சனி, 1 பிப்ரவரி, 2020

கோபுரங்கள் சாய்வதில்லை!
மறுமலர்ச்சிப் பாதையில் BSNLன் பீடுநடை!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
ஜனவரி 31, 2020 அன்று BSNL மற்றும் MTNL ஆகிய
இரண்டு பொதுத்துறை நிறுவனங்களில் VRS மூலம்
ஒரு லட்சம் பேர் வெளியேறி உள்ளனர்.

டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்திலேயே
BSNL  நலிவுறத் தொடங்கி இருந்தது. Incipient sickness என்பது
அன்றே 2010ல்தொடங்கி இருந்தது.
(Incipient sickness = ஆரம்ப நிலையிலான நலிவுறுதல்)

BSNL குறித்து ஆராய, சாம் பித்ரோடா தலைமையில்
டாக்டர் மன்மோகன் சிங் 2012ல் ஒரு குழுவை அமைத்தார்.
BSNLன் inflated population கண்டு அதிர்ந்து போன
சாம் பித்ரோடா, அன்று இருந்த மூன்று லட்சம்
ஊழியர்கள் என்ற எண்ணிக்கையில் ஒரு லட்சம் பேரைக்
குறைக்க வேண்டும் என்றும் அதற்கு VRS வழங்க
வேண்டும் என்றும்  பரிந்துரைத்தார். இதற்கு ஆகும்
செலவு ரூ 12,000 கோடி என்றும் கணக்கிட்டு இருந்தார்
சாம் பித்ரோடா.

ஆனால் டாக்டர் மன்மோகன்சிங்கின் அரசு VRSக்குத்
தேவையான நிதியை BSNLக்கு வழங்க முன்வரவில்லை.
அமைச்சர் கபில் சிபலும் கண்டு கொள்ளவில்லை. எனவே
VRS திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

அன்று சாம் பித்ரோடா குழு என்ன அறிக்கை அளித்ததோ
அதே அறிக்கையைத்தான் இன்று ஐஐஎம் அகமதாபாத்
நிபுணர் குழுவும் அளித்துள்ளது. ஆனால் அன்று
மன்மோகன்சிங் அரசு தர மறுத்த நிதியை இன்று
மோடி அரசு  (ரூ 30,000 கோடி) தருகிறது.

புத்தாக்கத் திட்டம் (Revival plan)
-----------------------------------------------
VRS என்பது தனித்த ஒரு திட்டம் அல்ல. மாறாக ஒட்டு மொத்த
BSNLன் புத்தாக்கத் திட்டத்தின் ஒரு பகுதி.
புத்தாக்கத்  திட்டம் பின்வருமாறு:-

அ) VRS திட்டத்தின் Ex Gratia வழங்கும் செலவு = ரூ 17,169 கோடி.
ஆ) Pensionary benefits preponed வழங்கும் செலவு = ரூ 12,768 கோடி.
இ) 4G அலைக்கற்றை BSNLக்கு = ரூ 14,115 கோடி
ஈ) 4G அலைக்கற்றை MTNLக்கு = ரூ 6295 கோடி
உ) அலைக்கற்றைக்கான GST வரி = ரூ 3674 கோடி.
ஊ) BSNL, MTNLக்கு மேலும் வழங்கும் நிதி = ரூ 15,000 கோடி.

இந்த ரூ 15,000 கோடியை உறுதிப் பத்திரங்கள் மூலமாக
(Sovereign guarantee bonds) மத்திய அரசு வழங்கும்.
மேற்கூறிய அ), ஆ), உ) ஆகிய மூன்று இனங்களுக்கும்
ரூ 33,611 கோடி நிதியை அரசு நேரடியாக வழங்கும்.

இ) மற்றும் ஈ) இனங்களுக்கு முறையே Equity infusion
மூலமும், preference shares மூலமும் மத்திய அரசு
நிதி வழங்கும்.

களையெடுப்புக்குப் பதில் தங்கக் கைகுலுக்கல்!
----------------------------------------------------------------------------
ஒருவேளை அ) BSNLஐ மூடி விடுவது என்றோ அல்லது
ஆ) ஆட்குறைப்புச் செய்து முதல் கட்டமாக 50,000 பேரை
வெளியேற்றுவது  என்றோ மோடி அரசு முடிவெடுத்து
இருந்தால் என்ன நடந்திருக்கும்?

அ) மூடுவது என்றால், OFFICIAL LIQUIDATOR வந்திருப்பார்.
அவர் BSNLஐ இழுத்து மூடி, எல்லோரையும் வெளியேற்றி,
இருக்கும் சொத்துக்களைக் கணக்கெடுத்து அரசிடம்
கொடுத்திருப்பார். அப்போது எல்லோரும்
Liquidator பற்றியே பேசிக் கொண்டிருப்போம். Liquidator
என்ற புதிய சொல் BSNLல் பேசுபொருள் ஆகியிருக்கும்.

ஆ) ஆட்குறைப்புச் செய்வது என்றால், அதை CRS
எனப்படும் கட்டாய ஒய்வு மூலமே செய்ய முடியும்.
இது ஒரு   மாபெரும் களையெடுப்பாக (Great purge)
இருந்திருக்கும். அதிர்ஷ்டவசமாக மனக்கசப்புக்கு
இடமில்லாமல் VRS என்னும் தங்கக் கைகுலுக்கல் மூலம்
வீட்டுக்குச் செல்கிறார்கள் BSNL ஊழியர்கள்.

ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
-----------------------------------------------------
ரூ 40,000 Basic Pay உள்ள ஒரு அதிகாரி 152 சத DAவுடன்
VRS 2019ல் செல்கிறார். அவர் Ex Gratiaவாக மட்டும்
ஓராண்டுக்கு ரூ 9 லட்சம் பெறுகிறார். இந்த அதிகாரியின்
வயது 55 என்றால், 60 வயது வரையிலான ஐந்தாண்டு
காலத்திற்கு  அவர் Ex Gratiaவாக ரூ 45 லட்சம் பெறுவார்.
அத்துடன் மாதந்தோறும் Basic Pensionஆக ரூ 50,400 பெறுவார்.
கிராச்சுட்டி commutation போன்றவை பின்னர் கிடைக்கும்.
இதில் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை!

இந்த உதாரணம் புரிந்ததா? புரிந்திருக்காது.
60 வயதில் இயற்கையாக ஒய்வு பெற வேண்டிய ஒரு
அதிகாரி, 55 வயதில் VRS மூலம் ஒய்வு பெறுகிறார்.
60 வயது வரை வேலை பார்த்தால்,
அதாவது (5 x 12 = 60) இன்னும் 6 மாதங்கள் வேலை
பார்த்தால், அவருக்கு என்ன சம்பளம்
கிடைத்திருக்குமோ, அந்தத் தொகையை ExGraita
என்னும் கருணைத் தொகையின் மூலம் அரசு
ஈடு செய்கிறது. அந்தத் தொகைதான் மேலே கூறிய
45 லட்சம். இது  உதாரணம் மட்டுமே. அவரவரின்
சம்பளத்தைப் பொறுத்து 60 லட்சம், 80 லட்சம்
என்ற அளவில் தொகை உயர்ந்து கொண்டே செல்லும்.

இது போக, 60 வயதில் கிடைக்க வேண்டிய பென்சன்
ஐந்து ஆண்டுக்கு முன்னதாகவே கிடைக்கிறது.
அதாவது இந்த உதாரணத்தில் சொல்லப்பட்ட
அதிகாரி ரூ 45 லட்சத்தை இரண்டு தவணைகளில்
பெறுவார். மாதாந்திர பென்ஷனாக ரூ 50,400
பெப்ரவரி 2020 முதல் பெறுவார்.

ஊழியர்களுக்கு இணையாக DGM, DE போன்ற
அதிகாரிகளும் VRSல் செல்கின்றனர். உண்மையில்
ஊழியர்களை விட அதிகாரிகள்தான் அதிக
எண்ணிக்கையில் (in terms of percentage) VRSல்
சென்றுள்ளனர்.

தனியார் நிறுவனக் கைக்கூலிகளுக்கு எச்சரிக்கை!
---------------------------------------------------------------------------------
BSNLன் VRS என்பது புத்தாக்கத் திட்டத்தின் ஒரு பகுதி.
இது எவ்விதத்திலும் கட்டாய ஒய்வு அல்ல. BSNLன்
தொழிற்சங்கங்களும் ஊழியர்களும் இந்த VRSஐயும்
புத்தாக்கத் திட்டத்தையும் முழுமனதுடன் ஏற்றுக்
கொண்டுள்ளனர். 
           
ஆனால் தனியார் நிறுவனங்களின் கைக்கூலிகளாகச்
செயல்படும், புழுவினும் இழிந்த குட்டி முதலாளியத்
தற்குறிகளும் ஊடக வேசிப்பயல்களும் BSNL
அழிந்து விட்டது என்றும் BSNLஐ விற்று விட்டார்கள்
என்றும் வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்.
இவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்று
எச்சரிக்கிறோம்.
******************************************************







தற்போது நடப்பது BSNLன் தொழில்நுட்ப 
சொத்துக்களின் விற்பனை.கட்டிடங்கள் போன்ற 
சொத்துக்கள் வேறு. OFC வலைப்பின்னல் 
போன்ற சொத்துக்கள் வேறு.

BSNL ல் 68,000 கோபுரங்கள் உள்ளன.இவற்றில்  
13,000 கோபுரங்களை தனியார் நிறுவனங்களுக்கு 
BSNL வாடகைக்கு விடுகிறது. இதன் மூலம் 
ஆண்டொன்றுக்கு ரூ 1000 கோடி வருவாய் 
ஈட்டுகிறது BSNL

மேலும் கண்ணடி இழை கேபிள்களில் (OFC)
பயன்படுத்தப்படாத பகுதியை வாடகைக்கு 
விடுகிறது BSNL. இதன் மூலம் ஆண்டு வருவாய் 
ரூ 400 கோடியை BSNL ஈட்டுகிறது. மேற்கூறிய 
நடவடிக்கைகள் அனைத்தும் ASSET MONETISATION    
ஆகும். விற்பனை மட்டுமே MONETISATION என்று 
பொருள்கொள்ளக் கூடாது.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக