ஞாயிறு, 12 ஜனவரி, 2020

46 வயது என்பது தேர்வெழுதத் தகுதியற்ற வயது!
TNPSC Group IV தேர்வில் பெரும் முறைகேடுகள்!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------
அண்மையில் TNPSC Group IV 2019 தேர்வு முடிவுகள்
வெளிவந்தன.
அ) தேர்வு எழுதியோர் 17 லட்சம் பேர்.
ஆ) தமிழ்நாட்டின் மொத்தத் தேர்வு மையங்கள் = 5575
இ) காலிப் பணியிடங்கள் = 6491.

முடிவு அறிவிக்கப்பட்டபோது  ராமேஸ்வரம்,கீழக்கரை
என்னும் இரண்டு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியோர்
முதல் 100 இடங்களைப் பெற்றுள்ளது அம்பலமானது.

இத்தேர்வில் மாநில முதல்வராக வெற்றி பெற்றவர்
மாண்புமிகு சிவராஜ் என்பவர். சிவகங்கை மாவட்டம்
மேலக்கண்ணனூர் என்ற ஊரில் இவர் வசித்து வருகிறார்.

மாநில அளவில் முதல்வராக (State First) தேறியிருக்கும்
இவர் 300க்கு 289.5 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
இதன் மூலம் இவர் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
ஏனெனில் இதுவரை எவருமே 289.5 மதிப்பெண்
எடுத்ததே இல்லை. அதிக பட்சமாக 300க்கு 250 என்ற
அளவில் மட்டுமே இதுவரை மதிப்பெண் எடுத்துள்ளனர்.

இவரின் ஊருக்கு மிக அருகிலேயே இரண்டு தேர்வு
மையங்கள் உள்ளன. 1. சிவகங்கை 2. இளையான்குடி.
இருப்பினும் அதிக தூரத்தில் இருக்கும் கீழக்கரை
தேர்வு மையத்தை இவர் ஏன் தேர்ந்தெடுத்தார்?

TNPSC இவரை விசாரணைக்கு அழைத்துள்ளது.
ஆனால் மாண்புமிகு சிவராஜ் தலைமறைவாகி விட்டார்.

இந்தக் கட்டுரையின் முக்கிய பகுதியை இதுவரை
எழுதவில்லை. இப்போது எழுதப் போகிறேன்.
அதிர்ச்சிக்குத் தயார் ஆகிக் கொள்ளுங்கள்.

மாண்புமிகு சிவராஜ் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.
இவர் ஒரு BC. TNPSC Group IV தேர்வை BC பிரிவினர்
எழுதுவதற்கான வயது வரம்பு சில பதவிகளுக்கு
30 வயது; வேறு சில பதவிகளுக்கு 32 வயது.

அப்படி இருக்க 46 வயதான சிவராஜ் எப்படித் தேர்வு
எழுத அனுமதிக்கப் பட்டார்?

வயது வரம்புத் தளர்வு (Age relaxation) என்பது ஐந்து
ஆண்டு என்ற அளவில் உள்ளது. அதைப்பெற இவர்
உடல் ஊனமுற்றவரோ அல்லது வேறு சலுகைப்
பிரிவினரோ அல்ல.
ஆக முறைகேடு நடந்திருப்பது உறுதியாகிறது.

1969 முதல் தமிழக அரசுப் பணிகளிலும் கல்வியிலும்
திராவிடக் கட்சிகள் பரவலாக முறைகேடுகளை
நிகழ்த்தி இருக்கின்றன. கல்வியை சர்வ நாசமாக்கியது
திராவிடக் கட்சிகளே.

இதை அம்பலப் படுத்தும் போதெல்லாம், சமூகநீதி
என்று உரக்கக் கூச்சல் போட்டு, எதிர்க்குரல்களை
அடக்குவது திராவிடக் கட்சிகளின் வழக்கம்.
**********************************************


மழை வாழ்க!
=============
கண்ணைப் பறிக்குது மின்னல்
இடியின் ஓசையில் நடுங்குது உடல்
சரஞ் சரமாய்ப் பெய்யும் மழையில்
கொஞ்சம் வீட்டு முற்றத்தை நனைக்கிறது.

மழை வெறித்ததும்
தெரு ஓரம் வந்து நிற்கிறேன் 
அங்கு தேங்கிய நீரில்
என் கையில் உள்ள
காகிதக் கப்பலை விடுகிறேன்.

எல்லா வீடுகளில் இருந்தும்
பிள்ளைகள் கப்பல் விடுகிறார்கள்.
கண்ணுக்கு இனிய காட்சி.

மழையே நீ அமிர்தம்
உயிர்களுக்கு எல்லாம் உயிர் கொடுக்கும்
உன்னை வணங்குகிறேன்.
நீ என்றும் எங்களுக்கு அருள் புரிவாய்.
------------------------------------------------------
     


 
                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக