புதன், 15 ஜனவரி, 2020

பின்வாங்குவோம்! பின்வாங்குவோம்!!
பாசிச பாஜக கொண்டு வந்த குடியுரிமைச் சட்டத்தை
எதிர்க்காமல் பின்வாங்குவோம்!
------------------------------------------------------------------------------
குடியுரிமைச் சட்டத்தை காங்கிரஸ் கட்சி
அதிகாரபூர்வமாக எதிர்க்கிறது. ஆனால் கட்சியின்
பல இரண்டாம் அடுக்குத் தலைவர்கள் குடியுரிமைச்
சட்டத்தை ஆதரிக்கின்றனர்.

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து புதுடில்லியில்
மாநாடு போன்றதொரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்
கூட்ட காங்கிரஸ் தலைமை ஏற்பாடு செய்தது.

1) பாசிச எதிர்ப்பு புகழ், மேற்கு வங்கப் பெண்புலி
மமதா பானர்ஜி, தமது கட்சி இதில் கலந்து கொள்ளாது
என்று பகிரங்கமாக அறிவித்து விட்டார். தமது முடிவை
அமித்ஷாஜிக்கு போன் மூலம் பேசி தெரிவித்தும் விட்டார்.
"தீதிஜி தீதிஜி ஸ்வாகத் ஹை, ஸ்வாகத் ஹை என்று
அமித்ஷாஜி உணர்ச்சி வசப்பட்டு விட்டார்.

2) அடுத்து பெஹன்ஜி! தீதிக்கு பெஹன்ஜி சளைத்தவரா?
இல்லையே! காங்கிரசின் CAA எதிர்ப்புக் கூட்டத்தில்
பகுஜன் சமாஜ் கட்சி கலந்து கொள்ளாது என்று
அறிவித்து சோனியாவின் முகத்தில் கரியைப்
பூசினார் மாயாவதி!

3) மாயாவதிக்கு எதிரான நிலைபாட்டை எடுத்து
காங்கிரஸ் கூட்டும் கூட்டத்தில் பங்கேற்பார் அகிலேஷ்
யாதவ் என்று ஒரு கூட்டம் நாக்கைத்
கொண்டு காத்திருந்தது. Alas, அவர்களின் நாக்கில்
நரகலைத் தடவி விட்டார் அகிலேஷ் யாதவ்! தமது
கட்சி கலந்து கொள்ளாது என்று அறிவித்து விட்டார்.

4) பாசிச எதிர்ப்புக்கென்றே இந்த உலகத்தில்
பிறந்தவர் ஜார்ஜ் டிமிட்ரோவோ அல்லது
ஜோசப் ஸ்டாலினோ அல்ல! அது அரவிந்த் கேஜ்ரிவால்
அவர்கள்தான். எனவே கேஜ்ரிவால் நிச்சயம் கலந்து
கொள்வார் என்று வாயைப் பிளந்து கொண்டு
ஒரு கூட்டம் காத்திருந்தது. ஆனால் அக்கூட்டத்துக்கு
அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து விட்டார் கேஜ்ரிவால்.
காங்கிரசின் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்காது
என்று அறிவித்து ராகுல் காந்தியின் மூக்கில்
ஓங்கி ஒரு குத்து விட்டார் கேஜ்ரிவால்.

5) நிலப்பிரபுத்துவ வாரிசு அரசியலின் இழிந்த
பிரதிநிதியான உத்தவ் தாக்கரே, தமது கட்சியான
சிவசேனை CAA எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்து
கொள்ளாது என்று அறிவித்து சுடுகாட்டில்
காங்கிரசுக்கு ஒரு இடத்தை உறுதி செய்தார்.

6) இவர்கள் அனைவரையும் விஞ்சி விட்டார் நம்
அண்ணன் டி ஆர் பாலு அவர்கள்! திமுக கலந்து
கொள்ளாது என்று அறிவித்த கையோடு, எதிரே
இருந்த காங்கிரஸ் தலைவரையும் செருப்பால்
அடித்து விரட்டி விட்டார் அண்ணன் டி ஆர் பாலு
அவர்கள்.

போனமாதம் குடியுரிமைப் பிரச்சினை குறித்து
ஐந்தாறு கட்டுரைகளை எழுதினேன். காங்கிரஸ்,
பாஜக, பகுஜன், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட
அனைத்து நாடாளுமன்ற அரசியல் கட்சிகளும்
ஆளும் வர்க்கக் கட்சிகளே. இவை அனைத்தும்
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை
மயிருக்கும் மதிக்காத கட்சிகள் என்று அம்பலப்
படுத்தி இருந்தேன்.

ஆனால் புழுவினும் இழிந்த குட்டி முதலாளித்துவத்
தற்குறிகளின் மரமண்டையில் நான் சொன்ன
உண்மைகள் ஏறவில்லை. அந்தத்  தெருவோரச்
சொறிநாய்கள் வேகமாகக் குரைத்தன. சோற்றுக்குப்
பதில் மலத்தை உணவாக உட்கொள்ளும், குஷ்டரோகம்
பீடித்த  அந்தப் புழுத்த நாய்கள் அப்படிக்
குரைப்பதுதான் அவற்றின் இயல்பு.

உலகப் புகழ் பெற்ற நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர்
தம் நாடகம் ஒன்றில் இப்படிக் கூறுகிறார்:
"The dog barks but the caravan passes on."

ஆம் நாய்கள் குரைக்கின்றன;
ஆனால் ரதம் முன்னேறிச் செல்கிறது.
ரதத்தின் நகரும் சக்கரங்களில்
சொறிநாய்களின் தலைகள் நசுங்குகின்றன;
நசுங்கிச் செத்த நாய்களின் பிணத்தை
ஈக்கள் மொய்க்கின்றன.
************************************************


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக