வெள்ளி, 3 ஜனவரி, 2020

சமூகத்தின் பொதுவெளியில் இயக்கம் நடத்துவதும்
முகநூலில் புரட்சி நடத்தும் குட்டி முதலாளித்துவமும்!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------
டிசம்பர் மாதத்தில் (2019) அறிவியல் வேலைகள்
அதிகம் இருந்தன. டிசம்பர் 22 தேசியக் கணித நாள்.
அதாவது ராமானுஜன் பிறந்த நாள். டிசம்பர் 25 நியூட்டன்
பிறந்த நாள். இவற்றோடு டிசம்பர் 26 சூரிய கிரகணமும்
சேர்ந்து கொண்டது.

சூரிய கிரகண விளக்க நிகழ்ச்சிகளை பரவலாக
நடத்திய அமைப்புகள் தமிழ்நாட்டிலேயே நான்குதான்.
1) தமிழக அரசின் அறிவியல் தொழில்நுட்ப மையம்
2) Breakthrough Science Society
3) தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (CPM ஆதரவு அமைப்பு) 
4) நியூட்டன் அறிவியல் மன்றம்.

கிரகணத்தை ஒட்டி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள்
என்று பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோரை நியூட்டன்
அறிவியல் மன்றம் சந்தித்தது. கிரகண விளக்க உரைகளும்
கருவிகளின் துணையுடன் செயல்முறை விளக்கமும்
மேற்கொள்ளப் பட்டன.

சென்னை, செங்கை, காஞ்சிபுரம், திருவள்ளூர்
மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளில் அறிவியல்
நிகழ்ச்சிகளை நடத்தினோம். சில கல்லூரிகளிலும்
நடத்தினோம்..

இவ்வாறு டிசம்பரின் மூன்றாம் நான்காம் வாரங்கள்
கடும் அலைச்சல், உழைப்பு இறுதியில் பயனுறு நிறைவு
என்பதாக அமைந்தன.

இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் குடிமக்களின்
உரிமைகளோடு கடமைகளையும் வரையறுத்துள்ளது.
இந்த சமூகத்தில் அறிவியல் மனப்பான்மையை
ஏற்படுத்துவது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை
என்கிறது அரசமைப்புச் சட்டத்தின் ஷரத்து 51 A(h).

குப்பன் சுப்பன் ராமசாமி செல்வராஜ் துலுக்காணம்
போன்ற பாமரர்களுக்கும்கூட இந்தக் கடமை உண்டு
என்கிறார் டாக்டர் அம்பேத்கார்.

பொருள்முதல்வாதம் என்பது முற்றிலும் அறிவியல்மயமான
ஒரு தத்துவம். மார்க்சியத்தின் பிரிக்க முடியாத கூறு இது.
அறிவியலைக் கற்காமலோ அறிவியலைப் பரப்பாமலோ
இருப்பது பொருள்முதல்வாதத்துக்கு எதிரானது;
பிற்போக்குத் தனமானது.

டேய் குப்பா சுப்பா, அறிவியலைப் பரப்புங்கடா என்கிறார்
டாக்டர் அம்பேத்கார்!
தொழிலாளர்களே, அறிவியலின் துணை இல்லாமல்
பிற்போக்குக் கருத்தியலை வெல்ல முடியாது என்கிறார் மார்க்ஸ்!

ஆனால் நமது முகநூல் இடதுசாரிகள் எருமை  மாட்டின் மீது
மழை பெய்தது போல இருக்கிறார்கள். ஆம், முகநூல்
இடதுசாரிகள் என்று தனித்துவமான ஒரு கோஷ்டி
இருக்கிறது. இவர்களை சுயஇன்ப இடதுசாரிகள் என்றும்
அழைக்கலாம். அப்படித்தான் அழைக்க வேண்டும்.

சமூகத்தின் பொதுவெளியில் இவர்களை யாருக்கும்
தெரியாது. இவர்கள் ஒருபோதும் சமூகத்தின்
பொதுவெளியில் இயங்குகிறவர்கள் அல்லர். உலகின்
சகல பிரச்சினைகளுக்கும் இவர்களிடம் தீர்வு உண்டு.
அதாவது சுயஇன்பத் தீர்வு. சுயஇன்பம் அனுபவித்துத்  
 தீர்க்க முடியாத பிரச்சினை என்று இந்த உலகில்
எதுவும் உண்டா என்று ஆவேசம் அடைகிறார் நமது
சுயஇன்ப இடதுசாரி!

குவான்டம் தியரி பற்றித் தெரியாமல் இருக்கலாம்;
தவறே இல்லை! ஆனால் பூமி சூரியன் சந்திரன் பற்றிய
அறிவு வேண்டும் அல்லவா?

சூரிய கிரகணத்தை முன்னிட்டு அறிவியலைப் பரப்பும்
கடமை நமது குட்டி முதலாளித்துவ முகநூல் ஆசாமிகளுக்கு
இல்லையா?

இவர்கள் ஊரிலோ அல்லது வசிக்கும் பகுதியிலோ இந்தக்
குட்டி முதலாளித்துவ முகநூல் புரட்சியாளர்களால்
சூரிய கிரகணத்தை விளக்கி ஒரு கூட்டம் போட
முடியாதா?

இதற்கு என்ன செலவாகும்? பள்ளிக் குழந்தைகளை
அழைத்துக் கூட்டம் போட்டால், அவர்களுக்கு பிஸ்கட்
சாக்லேட் கொடுக்க வேண்டும். அதற்கு ஒரு நூறு ரூபாய்
செலவாகும். இதைத்தவிர வேறு என்ன செலவு உள்ளது?

ஐயா எங்களுக்கு அறிவியல் விளக்கம் அளிக்கம் அளிக்கத்
தெரியாது என்று முகநூல் கு.மு ஆசாமிகள் கூறலாம்.
உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்; அது ஒரு
குறை அல்ல. உங்கள் ஊரில் உள்ள பள்ளியில் ஒரு
பட்டதாரி அறிவியல் ஆசிரியர் இருப்பார் அல்லவா?
அவர் விளக்கம் தருவார். அவரை அழைத்துக் கூட்டம்
நடத்துங்கள். இதைச் செய்ய உங்களுக்கு என்ன தயக்கம்?

அறிவியலைப் பரப்பாமல் எப்படி ஐயா பொருள்முதல்வாதம்
பற்றியெல்லாம் உளறுகிறீர்கள்?  அறிவியல் விளக்கக்
கூட்டம் நடத்தினால் உங்கள் கையில் புறப்பாடு வந்து
விடுமா?

சரி போகட்டும், நீங்கள் கூட்டம் நடத்த வேண்டாம்.
சமூகத்தின் பொதுவெளியில் எங்களால் இயங்க முடியாது;
நாங்கள் வெறும் முகநூல் சுயஇன்பவாதிகள் என்று நீங்கள்
கூறலாம். அது நியாயமே!

அறிவியல் அமைப்புகள் நடத்திய கூட்டங்களில்
பங்கு கொண்டீர்களா? அந்தக் கூட்டங்களை
ஆதரித்தீர்களா? வரவேற்றீர்களா? இல்லை.
கேலியும் கிண்டலும் பேசிக் கொண்டிருந்தீர்கள்!
உலகத்தின் கடைசி மனிதன் திருந்திய பிறகும்கூட
நீங்கள் திருந்த மாட்டீர்கள்! உங்களை எல்லாம்
நிலக்குப் பொறை (பூமிக்குப் பாரம்) என்கிறார் வள்ளுவர்.
***************************************************     

 

மருதுபாண்டியன்
 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக