சனி, 25 ஜனவரி, 2020

செங்கோட்டையனாருக்கு ஒரு வேண்டுகோள்!
-----------------------------------------------------------------------
1) தேர்வு வைப்பதாக இருந்தால் தமிழ்,
கணிதம் என்று தனித்தனியாகத் தேர்வு
வைக்கக் கூடாது.

2) வாய் மொழித் தேர்வு = 50 மதிப்பெண்
எழுத்துத் தேர்வு = 50 மதிப்பெண்
என்பதாகத் தேர்வு இருக்க வேண்டும்.

3) கேள்விகள் பின்வருமாறு அமைதல் வேண்டும்:

அ) மகாத்மா காந்தி, பாரதியார், வ உ சி ஆகியோரின்
படங்களைக் கொடுத்து அவர்களின் பெயர் என்ன
என்று கேட்க வேண்டும்.

ஆ) நாற்காலி, கடிகாரம், புத்தகம் ஆகிய படங்களைக்
கொடுத்து அவற்றின் பெயரை எழுதச் சொல்ல வேண்டும்.

இ) சிங்கம், புலி, குதிரை, பூனை ஆகியவற்றின்
படத்தைக் கொடுத்து அவற்றின் பெயர் எழுதச்
சொல்ல வேண்டும்.

ஈ) 1 முதல் 10 வரை எண்களை வரிசையாக
எழுதச்  சொல்ல வேண்டும்.

உ) தாய், தந்தை பெயரை எழுதச் சொல்ல வேண்டும்.

ஊ) தான் வசிக்கும் ஊரின் பெயரை, வட்டத்தின்
பெயரை, மாவட்டத்தின் பெயரை எழுதச் சொல்ல வேண்டும்.

எ) வட்டம், சதுரம், முக்கோணம் ஆகியவற்றை
வரைந்து காட்டச் சொல்ல வேண்டும்.

ஏ) வெவ்வேறு நேரம் காட்டும் கடிகாரங்களின்
படத்தைப் பார்த்து, நேரம் என்ன என்று கேட்க
வேண்டும்.

ஐ)  eemach sandangu

 
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக