சனி, 8 பிப்ரவரி, 2020

மருத்துவம் பார்க்க MBBS படிக்க வேண்டியதில்லை!
போலி வானிலைக் கணிப்பாளர்களை ஆதரிப்பது
அறிவியலுக்கு எதிரானது! மக்களுக்கு எதிரானது!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அறிவியலுக்கு
எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்து உள்ளன.
தடுப்பூசி எதிர்ப்புப் பிரச்சாரம் அதன் உச்சத்தில்
இருப்பது தமிழகத்தில்தான். இதைச் செய்து வருபவர்கள்
தமிழகத்தின் போலி இடதுசாரிகளே.

நாளை அதிகாலை புயல் வரும்; நடுநிசியில் சுனாமி
வரும் என்று பொய்யான அறிவிப்புகளை வெளியிட்டு
மக்களை எப்போதும் பதட்டத்தில் வைத்திருக்கின்றனர்
சிலர். இவர்கள் போலியான வானிலைக் கணிப்பாளர்கள்.

இத்தகைய போலிகளை ஆதரிப்பதில் முன்னணியில்
இருப்பவர்கள் தமிழகத்தின் போலி இடதுசாரிகளும்
ஊடகங்களுமே.

MBBS படித்தால்தான் ஆங்கில மருத்துவம் பார்க்கலாம்
என்கிறது நியூட்டன் அறிவியல் மன்றம்.
தேவையில்லை, எட்டாங் கிளாஸ் படித்திருந்தால்
போதும், ஆங்கில மருத்துவம் பார்க்கலாம் என்கிறார்கள்
போலி இடதுசாரிகள்.

ஒரு வானிலை விஞ்ஞானிதான் (Meteorologist) வானிலையைக்
கணிக்க முடியும் என்கிறது நியூட்டன் அறிவியல் மன்றம்.
தேவையில்லை, இயற்பியல் படிக்காமலேயே
வானிலையைக் கணிக்கலாம் என்கிறார்கள் போலிகள்.

போலியான வானிலைக் கணிப்பாளர்களிடம் இருந்து
மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, தன்னுடைய
இணையதளத்தில் உள்ள தரவுகளைப் பார்க்க
அண்மையில் தடை விதித்துள்ளது IMD.
(IMD =Indian Meteorological Department)  
(இது குறித்து விவரம் அறிய இப்பொருளில் எழுதப்பட்ட
எமது முந்திய கட்டுரையை வாசகர்கள் படிக்கலாம்).

IMDயின் தடையைத் தொடர்ந்து, அடிவயிற்றில் கத்திக்குத்து
விழுந்தது போல் அலறுகிறார்கள் போலியான
வானிலைக் கணிப்பாளர்களும் அவர்களின்
ஆதரவாளர்களான போலி இடதுசாரிகளும்.

தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான போலியான
வானிலைக் கணிப்பு இணையதளமாக
"தமிழ்நாடு வெதர்மேன்" விளங்குகிறது. திரு
ஆர் பிரதீப் ஜான் என்பவர் இந்த இணையதளத்தை
நடத்தி வருகிறார்.

இவரை ஆதரிக்கும் போலி இடதுசாரிகள் பின்வரும்
கேள்விகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்;-
1) வானிலைக் கணிப்புக்கு அடிப்படையாக இயற்பியல்
படித்திருக்க வேண்டும். திரு பிரதீப் ஜான் உரிய கல்வித்
தகுதி பெற்றிருக்கிறார் என்றே வைத்துக் கொள்ளுவோம்.

2) அவர் வானிலைக் கணிப்புக்கான பயிற்சியை
எங்கு பெற்றார்? அரசு நடத்தும் பயிலகத்திலா
அல்லது தனியார் நடத்தும் பயிலகத்திலா?

3) அவர் பயன்படுத்தும் கருவிகள் என்னென்ன?

4) அவருக்குத் தேவையான தரவுகளை எங்கிருந்து
பெறுகிறார்? எந்தெந்த observatoryகள் அவருக்குத்
தாவுகள் அளிக்கின்றன?

கேள்விகள் நிறைய உண்டு. ஒரே ஒரு முக்கியமான
கேள்விக்கு மட்டும் அவரின் ஆதரவாளர்கள்
பதில் சொன்னால் போதும். அந்தக் கேள்வி இதுதான்!

தமது முகநூல் பக்கத்தில் (Tamil Nadu Weatherman) திரு
பிரதீப் ஜான் ஒரு அறிவிப்பைக் கொடுத்துள்ளார்.
(பார்க்க: Our Story dtd June 19, 2019)
 "If you dont like what i put or the reasoning i give,
you can ignore my page and move on. It doesnt mean you can
come and question me with what happened to your forecast
or something like that."

தமிழில் இதன் பொருள் இதுதான்!
"எனது கணிப்பு உங்களுக்குப் பிடிக்காவிட்டால்
அதை நீங்கள் பார்க்க வேண்டாம். அதே நேரத்தில்
எனது கணிப்பு பொய்த்துப் போனால், அது குறித்து
எவரும் கேள்வி எழுப்ப முடியாது".

தனது கணிப்புக்குத் தான் பொறுப்பேற்க மறுக்கும்
கயமையே இந்தப் போலிகளின் இழிந்த குணம்.
Accountability எனப்படும் பொறுப்பேற்கும் தன்மை
இந்தக் கோழைகளிடம் கிடையாது.

வானிலைக் கணிப்பு என்ற பெயரில் மக்களின்
வாழ்வில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்
பொய்யான கணிப்புகளைச் செய்துவிட்டு,
அதற்குப் பொறுப்பேற்க மறுக்கும் இந்தக்
கயமையை ஆதரிப்பவனும் கயவனே.

கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின்
உயிரோடு விளையாடும் கணிப்பைச் செய்து விட்டு,
அதற்குப் பொறுப்பேற்க மறுக்கும் பிரதீப் ஜான்
என்னும் இந்தப் போலியின் நேர்மை இதுதான்.

சில வாரங்களுக்கு முன் மக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தும் பொருட்டு,கொரோனா வைரஸ் குறித்து,
முகநூலில் ஒரு கட்டுரை எழுதினேன்.  

அக்கட்டுரை ஒரு மருத்துவர் அல்லது Pathologistஆல்
எழுதப் பட்டதல்ல என்று குறிப்பிட்டேன். அத்தோடு
அக்கட்டுரை ஒரு பொதுசுகாதாரப் பணியாளர்
என்ற அந்தஸ்தில் எழுதப் படுகிறது என்றும்
குறிப்பிட்டேன். மேலும் சொல்லப்பட்ட அத்தனை
விஷயங்களுக்கும் கட்டுரையாசிரியர்
பொறுப்பேற்கிறார் என்றும் குறிப்பிட்டேன்.
இதுதான் அறிவியல்பூர்வமான அணுகுமுறை.

சமூகத்தைப் பாதிக்கும் விதத்தில் என்ன
வேண்டுமானாலும் எழுதுவேன்; ஆனால் எழுதியதற்குப்
பொறுப்பேற்க மாட்டேன் என்று சொல்வது கயமை.
அந்தக் கயமையைஆதரிப்பது கிரிமினல் குற்றம்.
போலி இடதுசாரிகளே, உங்களின் பதில் என்ன?
**************************************************************

பெற இயலும்; ஆனால் இலவசமாகப் பெற இயலாது.
கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம்
செலுத்தினாலும் கூட, அந்நிய நாட்டு வானிலை
நிறுவனங்களிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு உரித்தான
location specific தரவுகள் முழுமையாகக் கிடைக்க
வாய்ப்பில்லை. அதற்கான நெட்ஒர்க் தனியாரிடம்
கிடையாது.அவர்களே இந்திய அரசின் IMDயிடம்
இருந்துதான் பெறுகிறார்கள்

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்தின் எல்லைக்கே
போனாலும், IMDயின் LOCATION SPECIFIC தரவுகள்
இல்லாமல் எதுவும் செய்ய இயலாது.
   

ரகுபதி மருதுபாண்டியன்  மிக்க நன்றி!


எந்த ஒரு தனிநபரும் இந்தியாவின் மாபெரும்
Premier Scientific Organisationஆன  IMDயை
சவாலுக்கு அழைக்க முடியாது. IMD is always supreme.  

வேளாண்மைத் துறையில் வானிலை முன்கணிப்பின்
துல்லியத்தை அதிகரிப்பது தற்போது IMDயின்
நோக்கமாக உள்ளது. இதற்கான செயற்கைக்
கோள்களும் அதிகரித்துள்ளன. Agromet Reports
இன்னும் கொஞ்ச காலத்தில் பெரும் மேம்பாடு
அடையும் என்று நம்புகிறேன்.
   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக