வெள்ளி, 31 ஜனவரி, 2020

அனல் மின் நிலையங்கள் சுற்றுச் சூழலை, சுவாசிக்கும்
காற்றை நச்சுப் படுத்துகின்றன. அவை மூடப்பட
வேண்டும்.

அணுமின் நிலையங்கள் சூழலை மாசு படுத்துவதில்லை.
எனினும் அவை எந்நேரமும் வெடித்து விடும் என்று
மக்கள் அச்சம் கொள்கிறார்கள்.

ஆக, சூரிய மின்சக்தி ஒரு மாற்று எரிசக்தியாக
இன்று மத்திய மாநில அரசுகளால் முன்வைக்கப்
படுகிறது. இதை வரவேற்பது நம் கடமை ஆகும்.

அண்மையில் கோவையில் சூரிய ஒளி மின்சாரம்
தயாரிக்கும் ஒரு திட்டத்தை தமிழக அரசு
தொடங்கி வைத்தது. இதை வரவேற்பது நம் கடமை.

ஆனால், கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த
ஜாகீர் உசைன் என்பவர் முகநூலில் சூரிய மின்சக்தி
குறித்து பொய்யான செய்திகளை எழுதி இருந்தார்.

சூரிய மின்சக்தியால் சிறுநீரகம் செயலிழக்கும்
என்றும் தோல் நோய்கள் வரும் என்றும் மிக
மோசமான பொய்யர்களை எழுதி இருந்தார்.
அவர் மீது கோவை மாநகரட்டாசி வழக்குத்
தொடர்ந்தது.

வழக்கு விசாரணையின்போது, அறிவியலுக்கு எதிராக
பொய்களைப் பரப்பிய ஜாகீர் உசேனின் கல்வித்
தகுதி என்ன என்றும் அவர் என்ன படித்திருக்கிறார்
என்றும் நீதியரசர் கேள்வி எழுப்பினார்.

புழுவினும் இழிந்த ஜாகீர் உசைன் ஒரு தற்குறி என்றும்
SSLC பெயிலானவர் என்றும் தெரிய வந்தது.

ஜாகிர் உசைன் மட்டுமல்ல, கணக்கற்ற கல்வியறிவற்ற
தற்குறிகள் முகநூலில் அறிவியலுக்கு எதிரான
கருத்துக்களை  வைரஸ்களைப் போல் பரப்பி
வருகிறார்கள். இவர்கள் அனைவரையும் தண்டிக்க
வேண்டியது தமிழ்ச் சமூகத்தின் கடமை ஆகும்.
--------------------------------------------------------------

BSNL விருப்ப ஓய்வும்
தனியார் நிறுவனக் கைக்கூலிகளாகச் செயல்படும்
ஊடகத் தற்குறிகளுக்கான எச்சரிக்கையும்!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
இன்று (ஜனவரி 31, 2020) BSNL நிறுவனத்தில் அறிமுகப்
படுத்தப்பட்ட ஒரு தங்கக் கைகுலுக்கல் திட்டத்தின்
மூலம் (Golden hand shake VRS) மூலம் 78,000 பேர்
விருப்ப ஒய்வு பெறுகிறார்கள். இது பல்லாயிரம் கோடி
ரூபாய் செலவில் BSNLஐ புத்தாக்கம் செய்யும்
திட்டத்தின் ஒரு பகுதி. (BSNL Revival plan). இதை
BSNLன் வலிமையான  தொழிற்சங்கங்களும்
ஊழியர்களும் முழுமனதுடன் ஏற்றுக் கொண்டனர்.

இது குறித்து முகநூல் வாசகர்களுக்காக
நியூட்டன் அறிவியல் மன்றம் ஐந்தாறு
கட்டுரைகளை எழுதி உள்ளது. எமது கருத்துக்களை
உள்ளடக்கி வட இந்திய ஆங்கில ஏடொன்று கட்டுரையும்    
வெளியிட்டுள்ளது.

எனவே BSNL அழிகிறது என்றெல்லாம் எந்தத் தற்குறியும்
பொய்களைப் பரப்பக்கூடாது என்று நியூட்டன் அறிவியல்
மன்றம் எச்சரிக்கை செய்கிறது. உங்களால் மட்டுமல்ல
உங்கள் அப்பனாலும் சரி, எந்தக் கொம்பாதி
கொம்பனாலும் BSNLஐ அழிக்க முடியாது.

ஜவஹர்லால் நேருவும் இந்திரா காந்தியுமே இன்றைய
BSNL மற்றும் அன்றைய தொலைதொடர்பு
தொழிற்சங்கங்களிடம் மண்டியிட்டது வரலாறு.

அன்றைய தொலைதொடர்பு தொழிற்சங்கத்தின்
(NFPTE) சங்கப் பத்திரிக்கை நாடு முழுவதும் உள்ள
கிளைச் செயலாளர்களுக்கு தபால் மூலம்
அனுப்பி வைக்கப்படும். இந்தப் பத்திரிகையை
பட்டுவாடா செய்யக் கூடாது என்றும் தீ வைத்துக்
கொளுத்த வேண்டும் என்றும் சஞ்சய் காந்தி
உத்தரவு போட்டான்.

கடைசியில் சஞ்சய் காந்திதான் புழுத்துச் செத்தானே
தவிர, ஆனானப்பட்ட இந்திரா காந்தியால் கூட
எங்களின் தொழிற்சங்கத்தை ஒடுக்க முடியவில்லை.

எனவே BSNL அழிகிறது என்றெல்லாம் எந்த நாயும்
நாடி சோதிடம் சொல்ல வேண்டாம் என்று
எச்சரிக்கிறோம். குறிப்பாக ஊடகத் தற்குறிகள்
இது போன்ற பொய்களைப் பரப்பினால், அவர்கள்
தனியார் நிறுவனங்களின் கைக்கூலிகள் என்பது
நிரூபிக்கப் படும்.
எனவே BSNL குறித்த எதிர்மறையான செய்திகளை
கற்பனை செய்து பரப்ப வேண்டாம் என்று மீண்டும்
ஊடகத் தற்குறிகளைக் கடுமையாக எச்சரிக்கிறோம்.

BSNLல் இரண்டு மாதமாக சம்பளம்
கொடுக்கவில்லையாமே என்றெல்லாம் நீ கவலைப்
பட வேண்டாம். இதெல்லாம்  எங்கள் உள்விவகாரம்.
உன் மரமண்டையில் ஏறாது.

உன் பெண்டாட்டி அடுத்த வீட்டுக்காரனோடு
ஓடிப் போய்விடாமல் தற்காத்துக் கொள். இதுதான்
நீ கவலைப்பட வேண்டிய விஷயமே தவிர, BSNLல்
சம்பளம் தரவில்லை என்பதெல்லாம் உனக்கு ஏன்?
பந்தியில் சேர்ந்த எச்சில் இலையை எடுத்துப்
போடுவதோடு நிறுத்திக் கொள். எச்சில் இலையை
எண்ணுவது உன் வேலை அல்ல ஊடக மூடனே.

வாசக அன்பர்கள் இக்கட்டுரையைப் படித்து விட்டு
புருவத்தை நெரிக்கலாம். 360 டிகிரியில் இருந்தும்
தனியார் நிறுவனங்களின் கைக்கூலிகள் BSNL
குறித்து பொய்ப்பிரச்சாரம் செய்வதும், அதை
அநேகமாக எல்லா ஊடகத் தற்குறிகளும் பரப்பவும்
செய்கிறபோது அஹிம்சையை எங்களுக்கு
யாரும் உபதேசிக்க வேண்டாம். BSNLஐக் காப்பதும்
அதன் மாண்பை நிலைநிறுத்துவதும் எங்களின்
கடமை. இதில் யார் எவரும் குறுக்கே வர முடியாது.
குறுக்கே வந்தால் வெட்டுவோம்.

உழைத்துச் சாப்பிடுகிறவர்களுக்கு ஒரு பெருமிதம்
உண்டு. இதை திமிர் என்று பாமர மக்கள் சொல்வதுண்டு.
எனவே உழைத்துச் சாப்பிடும் BSNLன் ஒவ்வொரு
தொழிலாளியும் திமிருடன்தான் இருப்பான். இதை லும்பன்
வர்க்கத்துக் கழிசடைகளாலும், குட்டி முதலாளித்துவ
வர்க்கத்து அற்பர்களாலும் புரிந்து கொள்ள
முடியாது. 500 ரூபாய் கவரில் போட்டுக் கொடுத்தால்
மலத்தைச் சந்தனமாகப் பூசுவான் ஊடகப்புழு.

உழைத்துச் சாப்பிடுவதால் வரும் சொந்தத் திமிர்
போக, தொழிலாளர்களுக்கு வர்க்கத் திமிரும் உண்டு.
சமூகத்திலேயே ஆகப் புரட்சிகரமான வர்க்கம்
தொழிலாளி வர்க்கம்தான். இந்த வர்க்கத்தை
industrial proletariat என்று வர்ணித்தார் மார்க்ஸ்.

ஒரு தொழில்நுட்ப நிறுவனமான BSNLன் ஊழியர்கள்
மார்க்ஸ் குறிப்பிட்ட தொழிலகப் பாட்டாளி வர்க்கம்
(industrial proletariat) என்ற வகைமையில் வருவார்கள்.
எனவே சொந்தத் திமிரும் வர்க்கத் திமிரும் கொண்ட
எங்களிடம்  வாலாட்ட வேண்டாம் என்று
எச்சரிக்கிறோம்.

பெருமிதங்கள் மேற்கூறிய இரண்டுடன் முடிந்து
விடுவதில்லை என்கிறார் தொல்காப்பியர்.

கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே
என்கிறார் தொல்காப்பியர். இவ்வெல்லாப்
பெருமிதங்களையும் உணர இக்கட்டுரை ஆசிரியரின்
பதிவுகளைத் தொடர்ந்து படிக்கவும்.
*************************************************       

  





   

    

  



     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக