வியாழன், 9 ஜனவரி, 2020

அறிவியல் மாநாட்டிலேயே அறிவியலுக்கு
எதிராகப் பேசப்படும் பிற்போக்குக் கருத்துக்கள்!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
ஹெய்சன் பெர்க் (Dr Werner Heisenberg) என்ற ஜெர்மன் 
இயற்பியலாளரின் உறுதியின்மைக் கோட்பாடு
(uncertainty principle) இந்தியாவின் வேதங்களிலேயே
இருப்பதாகக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார் அமைச்சர்
ராஜ்நாத் சிங். (2014ல் டில்லியில் இந்தி விழாவில்
(Hindi Diwas) பேசியது)

அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதை எளிதாகக்கடந்து செல்ல 
இயலாது. ஏனெனில் ராஜ்நாத்சிங் இயற்பியலில் M.Sc படித்தவர்;
இயற்பியல் பேராசிரியராக இருந்தவர். ஹெய்சன் பெர்க்கின்
உறுதியின்மைக் கோட்பாட்டுக்கும் வேதங்களுக்கும் என்ன
சம்பந்தம்? எப்படி அவர் இரண்டுக்கும் முடிச்சுப் போடுகிறார்?
தமது கூற்றுக்கு ஆதாரமாக இயற்பியல் அறிஞர்
பிரிஜாப் காப்ரா (FRITJOF CAPRA) 1975ல் எழுதிய
Tao of physics என்ற நூலை ராஜ்நாத்சிங் குறிப்பிட்டார்.
( Tao of physics = இயற்பியலின் பாதை).

ராஜ்நாத்சிங் தமது பேச்சின் ஊடே அறிவியல் அறிஞர் 
ஹெய்சன் பெர்க்கின் பெயரைக் குறிப்பிட்டார்.
ஹெய்சன் பெர்க் என்ற பெயரையே தமது வாழ்நாளில் அதுவரை 
கேள்விப் பட்டிராத புதுடில்லி ஆங்கில ஊடகத் தற்குறிகள் 
அமெரிக்க ஜனாதிபதி ஐசனோவரைத்தான் அமைச்சர்
குறிப்பிடுகிறார் என்று தவறாகப் புரிந்து கொண்டு,
ஐசனோவரின் உறுதியின்மைக் கோட்பாடு
(Eisenhower's uncertainty principle) என்று எழுதி விட்டனர்.
ஊடகவியலாளர்களின் அறிவியல் அறிவு அந்த
லட்சணத்தில் இருந்தது.

மறுநாள் செய்தித்தாட்களில் வெளிவந்த செய்தியைப்
படித்து  அதிர்ச்சி அடைந்த ராஜ்நாத் சிங், ஊடகத் தற்குறிகள்
அனைவரையும் வரவழைத்து, ஐசனோவர் அல்ல
ஹெய்சென்பெர்க்  என்று விளக்கிக்கூறி, ஊடகத்
தற்குறிகளைச் செருப்பால் அடித்து விரட்டினார்.    

பிரிஜாப் காப்ராவின் கருத்துக்களுக்கு ஸ்டீபன் ஹாக்கிங் 
மறுப்புத் தெரிவித்து உள்ளார் என்பதை அறிவியல் உலகம் அறியும். 
அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்களின் கூற்றான 
வேதங்களில் ஏற்கனவே உறுதியின்மைக் கோட்பாடு இருந்தது 
என்பதை  ஏற்கவே முடியாது. எனினும் மக்கள் மத்தியில் இந்த 
உண்மையை எடுத்துச் சொல்லி ராஜ்நாத் சிங்கின் கூற்று
தவறானது என்பதை நிரூபிக்க இயலவில்லை. ஏனெனில் 
பொதுச் சமூகத்தில் யார் எவருக்கும் ஹெய்சன் பெர்க்
பற்றியோ அவரின் கோட்பாடு பற்றியோ தெரியாது.  

 இருப்பினும், 2014ல் சென்னையில் நடந்த ஒரு
கூட்டத்தில், திரளான ஊடகவியலாளர்கள் பங்கேற்ற
ஒரு கூட்டத்தில், ராஜ்நாத்சிங் கூறியது தவறு
என்று நியூட்டன் அறிவியல் மன்றம் மெய்ப்பித்தது.
அக்கூட்டத்தில் பங்கேற்ற திக தலைவர் ஆசிரியர் வீரமணி
அவர்கள் இதுகுறித்து என்னிடம் மேலும் கேட்டறிந்தார். 
ஆசிரியர் அவர்களுக்கு விளக்கிக் கூறினேன்.

எனினும் என்னுடைய பேச்சு
அக்கூட்டத்தில் பங்கேற்ற ஊடகவியலாளர்களிடம்
எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில்
ஊடகவியலாளர்களில் 99.999999999999999 சதம் 
scientifically illiterate ஆசாமிகள். 

2014ல் நடந்த 102ஆவதுமாநாடு (மும்பை மாநாடு)
முதல் அண்மையில் ஜலந்தரில் நடந்து முடிந்த
106ஆவது மாநாடு வரை, அறிவியல் மாநாடுகளில்
அறிவியலையே கேலிக்கூத்தாக்கி வரும்
போக்கு accelerate ஆகிக்கொண்டு இருக்கிறது.

இந்தியாவில் வேத காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி
இருந்ததா? இருந்தது என்பதே உண்மை. சுஸ்ருதர் என்னும் 
மாபெரும் இந்திய மருத்துவரே பிளாஸ்டிக் சர்ஜரியின் 
தந்தை. உலகிற்கே பிளாஸ்டிக் சர்ஜரியைக் கற்றுக் கொடுத்தது
இந்தியாவே. ஆனால் மனிதத் தலைக்குப் பதில்
யானைத் தலையைப் பொருத்தியது இந்தியா
என்பதில் உண்மை இல்லை.

MSc Physicsல் உள்ள பாடமான uncertainty principleஐ முகநூலில் 
எழுதி வாசகர்களை மருட்சி அடையச் செய்கிறார் என்று 
குட்டி முதலாளித்துவத் தற்குறிகள் கருதலாம். இது 
உண்மை அல்ல.

12ஆம் வகுப்பு Chemistry  பாடப் புத்தகத்தில் Uncertainty principle
பாடமாக உள்ளது. அதுவும் State Board புத்தகத்தில். அரசுப் 
பள்ளி மாணவர்கள் இதைப்  படிக்கிறார்கள். Uncertainty 
principleல் sum உள்ளது. எனவே நான் எழுதியதில் எந்த 
M.Sc portionம் இல்லை. 12ஆம் வகுப்பைத் தாண்டிய அறிவியல் 
விஷயங்களை நான் முகநூலில் ஒருபோதும் எழுதுவதில்லை.

மூளை உள்ளவர்களுக்கு இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும்.
Physics பாடமான uncertainty principle ஏன் Chemistry பாடத்தில் 
இடம் பெற்றுள்ளது? ஆனால் physics பாடத்தில் இல்லையே, ஏன்?
ஏனெனில் இந்தியா முழுவதும் CBSE உள்ளிட்ட எந்தப் பாடத் 
திட்டத்திலும் 12ஆம் வகுப்பில் Quantum physics பாடம் கிடையாது/
Uncertainty principle என்னும் பாடம் Quantum physicsல் வருவது.
ஆனால் Chemistryல் அது application என்ற அளவில் மட்டும் வருகிறது.   

மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய குடும்பத்துப்
பிள்ளைகள் uncertainty principleஐயும் படிக்கிறார்கள். இதெல்லாம் 
வேதத்திலேயே இருக்கிறது என்று சொல்லும் ராஜ்நாத் சிங்கின் 
பேச்சையும் தினத்தந்தியில் படிக்கிறார்கள். வேதத்தில் 
எல்லாம் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்து சேருகிறார்கள்.

இதுதான் பாசிசத்தின் தொடக்கம்! இதுதான் பாசிசத்தின் 
ஊற்றுமூலம். ஆனால் முகநூலில் உள்ள சுயஇன்ப இடதுசாரிப் 
புழுக்கள் ராஜ்நாத் சிங்கின் கருத்தை ஒருபோதும் 
எதிர்க்கவில்லை.  

Fake idயில் ஒளிந்து கொண்டு வீராவேசம் பேசும் 
கோழைகளான இந்த சுயஇன்ப இடதுசாரிப் புழுக்கள் 
என்றாவது ராஜ்நாத் சிங்கின் பாசிசக் கருத்தை எதிர்த்து 
இருக்கிறானா? ஒருநாளும் எதிர்த்ததில்லை.
****************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக