ஞாயிறு, 5 ஜனவரி, 2020

பணியாளர் தேர்வில் பெரும் முறைகேடு (TNPSC Group IV)!
ராமநாதபுரம் கீழக்கரை தேர்வு மையங்களில் முறைகேடு!
CBI விசாரணை தேவை!
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
அண்மையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
Group IV தேர்வை நடத்தியது. 3000 மையங்களில் சில லட்சம்
பேர் தேர்வு எழுதினார். அதன் முடிவுகள் வெளிவந்து
விட்டன.

1) கீழக்கரை
2) ராமநாதபுரம்
என்னும் இரண்டு குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தேர்வு
எழுதியவர்கள் முதல் 100 இடங்களைப் பெற்றுள்ளனர்.
According to theory of probability இதற்கான நிகழ்தகவு
கிட்டத்தட்ட பூஜ்யம் என்றே கூறலாம்.

வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் இவ்விரு தேர்வு
மையங்களில் தேர்வு எழுதி உள்ளனர். தேர்வின்போது
மீதியிருந்த OMR Sheetஐ சட்டத்துக்குப் புறம்பாக,
பெண் தாசில்தார் மீனலோசனி வீட்டுக்கு எடுத்துச்
சென்றுள்ளார்.

ஏற்கனவே 2017ல் இவ்விரு தேர்வு மையங்களில் Group II
தேர்வு எழுதிய பலரும் முதல் 50 ரேங்க் பெற்றுள்ளனர்.
இவர்கள் தற்போது பணியமர்த்தப் பட்டுள்ளனர்.

ஆகா, கீழக்கரை ராமநாதபுரம் மையங்களில்
முறைகேடு தொடர்ச்சியாக நடப்பது தெரிய வந்துள்ளது.

இரவு பகலாகப் படித்து, படிப்பை மட்டுமே மூலதனமாகக்
கொண்ட தேர்வர்கள் பாதிக்கப் படாமல், குற்றம் புரிந்த
கயவர்கள் கண்டறியப்பட்டு .தண்டிக்கப்பட வேண்டும்.

எனவே இந்த விஷயத்தில் CBI விசாரணை வேண்டும் என்று
நியூட்டன் அறிவியல் மன்றம் கோருகிறது.
*******************************************************
CBI விசாரணை வேண்டும் என்பதுதான் நாங்கள்
முன் வைக்கும் கோரிக்கை. முறைகேடுகள்
நடந்திருப்பதற்கான prima facie இருக்கிறது என்பதே
எமது பார்வை. அதற்குள் dont jump to conclusions.

இது என்னுடைய கருத்து மட்டுமல்ல; TNPSC தேர்வுக்கு
மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் INSTITUTEகளின்
நிர்வாகிகள் அனைவரின் கருத்தும் ஆகும்.

எனது கருத்துக்கான அறிவியல் அடிப்படை இதுதான்/
According to theory of probability இது சாத்தியமில்லை என்று
கணக்குப் போட்டுப் பார்த்து திருப்தி அடைந்து நான்
கூறுகிறேன். பொய்யாக அவதூறுகளை நான் எழுதினால்
TNPSC நிர்வாகம் என்மீது libel suit போட்டு விடும் என்று
நான் அறிவேன்.

அபத்தமாகவும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ
என்ற ரீதியில் எழுதுவதும் உங்களைப் போன்ற
பொறுப்பற்றவர்களுக்கு வாடிக்கை. நான் அப்படி
எழுத இயலாது. இந்தப் பதிவு அகடாமிக் பதிவு ஆகும்.
கணக்கற்ற தேர்வர்களும் பயிற்சி நிலைய ஆசிரியர்களும்
நிர்வாகிகளும் இதைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு அகாடமிக் பதிவில் வந்து தங்களின் அபத்தத்தை
வெளியிடுகிறார்கள். என்ன செய்வது?

குற்றவாளிகளுக்குப் பரிந்து கொண்டு வருவது சரியா?
குறித்து
    
     


மாசம் ரூ 1 லட்சம் சம்பளமும், மாதம் ரூ 2 லட்சம் அளவுக்கு
PERKSம் இலவச விமானப் பயணமும், இலவசத் தொலைபேசி
வசதிகளும் இன்னமும் கணக்கற்ற வசதிகளை மக்கள்
வரிப்பணத்தில் அனுபவிக்கும் 39 முண்டங்களில் எந்த ஒரு
முண்டமும் குரல் கொடுக்கவில்லை என்றால், அது
கயமையே. நான் என் பென்சன் பணத்தில் குரல்
கொடுக்க வேண்டும்; 39  முண்டமும் ஜல்சா பண்ணிக்
கொண்டு இருப்பானா? 

வ்ருஷக் கணக்கில் படித்து, பயிற்சி நிலையத்துக்கு
பணம் கட்டி, SINCEREகத் தேர்வு எழுதி, ரிசல்ட்
வந்தபோது தன்னுடைய நம்பர் தேர்ச்சி பெற்றோரின்
பட்டியலில் இல்லை என்னும்போது ஒரு இளைஞன்
ஆத்திரம் அடைவான். அவனுடைய மனநிலையைப்
பிரதிபலிப்பது என்னுடைய கடமை.
    
வாழ்க்கையில் என்றாவது ஒரு போட்டித் தேர்வு எழுதி
இருந்தால், அதன் வலி உங்களுக்குத் தெரியும்.


   


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக