வெள்ளி, 31 ஜனவரி, 2020

சபிக்கப் பட்டவர்களும் ஆசீர்வதிக்கப் பட்டவர்களும்!
பட்ஜெட் 2020 குறித்த அறிவியல் பகுப்பாய்வு!
நிர்மலா அம்மையாரிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன?
பொருளாதாரம் குறித்த RDX கட்டுரை!
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
மனிதன் தினசரி மலம் கழிக்கிறான்.
அதைப்போன்றதே ஆண்டுதோறும் பட்ஜெட்
சமர்ப்பிப்பதும்.

இதைத்தவிர வேறு விசேஷம் ஏதுவும் ஒரு
பட்ஜெட்டில் இல்லை! ஒரு பட்ஜெட்டால் இந்தியா
வாழப் போவதும் இல்லை! வீழப் போவதும் இல்லை.

ஆர் கே சண்முகம் செட்டியார், சிந்தாமணி தேஷ்முக்
ஆகியோர் சமர்ப்பித்த பட்ஜெட் பற்றியெல்லாம்
எனக்கு எதுவும் தெரியாது. அப்போது நான் சிறுவன்.
எனக்குத் தெரிந்த முதல் பட்ஜெட்
டி டி கிருஷ்ணமாச்சாரி சமர்ப்பித்ததே!

ஆக டி டி கே முதலாக, டாக்டர் மன்மோகன் சிங்,
ப சிதம்பரம் ஊடாக, இன்று நிர்மலா அம்மையார்
சமர்ப்பிக்கும் பட்ஜெட் வரை, எல்லா பட்ஜெட்டும்
மலம் கழிப்பது போன்றதே.

சிதம்பரம் பட்ஜெட் சமர்ப்பித்தார் என்பதும்
சிதம்பரம் மலம் கழித்தார் என்பதும் எல்லா
அம்சங்களிலும் சம மதிப்புடைய வாக்கியங்களே.

பத்தாம் வகுப்பு கணிதப் பாடத்தில் சர்வசம
முக்கோணங்கள் (congruent triangles) பற்றிப் படித்திருந்தால்,
படித்ததை இப்போது நினைவு கூரவும். அது போல
மேற்கூறிய இரு வாக்கியங்களும் congruent sentences.  

பட்ஜெட் குறித்த எனது சமன்பாடு இதுதான்!
ஆண்டுதோறும் பட்ஜெட் சமர்ப்பித்தல் = தினசரி மலம் கழித்தல்.

இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு இந்தியாவில்
ஒவ்வொருவரின் உச்சபட்ச அறியாமையும் சலங்கை
கட்டி ஆடும். ஊடகத் தற்குறிகள் அடி முட்டாள்களைத்
தேடிப் பிடித்துக் கூட்டி வைத்து, பொருளாதார நிபுணர்கள்
என்று ஞானஸ்நானம் கொடுத்து, அவர்களின்
அறியாமையை வெளிப்படுத்திக் காட்டுவார்கள்.

ஒரு வாரத்துக்கு எங்காவது வெளிநாடு போய்விட்டு
வரலாமா என்று யோசிக்கிறேன். கூத்தாடி ரஜனி காந்த்
ஏன் அடிக்கடி இமயமலைக்குப் போகிறார் என்பது
இப்போதுதான் புரிகிறது.

பொருளாதார நிபுணர் என்று உலகில் யாரும் கிடையாது.
உலகில் அறிவியலாளர்கள்தான் உண்டே தவிர
பொருளாதார நிபுணர்கள் என்று யாரும் கிடையாது.

இரண்டாம் வகுப்புக்கு மேல் படிக்காத, சொத்துப்
பாத்திரங்களில் தமது கையெழுத்தைத் தட்டுத்
தடுமாறிப் போடுகிற, துணைக்கண்டத்தின்
பெருந் தற்குறிகளான
1) செத்துப்போன சரவண பவன் ராஜகோபாலும்  
2) உயிருடன் இருக்கும் ராஜாத்தி அம்மாளும் மட்டுமே
உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள்!
உலகெங்கும் சொத்துக்களை வாங்கிக் குவித்து
இருக்கிறார்கள் இவ்விருவரும்!

ஆடம் ஸ்மித் காலத்தில் மேற்கூறிய இரு தற்குறிகளும்
இருந்திருந்தால், An inquiry into the nature and causes of
wealth of Nations என்ற தமது புத்தகத்தில் இவர்கள்
இருவரையும் குறிப்பிட்டு இரண்டு அத்தியாயம் எழுதி
இருப்பார் ஆடம் ஸ்மித்.

பொருளாதாரம் என்பது முற்றிலும் குத்து மதிப்பான,
பெரிதும் தோராயமான ஒரு சப்ஜெக்ட். அவ்வளவுதான்!
அதை social science என்று கூறுவதற்குக் கூட எனது
நா கூசுகிறது. ஏனெனில் அதில் சயன்ஸ் என்பது
மருந்துக்கும் இல்லை.

இயற்பியலில் கணிதத்திலும் பல்வேறு விதிகள் (rules)
சட்டங்கள் (laws) உண்டு. அவை துல்லியமானவை.
அவற்றின் துல்லியம் ஒவ்வொரு நொடியும் நிரூபிக்கப்
பட்டுக் கொண்டே இருக்கிறது. வாசகர்கள் 10,11,12
வகுப்புகளின் கணிதம் இயற்பியல் பாடப்
புத்தகங்களைப் படிக்குமாறு பணிவுடன்
வேண்டுகிறேன். குறைந்த பட்சம் சார்லஸ் விதி,
ஓமின் விதி, பாயில் விதி ஆகியவற்றைப் படியுங்கள்.
நான் சொல்வது உங்களுக்கு விளங்கத் தொடங்கும்.

ஆனால் பொருளாதார விதிகள் அப்படி அல்ல.
அவை வெறுமனே ஒரு போக்கைச் சுட்டிக் காட்டும்
தன்மை கொண்டவை. அவ்வளவே. அதற்கு மேலும்
எதுவும் இல்லை; அதற்குக் கீழும் எதுவும் இல்லை.
(Economic laws are mere hypothetical tendencies)

ஒரு பொருளாதார விதி என்பது எவ்வளவு தூரம்
சரியாக இருக்கிறதோ அவ்வளவு தூரம் தவறாகவும்
இருக்கும். ஒரு பொருளாதார விதியின் சரித்தன்மையை
p என்றும், அதன் தவறை q என்றும் எடுத்துக் கொண்டால்,
p = q. p is equal to q always. இதுதான் பொருளாதார விதிகள்
குறித்த எனது சமன்பாடு.
(இங்கு p, q are the elements of R (R = Set of real numbers).  

பட்ஜெட் என்றால் வரி விதிப்பு அல்லவா! எனவே
எதற்கெல்லாம் வரி விதிக்கப் பட்டு இருக்கிறது
என்று அறிய பட்ஜெட்டைக் கவனிப்பது
தேவையல்லவா என்கிறார் நமது குட்டி
முதலாளித்துவர்.

குட்டி முதலாளித்துவரே, GST வந்த பிறகு, வரி
விதிக்கும் அதிகாரம் எந்த நிதி அமைச்சருக்கும்
இல்லையே! அதை GST கவுன்சில் அல்லவா
எடுத்துக் கொண்டுள்ளது!

Goods ஆகவும் Service ஆகவும் இல்லாத ஒன்றின் மீது
மட்டுமே ஒரு நிதி அமைச்சரால் வரி விதிக்க
முடியும். அப்படி ஒன்றுதான் தனிநபர் வருமானம்.
முந்தைய நிதி அமைச்சரான மறைந்த அருண் ஜெட்லி
ரூ 5 லட்சம் வரை வரிச்சலுகை (முழுமையாக
இல்லாவிடினும் பகுதியளவில்) வழங்கிய பின்னால்
நிர்மலா அம்மையாரிடம் இருந்து எதிர்பார்க்க
எதுவும் இல்லை. 

பட்ஜெட் என்பது முற்றிலுமாக எதிர்மறை
அம்சங்களைக் கொண்டது என்று எவரும் புரிந்து
கொள்ள வேண்டாம். நான் ஏற்கனவே கூறியபடி,
பட்ஜெட் சமர்ப்பித்தல் என்பது மலம் கழித்தலுக்குச்
சமம். மலம் கழித்தலில் என்னவெல்லாம் நேர்மறை
அம்சங்கள் உண்டோ அதெல்லாம் பட்ஜெட்
சமர்ப்பித்தலிலும் உண்டு.

சிறந்த பட்ஜெட் என்று எதுவும் கிடையாது.
நறுமணம் மிக்க மலம் என்று எதுவும்
கிடையாதல்லவா, அதைப்போல. அதே நேரத்தில்
மோசமான பட்ஜெட் என்றும் எதுவும் கிடையாது.

இறுதிக்கும் இறுதியான பரிசீலனையில், பட்ஜெட்டினால்
ஏற்படும் ஒரு சாதக அம்சத்தைக் குறிப்பிடாமல்
இந்தக் கட்டுரையை நிறைவு செய்ய இயலாது.
அது என்ன சாதக அம்சம் என்கிறீர்களா?

தமிழர்களால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது,
கம்ப இராமாயணம், திருக்குறள், புறநானூறு போன்ற
செவ்வியல் இலக்கியங்களில் இருந்து தமிழர்கள்
மேற்கோள் காட்டுவார்கள். ப சிதம்பரத்தின்
காலம் இதில் ஒரு பொற்காலம். நிர்மலா அம்மையார்
தமது முதல் பட்ஜெட்டில் "காய்நெல் அறுத்துக் கவளம்
கொளினே" என்ற பிசிராந்தையாரின் பாடலை
மேற்கோள் காட்டினார். இந்த ஆண்டு எந்த இலக்கிய
மேற்கோளைக் காட்டப் போகிறார் என்று ஆவலுடன்
காத்திருக்கிறேன். இதுதான் பட்ஜெட்டின் ஒரே
சாதக அம்சம்.

இறுதியாக ஒன்று. இந்தக் கட்டுரையைப் படித்துப்
புரிந்து விரும்பி ரசிக்கும் ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்
பட்டவர்கள்.என்னுடைய கட்டுரையில் எப்போதுமே
ஏகப்பட்ட textual pleasure இருக்கும். எனினும்
இதையெல்லாம் ரசிக்க திறந்த மனதும் உரிய IQவும்
(IQ > or = 110) வேண்டும்.
இக்கட்டுரையை விரும்பாதவர்கள் சபிக்கப்
பட்டவர்களாக மட்டுமே இருக்க முடியும்.
**************************************************
  

 

   
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக