செவ்வாய், 21 ஜனவரி, 2020

போலிப் பகுத்தறிவுக் கோழைகளும்
உறுதிபட நிற்கும் கிழட்டுக் கூத்தாடியும்!
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------
ஆம், நாங்கள் ராமன் படத்தை
செருப்பால் அடித்தோம்! அது உண்மைதான்!
அதில் என்ன தவறு என்று கேட்கத் துப்பற்ற
கோழைகள் பம்மிப் பதுங்குகிறார்கள்!

ராமர் படத்துக்கு செருப்பு மாலை போட்டு
ஊர்வலம் சென்றார்கள் என்று சொன்னவர்
வரலாற்று ஆசிரியரா? அல்லது கற்றறிந்த
அறிஞரா? விஷயம் தெரிந்தவரா? இல்லை!
வெறும் கூத்தாடி! அதிலும் புழுவினும் இழிந்த
கிழட்டுக் கூத்தாடி!

இந்தக் கூத்தாடியின் வாக்கு வேத வாக்கா?
இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து
சகல விதமான போலிப் பகுத்தறிவுக் கோழைகளும்
தங்களின் சக்தியைத் திரட்டி வெளிக்காட்ட
வேண்டிய அவசியம் என்ன?

கூத்தாடி சொன்ன மாதிரியே, ராமன் படத்தை
அல்லது சிலையை பெரியார் செருப்பால் அடித்திருந்தால்
அதில் என்ன தவறு வேசிமகன்களே?
ஏன் தொடை நடுங்குகிறீர்கள் போலி நாத்திகர்களே?

ஒரு கிழட்டுக் கூத்தாடி தான் சொன்னது உண்மைதான்
என்றும் மன்னிப்பெல்லாம் ஒரு மயிரும் கேட்க
முடியாது என்றும் உறுதிபட நிற்கும்போது,
ராமனின் படத்தைச் செருப்பால் அடித்ததில்
என்ன தவறு என்று உங்களால் ஏன் உறுதிபட
நிற்க முடியவில்லை போலிப் பகுத்தறிவுக்
கயவர்களே?         

பெரியார் ஏதோ பஞ்சமா பாதகத்தைச் செய்து
விட்டது போல ஏன் அலறுகிறீர்கள் கோழைகளே?

பொருள்முதல்வாத வாடையே இல்லாத
போலிப் பகுத்தறிவு இறுதியில் கடவுளுக்கும்
மதத்துக்கும் மண்டியிட்டு சேவை செய்வதில்தான்
போய் முடியும்!


காளமேகப் புலவர் வசைகவியும் பாடுவார்!
இது வசைகவி! எல்லாமே இசைகவியாகப் பாடிக்


**********************************************************

பதிவில் சொல்லப்பட்ட விஷயத்தைத் தாண்டி
வாசகர்கள் கருத்துக்கூற வேண்டாம். இது 1971ல்
allegedly நடந்த ஒரு சம்பவம் பற்றிய பதிவு.
ஒரு கூத்தாடி ஒட்டு மொத்தப் போலிப் பகுத்தறிவு
இயக்கத்தையும் நடுநடுங்க வைத்துக்
கொண்டிருப்பதன் காரணம் என்ன?
போலிப் பகுத்தறிவு இயக்கத்தின் பலவீனமே
காரணம் என்பதை நிரூபிக்கிறது இந்தப் பதிவு.

இந்தப் பதிவின் சாரம் இதுதான். இந்தப் பதிவை
ஒட்டி மதச்சண்டை நிகழ்த்த வேண்டிய தேவை
எதுவும் இல்லை. அதைத் தவிர்க்கவும்.

"புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி"
  என்ற பக்தி இலக்கிய வாசகத்தையே நான்
எளிய தமிழில் எடுத்தாள்கிறேன்.
புழு என்பது எலும்பற்றது. என்பி லதனை
வெயில்போலக் காயுமே என்கிறார் வள்ளுவர்.
இன்னும் ஆயிரம் எடுத்துக்காட்டுகள் தர இயலும்.

இதைக் கேட்க வேண்டிய இடத்தில் போய்க்
கேட்க வேண்டும். இது தேர்தல் புறக்கணிப்புக்கான
இடம். ஓட்டுப்பொறுக்கித் தனத்தத்துக்கு இங்கு
இடம் கிடையாது.

குட்டி முதலாளித்துவக் கண்ணாடியை அணிந்து
கொண்டு, குட்டி முதலாளித்துவ அளவுகோலைக்
கொண்டு அளந்து பார்க்கிறீர்கள். நல்லது.
எமது அளவுகோல்கள் வேறானவை.


உண்மை, உண்மையில்லை என்பது இங்கு
பொருத்தமற்றது. கொள்கை கோட்பாடு
போன்றவற்றில்தான் உண்மையா பொய்யா என்ற
கேள்வி பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.

1971ல் நடந்த alleged incident குறித்து இவ்வளவு
பதற வேண்டிய அவசியம் இல்லை. கூத்தாடியானவர்
பொய்யே சொல்லி இருந்தாலும் அதனால் ஒன்றும்
குடி முழுகப் போவதில்லை.

Much ado about nothing! இது எதைக் காட்டுகிறது?
போலிப் பகுத்தறிவு இயக்கம் நீர்த்துப் போனதை
இது காட்டுகிறது. பொருள்முதல்வாதம் இல்லாமல்
விடிவு இல்லை என்ற எமது கூற்று மென்மேலும்
வலுப்படுகிறது.


அவர் மீது காழ்ப்பு அணுவளவும் இல்லை.
அவரை நான் பொருட்படுத்துவதே இல்லை.
ஒருவரைப் பொருட்படுத்தினால் மட்டுமே
அவர் மீது அபிமானமோ காழ்ப்போ கொள்ள முடியும்.
மூத்த கூத்தாடி எம் கே தியாகராஜ பாகவதர் முதல்
இளைய கூத்தாடி உதயநிதி ஸ்டாலின் வரை
கூத்தாடிகளை நான் பொருட்படுத்துவது இல்லை.


கூத்தாடிகள் அல்லாத தமிழக முதல்வர்கள்
1) ராஜாஜி 2) காமராசர் 3) பக்தவத்சலம்
4) ஓபிஎஸ் 5) எடப்பாடி ஆகிய 5 பேர் மட்டுமே
என்று ஆயிரம் முறை சொல்லி இருக்கிறேன்.


ஆசிரியர் அவர்கள் தமது கட்சி
அலுவலகத்தில் அமர்ந்து பேசும் ஒரு வீடியோவைப்
பார்க்க நேர்ந்தது. 2 நிமிட வீடியோ அது.
அதில் ஆசிரியர் அவர்கள் 1971ல் நடந்த மேற்படி
நிகழ்வு உண்மை என்று ஏற்கிறார். அந்த வீடியோவில்
பேசுவது ஆசிரியரே என்பதை ஆசிரியரிடம்
நேரில் பேசியும் குரலைக் கேட்டும் அறிந்துள்ள
என் போன்ற அல்லது நம் போன்ற பலரும்
எளிதில் அறிய இயலும். அந்த வீடியோவைப்
பார்க்கவும். அது உண்மைதானா என்று
உறுதிப் படுத்தவும். ஆசிரியர் அவர்கள் அது
தாம் பேசியது அல்ல என்று இதுவரை மறுக்கவில்லை.
------------------------------------------------------------------------------

Action or reaction does not matter. செருப்பால் அடித்தது
உண்மை என்னும்போது அதற்காக இன்று
குற்ற உணர்வு கொள்ள வேண்டியதில்லை.
செருப்பால் அடித்தது ஒன்றும் பஞ்சமா பாதகம் அல்ல.
Why an apologetic tone now? Do they repent for their "sins"?

பொருள்முதல் வாதமற்ற போலிப் பகுத்தறிவு
இந்த நிலைக்கே இட்டுச் செல்லும்.


சிலைகளை நிர்வாணமாகக் கொண்டு
செல்லுதல் என்பதெல்லாம் பொருட்படுத்தக்
கூடிய விஷயமே அல்ல. நிர்வாண மறைப்பு
என்பது மனிதர்களுக்கு மட்டுமே. சிலைகள் உயிரற்ற
ஜடப்பொருட்கள். அவற்றுக்கு நிர்வாண மறைப்பு
என்றெல்லாம் கிடையாது. இது போன்ற
அர்த்தமற்ற விஷயங்களில் தலையை நுழைத்துக்
கொள்வது தப்பித்தல்வாதம் (escapism) ஆகும்.

செருப்பால் அடிப்பது என்பதுதான் பிரதான விஷயம்.
அது உண்மை என்று ஆன பிறகு, இன்று இவ்வளவு
பம்மிப் பதுங்குவது மனித குல வரலாற்றின் இழிந்த
கோழைத்தனம் மட்டுமே. இதற்குக்  காரணம்
போலிப் பகுத்தறிவே!    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக