வியாழன், 9 ஜனவரி, 2020

ஐஐடியில் படிப்பவர்களில் ஆகப் பெரும்பான்மையினர்
நடுத்தர வர்க்கத்தினரே. அங்கு எல்லாவற்றுக்கும் அரசே
கட்டணத்தை நிர்ணயிக்கிறது.

தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள
கட்டணத்தை விட ஐஐடியில் பல மடங்கு கட்டணம் குறைவு.

பணக்காரப் பருப்புகள் ஜேஎன்யூவில் மட்டுமே படிக்க
இயலும். ஏனெனில் IIT JEE நுழைவுத் தேர்வில் அவர்களால்
தேற இயலாது. அவர்கள் ARTS GROUPல் டிகிரி வாங்கும்
கூட்டம்.

ஜேப்பியாரின் பனிமலரில் என்ன கட்டணம் (விடுதி, MESS FEES
உட்பட) என்பதையும் ஐஐடியில் என்ன கட்டணம் என்றும்
ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும்.

இது பல்கலைக் கழகங்கள் பற்றிய ஒரு அகாடமிக் பதிவு.
இதைப் புரிந்து கொள்ள இந்தியப் பல்கலைகளில்
நிலவும் வளாகச் சூழல், கட்டண விவரம், பாடத்திட்டம்
ஆகியவை பற்றியெல்லாம் ஒரு குறைந்தபட்சப்
புரிதல் வேண்டும்.       


இது இன்னொரு MISCONCEPTION. நீங்கள் சொல்வதில் 
உண்மை கிடையாது. நீங்களாகவே எதையாவது 
கற்பனை செய்து கொண்டு அதை உண்மை என்று 
நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஐஐடியில் 
பல்வேறு சந்தர்ப்பங்களில் முதல் மதிப்பெண் 
எடுத்துத் தேறுபவர்கள் பார்ப்பனர்கள் அல்ல.
இந்த உண்மை நீங்கள் அறியாதது.

பார்ப்பான்தான் மூளை உள்ளவன் என்ற  
கடைந்தெடுத்த நிலப்பிரபுத்துவ அடிமைச் சிந்தனை 
சமூகத்தில் இன்னமும் நிலவுவது வருந்தத் தக்கது.

இது பற்றி ஆயிரம் கட்டுரைகள் எழுத இருக்கிறேன்.
ஐஐடியில் எந்த ஒரு நேரத்திலும் அங்குள்ள பார்ப்பன
மாணவர்களை விட, பார்ப்பனர் அல்லாத மாணவர்களின் 
எண்ணிக்கை அதிகம். இதை ஆதாரத்துடன் ஆயிரம் 
முறை நிரூபித்து இருக்கிறேன்.
  
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக