வெள்ளி, 10 ஜனவரி, 2020

ஜேஎன்யூ பல்கலையின் வன்முறை நிகழ்வுகள்!
பல்கலைகளில் வர்க்கப் பிளவுகள்!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
ஜேஎன்யூ பல்கலை குறித்த அண்மையில் எழுதப்பட்ட
எனது கட்டுரை கணிசமான வரவேற்பையும் ஓரளவு
எதிர்ப்பையும் பெற்றுள்ளது. இது இயற்கையானதே.
Highly heterogeneous ஆக உள்ள ஒரு சமூகத்தில், புரிதலின்
மட்டமானது (level of understanding) பாரதூரமாக
வேறுபட்டுக் கிடக்கிற ஒரு பொதுவெளியில் இத்தகைய
split verdict இயல்பானதே.

அந்தக் கட்டுரையானது, பல்கலைக் கழகத்தில்
படித்துப் பட்டம் பெற்றவர்களுக்காக மட்டும் எழுதப் பட்டது.
இன்றும் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்காகவும் 
பி ஹெச்டி ஆய்வு மாணவர்களுக்காகவும் எழுதப் பட்டது.
அது அனைவருக்குமான கட்டுரை அல்ல.
ஆம், it is a forbidden fruit to many!

துரதிருஷ்ட வசமாக பல்கலைக் கழகங்களுடன்
எந்தவொரு ஸ்நானப் பிராப்தியும் அற்றவர்கள் எனது
கட்டுரையைப் படித்து விட்டு, அதைப் புரிந்து கொள்ள
இயலாமல் பிறழ்புரிதலுக்கு இலக்காகி உள்ளனர்.

இந்த இடத்தில் மிகவும் நேர்மையான ஒரு கேள்வி
எழுகிறது. ஒரு பல்கலைக் கழகம் பற்றிய academic
தன்மை வாய்ந்த ஒரு கட்டுரையை, எந்தப்
பல்கலையிலேனும் ஒரு  நாளும் படித்திராத ஒருவரால்
புரிந்து கொள்ள இயலுமா? இதற்கு மனச்சாட்சியைத்
தொட்டு நேர்மையையுடன் பதிலளிக்க வேண்டும்.
இயலாது என்பது கண்கூடு.

எனவே புரிந்து கொள்ள இயலாமல் பிறழ்புரிதலுக்கு
இலக்கான, படிப்பறிவற்ற ஆசாமிகள் மீது சினம்
கொள்ளத் தேவையில்லை. Hate the sin, but not the sinner
என்கிறது பைபிள். அதாவது "பாவத்தை வெறுக்க
வேண்டுமே தவிர பாவியை வெறுக்கக் கூடாது" என்று
பொருள். எனவே இந்த ஆசாமிகளை மன்னித்து விட்டு,
அவர்களின் அறியாமை மீது மூர்க்கத் தனமான
தாக்குதல் தொடுக்க வேண்டும்.

பின்நவீனத்துவச் சூழல்!
------------------------------------
ஜேஎன்யூவில் ஒரு பின்நவீனத்துவச் சூழல் நிலவுகிறது
என்று என் கட்டுரை குறிப்பிடுகிறது. இதைப் புரிந்து
கொள்ள பின்நவீனத்துவம் என்றால் என்ன என்பது
பற்றிய தெளிவு வேண்டும்.

நான் ஐஐடி வளாகத்தினுள் பலமுறை சென்றவன்;
அங்கேயே திரிந்தவன். அண்ணா பல்கலை வளாகத்தை,
அங்குள்ள வளாகச் சூழலை அறிந்தவன். ஜேப்பியாரின்
நிகர்நிலைப் பல்கலை வளாகம், பாரிவேந்தர்
பச்சமுத்துவின் SRM பல்கலை வளாகம் இவை பற்றித்
தெளிவாக அறிந்தவன். இங்கெல்லாம் சில அறிவியல்
கூட்டங்களில் நான் பேசி இருக்கிறேன்; பல கூட்டங்களில்
பங்கேற்றும் இருக்கிறேன். இங்குள்ள வளாகச் சூழல்
எத்தகையது என்று உணர்ந்தவன். இங்கெல்லாம்
பின்நவீனத்துவச் சூழல் என்பது மருந்துக்கும்
கிடையாது.

சுயநிதி நிகர்நிலைப் பல்கலைகளில் எப்போதுமே
ஒரு இறுக்கமான சூழல் நிலவும். வளாகத்தில்
ஒரு விதமான நிலப்பிரபுத்துவச் சூழல் நிலவும்.
மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்குத் தடையாக
அங்கு பல அம்சங்கள் உண்டு. மாணவர்களுக்கு
ஆயிரம் கட்டுப்பாடுகள் உண்டு.

தென் மாவட்டங்களில் உள்ள பல கல்லூரிகள் சாதிய
மோதல்களின் வரலாற்றை உடையவை. பட்டியலே
இட முடியும். ஹாஸ்டலில் இருந்துதான் சாதிய மோதல்கள்
வெடிக்கும். பெரும்பாலும் day scholars இதில் பங்கேற்க
மாட்டார்கள்.

இஸ்லாமியக் கல்லூரிகளில் மத நெடி மிகவும் வீரியமாக
அடிக்கும். ஆக இந்தியாவின் பல்வேறு கல்லூரிகள்,
பல்கலைகளில் இன்றும் இந்த 2020ஆம் ஆண்டிலும்
பல்கலை வளாகங்களில் சாதி மதம் சார்ந்த
நிலப்பிரபுத்துவச் சூழலே கோலோச்சுகிறது.
இதை எவராலும் மறுக்க முடியுமா? மறுத்துப் பார்
என்று சவால் விடுகிறேன்!

ஜேஎன்யூ பல்கலையின் வளாகச் சூழல் எப்படி உள்ளது?
இங்கு அதன் பிறப்பு முதலே ஒரு anti feudal சூழல்
இருந்தது. 1970களில் இந்த anti feudal சூழலானது
தாராளவாத முதலாளித்துவத்திற்கு ஆதரவாக
இருந்தது. காலப்போக்கில் இந்தச் சூழலை
பின்நவீனத்துவம் தனதாக்கிக் கொண்டது.
மாணவர்களில் ஒரு பிரிவினரும் கணிசமான
பேராசிரியர்களும் பின்நவீனத்துவ ஆதரவாளர்களாக
இருந்து வருகின்றனர்.

ஐஐடியில் மாணவர்கள் மீது நியாயமான கட்டுப்பாடுகள்
உண்டு. ஆனால் ஜேஎன்யூவில் கட்டுப்பாடே இல்லாத
சூழல் உள்ளது. உதாரணமாக கல்லூரி முடிந்தபின்
இரவு நேரங்களில் மாணவர்களின் நடமாட்டத்திற்கு
ஐஐடியில் கண்காணிப்பு உண்டு. அனுமதியுடன் எங்கும்
செல்லலாம். அதைப் பதிவு செய்யும் movement register
தன்மை வாய்ந்த Log Book உண்டு. இப்படி எதுவும்
ஜேஎன்யூவில் கிடையாது.

ஜேஎன்யூவில் பின்நவீனத்துவச் சூழல் நிலவுகிறது
என்ற உண்மையை நான் என் சொந்த ஆய்வின்
அடிப்படையில் கண்டுபிடிக்கவில்லை. எனக்கு
முன்பே இந்தியாவின் பிரபல கல்வியாளர்கள்
ஜேஎன்யூவின் பின்நவீனத்துவச் சூழலை அடையாளம்
காட்டி உள்ளனர். நான் செய்ததெல்லாம் அவர்களின்
கூற்றை வழிமொழிந்ததே. அவர்களின்  கட்டுரைகளை
ஆங்கிலப் புலமை உடைய வாசகர்கள் படிக்க வேண்டும்.
(அவை அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளவை).

ஜேஎன்யூ ஒரு white elephant என்பதையும், மக்களை
ஒடுக்குவதில் கூடுதல் திறமைகொண்ட அதிகார 
வர்க்கத்தை (bureaucratic class) உருவாக்கும் தொலைநோக்குடன்
இந்திரா காந்தி அம்மையார் ஜேஎன்யூவை நிறுவினார்
என்பதும் குறிப்பிடத் தக்கவை. ஜேஎன்யூவின் பட்ஜெட்டில்
இன்னும் நாலைந்து ஐஐடிகளை நடத்தலாம் என்பதும்
பாமர மக்கள் அறியாத உண்மை. சமூகத்தின் பொருள்
உற்பத்தியில் பங்கேற்காத ஜேஎன்யூவுக்கு, பொருள்
உற்பத்தியில் பங்கேற்கும் ஐஐடிகளை விட பன்மடங்கு
அதிகச் செலவு என்பது அறிவியலுக்கு எதிரானது.

இந்திரா காந்தி அம்மையார் தாம் உருவாக்கிய இந்த
ஜேஎன்யூவை 45 நாட்கள்  இழுத்து மூடினார் என்ற
உண்மையும் பாமர மக்கள் அறியாதது.     

முதற்கோணல் முற்றும் கோணல்!
---------------------------------------------------
ஜேஎன்யூவில் இன்றும் (10.01.2020) போராட்டம்
தொடர்கிறது. நாளையும் தொடரும்.டெல்லி
மாநிலத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்
பட்டுள்ளன. பாராளுமன்றம் என்னும் பன்றித்
தொழுவத்தில் புரளும் பன்றிகள் இந்தப் போராட்டம்
முடிந்து விடாமல் பார்த்துக் கொள்வார்கள்.
தேர்தல் சேற்றில் புரளும் எந்தக் கட்சியையும்
(ஆம் ஆத்மி, காங், பாஜக) எம்மால் ஆதரிக்க இயலாது.

இன்றைய பல்கலைகளில் செமஸ்டர், டிரைமெஸ்டர்
மற்றும் வருடாந்திரத் தேர்வுகள் உண்டு. செமஸ்டர்
தேர்வுகளுக்கு மாணவர்களை விண்ணப்பிக்குமாறு
ஜேஎன்யூ பல்கலை அறிவித்து இருந்தது.

Arts Group மாணவர்களில் 90 சதம் பேர் தேர்வுக்கு
விண்ணப்பம் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.
அரியர்ஸ் மிகவும் அதிகமாகிப்போன சிலர் மட்டுமே
விண்ணப்பம் செய்தனர்.

Science Group மாணவர்களில் 90 சதம் பேர் தேர்வுக்கு
விண்ணப்பித்தனர். இதை போஸ்ட்மார்டன்
லிபரல்களான பணக்கார வீட்டுப் பருப்புகள்
விரும்பவில்லை. எனவே முதலில் செமஸ்டர்
தேர்வு விண்ணப்பம் செய்யும் கவுன்டரை உடைத்து
நொறுக்கினர். அடுத்து on lineல் விண்ணப்பம்
செய்யும் சர்வரையும் (WiFi server) உடைத்து
நொறுக்கினர்.

அத்தோடு விட்டார்களா பணக்காரப் பருப்புகள்?
அன்றிரவு ஒவ்வொரு ஹாஸ்டலிலும் புகுந்து,
தேர்வுக்கு விண்ணப்பம் செய்த Science Group
மாணவர்களை, Arts Groupல் படிக்கும் பணக்காரப்
பருப்புகள் அடித்தனர்.

ஆக அடிவாங்கியவன் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த
படித்தால்தான் வாழ்வு என்ற சிந்தனை உடைய
Science Group மாணவன்.

அடித்தவன் யார்? அடித்தவன் Arts Groupஐச் சேர்ந்த
படிப்பில் அக்கறையற்ற லிபரல் பணக்காரப் பருப்பு.

அடித்தவன், அடிபட்டவன் என்னும் இருவரில் யாரை
நாம் ஆதரிக்க வேண்டும்? இதற்கு நேர்மையுடன்
பதில் சொல்ல வேண்டும் அல்லவா? நான் தெளிவாகக்
கூறுகிறேன்: நான் அடிபட்ட Science Group மாணவர்களை
ஆதரிக்கிறேன்; அவர்கள் பக்கம் நிற்கிறேன்.                 
,
அறிவியலிலும் சரி, மார்க்சியத்திலும் சரி, காரண
காரியப் பொருத்தம் (Cause and effect) என்று ஒன்று உண்டு.
தமது Relativity theoryல் காரண காரியப் பொருத்தத்தை
உள்ளடக்கியவர் ஐன்ஸ்டின். ஆனால் அதே நேரத்தில்
quantum theoryல் காரண காரியப் பொருத்தம் அடிபட்டுப்
போகிறது (according to Copenhegan interpretation) என்பதையும்
வாசகர்கள் போகிற போக்கில் அறிந்து கொள்ள
வேண்டும். மார்க்சியத்தில்  cause and effect என்பது ஒரு
தத்துவார்த்த வகையினமாக (philosophical category)
வரையறுக்கப் பட்டுள்ளது.

ஜேஎன்யூ நிகழ்வுகளில் cause and effect எப்படிச்
செயல்பட்டு உள்ளது என்று அறிய வேண்டும்.

1) படிப்பில் நாட்டமுள்ள, செமஸ்டர் தேர்வுக்கு
விண்ணப்பித்த, நடுத்தர வர்க்க, எண்ணிக்கையில்
சிறுபான்மையான Science Group மாணவர்களை
பணக்காரப் பருப்புகள் அடித்து உதைத்தார்கள்.
இது காரணம் (cause).
         
2) வெளியில் இருந்து குண்டர்களைக் கூட்டி வந்த
பாஜக சார்பு ABVP மாணவர்கள் லிபரல் பணக்காரப்
பருப்புகளை அடித்து உதைத்தார்கள் இது காரியம் (effect).

இப்படித்தான் ஜேஎன்யூ மாணவர் தகராறில் cause and effect
செயல்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வுக்கான கவுன்டரை
உடைத்தது, சர்வரைப் பழுதாக்கியது ஆகிய
செயல்களோடு பணக்காரப் பருப்புகள் நின்றிருக்க
வேண்டும்.

ஆனால் பணக்காரக்  கொழுப்பு அப்படி நின்று விடுமா?
நிற்காது. அந்தக் கொழுப்பு ஹாஸ்டலுக்குள் புகுந்து
தேர்வெழுத விண்ணப்பித்த  Science Group மாணவர்களை
அடித்து உதைக்கச் சொன்னது. ஆனால் உப்பைத்
தின்றவன் எப்படியும் தண்ணீர் குடித்துத்தானே
ஆக வேண்டும்? கொழுப்பு வடிந்துதானே தீர வேண்டும்!

நிகர விளைவு என்ன?
---------------------------------
லிபரல் பணக்காரப் பருப்புகள் Science Group மாணவர்களை
அடித்தது முதற்கோணல்! இன்று அது முற்றும்
கோணலாகி நிற்பதைப் பார்க்கிறோம். இதன்
நிகர விளைவு என்ன?

ஜேஎன்யூவில் உள்ள இரு தரப்பில், அதாவது லிபரல்
தரப்பு, பாஜகவின் ABVP தரப்பு என்னும் இரு தரப்புகளில்
எந்தத் தரப்பையும் ஆதரிக்காத மாணவர்கள்
நிறையப் பேர் இருந்தனர். இன்று பணக்காரப்
பருப்புகளின் கொழுப்பெடுத்த தாக்குதலுக்குப்
பிறகு, இத்தகைய மாணவர்கள் பாஜகவின் ABVPஐ
ஆதரிக்கத் தலைப்பட்டு உள்ளனர். பாஜகவின் ABVPயிலும்
Arts Group மாணவர்களே அதிகம் உள்ளனர்.

மூளை இல்லாதவர்களின் எதிர்ப்பு போலி எதிர்ப்பே
ஆகும். இது இறுதியில் பாஜகவின் பாதார
விந்தங்களுக்கே சேவை செய்யும்.

இந்தக் கட்டுரையும் இதற்கு முந்திய கட்டுரையைப்
போலவே பல்கலைகள் பற்றிய ஒரு அகாடமிக் கட்டுரை.
JNU vis a vis Other varsities என்ற பொருளில் சில ஆய்வு
முடிவுகளை இக்கட்டுரையில் காணலாம்.

பல்கலைகளில் உள்ள வர்க்கப் பிளவுகள் (class divisions)
எப்படி மாணவர்களின் அன்றாட வாழ்க்கையைப்
பாதிக்கின்றன என்பதைத் துல்லியமாக விளக்கிச்
சொல்லும் கட்டுரை இது. வேறு யார் எவருமே
பல்கலைகளில் உள்ள வர்க்கப் பிளவுகள் பற்றி அலட்டிக்
கொண்டதே இல்லை. அவர்களுக்கு வர்க்கப் பார்வையே
ஒரு இழவும் கிடையாது. சாராம்சத்தில் இந்தத்
தற்குறிகள் பணக்கார வர்க்கத்தின் சேவகர்களாகவே
செயல்படுகின்றனர் என்பதை இந்தக் கட்டுரை
ஆதாரத்துடன் நிரூபிக்கிறது.

பணக்காரப் பருப்புகளின் மீது ஒரு அடி விழுந்ததுமே
துடிதுடித்துப் போகிறான் நமது குட்டி முதலாளித்துவப்
பருப்பு. இவனுடன் லும்பன் வர்க்கத்துப் பருப்பும்
சேர்ந்து கொள்கிறான்.

தென்பாண்டிச் சீமையிலே,
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவன
யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ
என்று கமலஹாசனின் குரலில் ஒப்பாரி வைக்கிறான்.

ஜேஎன்யூ பல்கலையின் ஒரு வன்முறை நிகழ்வு குறித்த
ஆய்வுக் கட்டுரை இது. இதற்கு மிகப்பெரிதும் அகடாமிக்
தன்மை உண்டு. இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு
ஒரு அருகதை வேண்டும். அந்த அருகதை எனக்கு
இருக்கிறதா என்று எவர் வேண்டுமானாலும் தட்டிக்
கேட்கலாம் என்று நான் பகிரங்கமாக அறிவிக்கிறேன்.

அதே போல இக்கட்டுரையை எதிர்மறையாக
விமர்சிப்பதற்கும் ஒரு அருகதை வேண்டும்.
எனவே எதிர்மறையாக விமர்சிப்பவர்களின்
அருகதையைத் தட்டிக் கேட்க எனக்கும் உரிமை உண்டு;
பிறருக்கும் உரிமை உண்டு.
***********************************************  
பின்குறிப்பு:
1) பல்கலைகளில் உள்ள வர்க்கப் பிளவுகளை
அங்கீகரிக்க மறுப்பவர்கள் மூடர்கள்.

2) Arts Group என்றும் Science Group என்றும் நிலவும் வேறுபாடு
மாணவர்கள் மத்தியில் நான் படித்த காலத்தில்
இருந்தே இருக்கிறது.இனிமேலும் இருக்கும்.
ஒரு பல்கலையில் படித்திருந்தால் மட்டுமே இதைப்
புரிந்து கொள்ள முடியும்.

3) HoDக்குப் பயந்தும், தேர்வு நேரத்தில் Recordsல்
bonafide சான்றிதழ் பெற துடிதுடித்தும், இன்னும்
external examinerக்குப் பயந்தும் வாழ வேண்டியவன்
Science Group மாணவன். Arts Group மாணவனுக்கு
இந்த அச்சம் எதுவும் தேவையில்லை.
********************************************************* 

இதுவரை ஜேஎன்யூவில் படிக்கின்ற
50க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் உரையாடி
இருக்கிறேன்.சில  பேராசிரியர்களிடமும்
உரையாடி இருக்கிறேன்.

60க்கும் மேற்பட்ட இது தொடர்பான ஆங்கிலக் 
கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். சில இந்தி
வீடியோக்களைப் பார்த்திருக்கிறேன். அதன் பிறகே
இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.    

     

பிரிவினைவாதிகள் என்று கூற இயலாது.
ஏக இந்தியாவாக இருப்பதையே ஜேஎன்யூவின்
மேட்டுக்குடி வர்க்க மாணவர்கள் விரும்புவார்கள்.
ஏக இந்தியச் சந்தையை அவர்கள் ஒருபோதும்
விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அதைப் பேணவே
விரும்புவார்கள்.

இதெல்லாம் மேட்டுக்குடி வர்க்கத் திமிர்.
அவர்கள் பேசுகிற so called பிரிவினைவாதம்
பின்நவீனத்துவச் செல்வாக்கிற்கு அவர்கள்
இரையாகிப் போனதால் ஏற்படுவது.

பின்நவீனத்துவத்தை சுளுக்கு எடுக்காமல்
இந்தப் பிரச்சினை தீராது.

கட்டண உயர்வு திரும்பப் பெற வேண்டும் என்ற
கோரிக்கை அனைவராலும் எழுப்பப் படுகிறது.
அதில் மாணவர்களில் யாருக்கும் கருத்து
வேறுபாடு இல்லை. அது சர்ச்சைக்குரிய விஷயம் அல்ல.
திரும்பப் பெறும் மனநிலையில் நிர்வாகம் இருப்பதாகக்
கூறப் படுகிறது.உறுதி செய்ய இயலவில்லை.
ஜேஎன்யூவின் வன்முறைக்கு இது காரணம் அல்ல.
வன்முறைக்கு எது காரணமோ அதைப்பற்றித்தான்
பேச இயலும்.

அங்கு என்ன கட்டணம் இதுவரை இருந்தது? இப்போது
எவ்வளவு உயர்த்தப் பட்டுள்ளது என்பதை நீங்கள்
தெரிவியுங்கள்.

இந்தியாவின் எந்தப் பல்கலைகளிலும் ஆண் பெண்
உடலுறவுக்கு அனுமதி இல்லை.ஜேஎன்யூவில்
அதற்குத் தடையும் இல்லை. இந்த விஷயத்தில் அது
ஐரோப்பியப் பின்நவீனத்துவப் பல்கலைகளுக்கு
நிகரானது.

தாங்கள் கூறியுள்ளது அந்தக் காலக்கட்டத்தைப்
பொறுத்து மிகவும் சரியே. நீங்கள் கூறிய
சுதந்திர சிந்தனையாளர்களைத் தொடர்ந்து 
1990களில் பின்நவீனத்துவம் மெல்லத் தலைதூக்கியது.

ரஜனி கோத்தாரி போன்ற என்ஜிஓ பிதாமகர்கள்
டெல்லியில் தங்கிச் செயல்பட ஆரம்பித்து இருந்தனர்.
என்ஜிஓக்களின் பிரியத்துக்கு உரிய தத்துவம்
மார்க்சியத்துக்கு எதிரான பின்நவீனத்துவம்.

இந்த மில்லேனியத்துக்குப் பிறகு, ஜேஎன்யூவில்
பின்நவீனத்துவம் பெரும் செல்வாக்குப் பெற்றது.
அதுவே மாணவர்களுக்கு, குறிப்பாக மேட்டுக்குடி
வர்க்கத்தினருக்கு ஆதர்சமான தத்துவமாக ஆனது.

தாங்கள் கூறிய பொற்காலம் வெறும் nostalgic memoryதான்.
 

 
பாஜகவின் கருத்து
என்னைப் பொறுத்த மட்டில் மலத்துக்குச் சமம்.
உங்களுக்கு அது சந்தனமாக இருக்கக் கூடும்.

எனக்கு என் கருத்து மட்டுமே முக்கியம். அது
மட்டுமே சரியானது. அதை நான் நிரூபித்து
இருக்கிறேன்.நான் இங்கு எழுதுவது எதுவும்
உண்மையில் என்னுடைய கருத்துக்கள்
அல்ல; அவை நிரூபிக்கப் பட்ட தேற்றங்கள்.

நான் என்ன சொல்கிறேனோ அதுதான் வேதம்!
அதுதான் பைபிள்!

பாஜக என்ன சொல்கிறது? டாக்டர் சுவாமி என்ன
சொல்கிறார்? என்று கவலைப் படுவது உங்களுக்குத்
தொழிலாக இருக்கலாம். எனக்கு அது பொருட்டல்ல.

காங்கிரசும் பாஜகவும் இந்திய ஆளும் வர்க்கத்தின்
பிரதிநிதிகள். அவை ஒரே குரலில் பேசுபவை. நிற்க.

டிசம்பர் மாதம் செமஸ்டர் தேர்வுகளுக்கு விண்ணப்பம்
செய்வது இந்தியா முழுவதும் எல்லாப் பல்கலைகளிலும்
உள்ள வழக்கமான விஷயம். அதைத் தடுக்க வேண்டிய
அவசியம் எவருக்கும் இல்லை.

சோவியத் ஒன்றியத்தில் லெனின் ஸ்டாலின் காலத்தில்
இலவசக் கல்வி வழங்கப் பட்டது. அது போன்ற
இலவசக் கல்வி இந்தியாவில் பட்டப்படிப்பு
வரையிலாவது வழங்க வேண்டும் என்பதே
என் கோரிக்கை. எனவே கட்டண உயர்வை ஜேஎன்யூ
மாணவர்களுடன் சேர்ந்து நான் எதிர்க்கிறேன்.

ஆனால் நடக்கிற போராட்டம் கட்டண உயர்வை
எதிர்த்த போராட்டம் என்று நம்பும் அளவுக்கு நான்
முழு மூடன் இல்லை.
    






 

 




        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக