படுகிறது. சூரியனை மேலும் அறிய இது தேவையாகிறது.

சூரியனின் ஓசையை நாசா வெளியிட்டு ஓராண்டு
ஆகிறது. உலகெங்கும் பல கோடிப்பேர் இந்த ஓசையைக்
கேட்டுள்ளனர்.

கேட்கின்ற ஒவ்வொருவருக்கும் இந்த ஓசை ஒவ்வொரு
விதமாகத் தோன்றுவது இயல்பு. இதை விஞ்ஞானிகள்
அறிந்தே வைத்திருக்கின்றனர். ஏற்கனவே பரிச்சயமான
ஓசையுடன் இதை ஒப்பிட்டு அதுவேதான் இது என்றும்
சிலர் கூறலாம்.

கணிதத்தில் permutations and combinations என்று ஒரு பாடம்
உண்டு. வெறும் 11ஆம் வகுப்புப் பாடம்தான்.
அதில் nCn, nC1 என்றெல்லாம் உண்டு.
(nCn = Number of combinations of n things taking n at a time;
nC1 = Number of combinations of n things taking 1 at a time).

nCn = 1 என்றும் nC1 = n என்றும்  கணித மாணவர்கள்
அறிவார்கள். எனவே நாசா வெளியிட்ட சூரியனின்
ஓசையைக் கேட்போர் n என்றால், அந்த ஓசையானது
கேட்போருக்கு n வேறுபட்ட ஓசைகளாகத் தோன்றக்கூடும்.
இது   மானுட இயல்பு.
இங்கு nCnக்கு வேலையில்லை; nC1 மட்டுமே தொழிற்படும்.
எனினும் யார் யாருக்கு எப்படி எப்படித் தோன்றினாலும்
அந்தத் தோற்றங்களுக்கு அறிவியலில் கால் காசு
மதிப்பில்லை என்பதையும் மக்கள் உணர வேண்டும்.
****************************************************
           

நமது காலக்சியின் மையத்தில் கோடிக்கணக்கான
நட்சத்திரங்கள் உள்ளன. கூடவே ஒரு black holeம் உள்ளது.
இந்தப்படம் ஒரு கலைஞனின் கைவண்ணம் ஆகும்.
மெய்யான புகைப்படம் அல்ல.
                  

தங்களின் கருத்து மானுட மையவாதம் முன்மொழிந்த
கருத்தே. ஒரு காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த
மானுட மையவாதம் இன்று சரிந்து விட்டது.
மனிதர்கள் உள்ளிட்ட நமது பூமி மொத்தப்
பிரபஞ்சத்துடன் ஒப்பிடும்போது அற்பமானதே.


எதிர்வரும் குடியரசு தினத்தில்
ராஜாத்தி அம்மாளுக்கு ஆன்மிகத் துறையில்
பத்மஸ்ரீ கிடைக்கும் என்று நம்பிக்கையுடன்
இருக்கிறது கமலாலயம்!


மருதுபாண்டியன் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக