திங்கள், 27 ஜனவரி, 2020


இடதுசாரி மைனர்கள்!
----------------------------------
1940களில், 50களில் கிராமங்களில் மைனர்கள்
இருப்பார்கள். மன்னார் என்றால் இளவயதுப்
பண்ணையார் என்று பொருள்.

ஊரே பற்றி எரிந்தாலும் இந்த மைனர்கள்
கவலைப்பட மாட்டார்கள். வில்வண்டி கட்டிக்
கொண்டு, பக்கத்து டவுனுக்கு சினிமா பார்க்கச்
செல்வார்கள்.

இந்த மைனர்களைப் போன்றவர்களே நம்மூர்
போலி இடதுசாரிகள். இவர்களை இடதுசாரி
மைனர்கள் என்று அழைப்பது சாலப் பொருத்தம்.

TNPSCயில் முன்பே நடந்த Group I ஊழல், பாலி டெக்னிக்
ஆசிரியர் நியமன ஊழல், சீருடைப் பணியாளர்
தேர்வில் ஊழல், தற்போது TNPSC Group IV ஊழல்
என்று ஒட்டு மொத்தக் கல்வித்துறையை ஊழலில்
கொடிகட்டிப் பறக்கிறது.

ஆனாலும் நமது போலி இடதுசாரி மைனர்கள் இந்த
ஊழலைக் கண்டு கொள்ளாமல் இருப்பதன் மூலம்
இந்த ஊழலை ஆதரிக்கிறார்கள்.

பாம்பையும் இடதுசாரி மைனரையும் கண்டால்
பாம்பை விட்டு விடு; இடதுசாரி மைனரை அடி!
-------------------------------------------------------------------        

என்ன ஊழல் நடந்தால் என்ன, எனக்கு சினிமா
பார்ப்பதும் விமர்சனம் எழுதுவதுமே முக்கியம்
என்கிறார்கள் வினவு கீற்று இணையதள ஆசாமிகள்.

===========================================
.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக