திங்கள், 20 ஜனவரி, 2020

ஹைட்கார்பன் குறித்த நிலைபாடு!
-----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
பூமி சூடேறிக் கொண்டே இருக்கிறது. இது
புவி வெப்பமாதல் (Global warming) என்று அழைக்கப்
படுகிறது. இதைத் தடுத்து நிறுத்துவதில் உலக
நாடுகள் மெய்யான அக்கறையுடன் ஒருங்கிணைந்து
செயல்பட்டு வருகின்றன. இம்முயற்சியில்
இந்தியாவின் பங்கு பெருஞ்சிறப்புக்கு உரியது.

பெட்ரோல் டீசல் மீத்தேன் ஆகியவை
ஹைட்ரோ கார்பன் என்ற பொதுப்பெயரில் அழைக்கப்
படுகின்றன. ஹைடிரோகார்பன் எரிபொருளைக்
குறைப்பதில் இந்தியா சிறப்பிடம் வகிக்கிறது.

பெட்ரோல் டீசலை எரிபொருளாகக் கொண்ட
வாகனங்களைமுற்றிலுமாகத் தடை செய்ய
நிதி ஆயோக் தீர்மானித்துள்ளது என்பது அனைவரும்
அறிந்ததே. இது பெரிதும் வரவேற்புக்கு உரியது.

அதே நேரத்தில் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு
முரணாக, மீத்தன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன்
படிவுகளைக் கண்டறிதல், தோண்டி எடுத்தல்
ஆகிய செயல்களையும் இந்திய அரசு செய்து வருகிறது.
இது தேவையற்றது.

ஒருபுறம் ஹைட்ரோ கார்பனை எரிபொருளாகப்
பயன்படுத்தும் வாகனங்களை ஒழித்துக் கட்டுவது.
மறுபுறம் ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத்
தோண்டுவது. ஏன் இந்த முரண்பாடு?

எப்படியும் ஹைட்ரோ கார்பன் இல்லாத உலகம்தான்
எதிர்கால உலகம்! எதிர்கால இந்தியாவும் அப்படியே!
இந்நிலையில் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன்
கிணறு தோண்டும் திட்டங்கள் எதற்கு? அதற்காக
விதிமுறைகளைத் தளர்த்தும் சட்டங்கள் எதற்கு?
தர்க்கப் பொருத்தமற்ற இந்த நிலையில் இருந்து
இந்திய அரசு தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மாற்று எரிசக்தி
இவற்றுக்கான திட்டங்களையே இந்திய அரசு
முன்னெடுக்க வேண்டும். விளைநிலங்களில்
கிடைக்கும் ஹைட்ரோ கார்பநடித்த தோண்டி எடுக்கும்
திட்டங்களை இந்திய அரசு கைவிட வேண்டும்.
இதற்கான தேசிய புதிய எரிசக்திக் கொள்கையை
உருவாக்க வேண்டும்.

இதுவே ஹைட்ரோ கார்பன் குறித்த நியூட்டன்
அறிவியல் மன்றத்தின் நிலைபாடு ஆகும்.
************************************************



how it will be helpful to the laouring class to attempt to lead the revolution?
in that process will this help?
         


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக