திங்கள், 3 பிப்ரவரி, 2020

திமுகவின் தேர்தல் வியூக நிபுணர்
பிரசாந்த் கிஷோரின் IQ என்ன?
(இது ஒரு அகாடமிக் கட்டுரை! அரசியல் கட்டுரை அல்ல)
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
அண்மைக்கால இந்திய வரலாற்றில், நாட்டிலேயே
உச்ச பட்ச IQ உடையவர்களாக மூவர் இருந்தனர்.
1) கணித மேதை ராமானுஜன்
2) நோபல் பரிசு வென்ற சர் சி வி ராமன்
3) சதுரங்க நிபுணர் விஸ்வநாதன் ஆனந்த்.

இந்த உண்மையை முதன் முதலில் கண்டறிந்து
அறிவித்தது நியூட்டன் அறிவியல் மன்றமே.
இதை அறிவியல் ஒளி ஏட்டில் வெளிவந்த ஒரு
கட்டுரையிலும் பதிவு செய்திருக்கிறேன்.

அரசியல்வாதிகள்தான் நாட்டை ஆள்கிறார்கள் என்று
நாம் அறிவோம். ஆனால் நாட்டை ஆள்வதற்குத்
தேவையான IQ அரசியல்வாதிகளிடம் கிடையாது.
எனவே அவர்கள் பெயரில்  IQ > 100 உடைய
அதிகார வர்க்கத்தினர் உண்மையில் நாட்டை
ஆள்கிறார்கள்.
     
எனினும் விதிவிலக்காக சில அரசியல்வாதிகள்
பிரமிக்கத்தக்க IQ  உடையவர்களாக இருக்கின்றனர்.
சுதந்திர போராட்டக் காலத்தில் மகாத்மா காந்தி,
நேத்தாஜி, ராஜாஜி, வல்லப பாய் படேல், டாக்டர்
அம்பேத்கார், ஜவஹர்லால் நேரு ஆகியோர்
அதிகபட்ச IQ பெற்றுத் திகழ்ந்தனர். இவர்களில்
குறைவான IQ உடையவர் நேரு ஆவார்.
இவர்களோடு ஒரே வரிசையில் வைக்கத் தக்க
அளவுக்கு முகமது அலி ஜின்னாவின் IQ இல்லை.

சமகால அரசியலில் இந்தியாவின் நாடாளுமன்ற
அரசியல் தலைவர்களில் அதீத IQஉடன் முதலிடத்தில்
இருப்பவர்கள் மூவர்.
1) பிரகாஷ் காரத் (IQ = 121)
2) சீதாராம் யெச்சூரி (IQ = 121)
3) ப சிதம்பரம் (IQ = 120.8).

சசி தரூர், ஜெய்ராம் ரமேஷ், கபில் சிபல் போன்ற
காங்கிரஸ் தலைவர்கள் IQ மதிப்பீட்டில் அடுத்த
அடுக்கில் உள்ளனர். இந்தியாவிலேயே அதிக IQ
கொண்ட தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில்தான்
உள்ளனர்.

பாஜகவில் IQ அதிகமுள்ள தலைவர்கள் விரல் விட்டு
எண்ணத்தக்க நிலையிலேயே உள்ளனர். காங்கிரசுக்கு
இணையாக இந்த விஷயத்தில் பாஜகவைக் கருத
முடியாது.

பாஜகவிலும் IQ மிக அதிகமான மோகன் பாரிக்கர்,
அருண் ஜெட்லி ஆகியோர் இருந்தனர். ஆனால்
அவர்கள் இறந்து விட்டனர்.

காங்கிரஸ் பாஜகவைத் தாண்டி அரவிந்த் கெஜ்ரிவால்,
யோகேந்திர யாதவ் ஆகியோர் குறிப்பிடத்தக்க
IQ உடன் உள்ளனர்.

அரசியல் தலைவர்களைத் தாண்டி, தொழில்நுட்ப
வல்லுனர்களும் பெரும் IQ உடன் இன்றும் இந்தியாவில்
உள்ளனர். இவர்களும் பெரிதும் காங்கிரஸ் சார்பான
அறிஞர்களே. இவர்களில் குறிப்பிடத்தக்க இரண்டு
பேரை வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும்.

1) தகவல் தொழில்நுட்ப மேதையான சாம் பித்ரோடா,
2) ஆதார் அட்டையின் தந்தையான நந்தன் நிலக்கேணி
ஆகியோர் பிரமிக்கத்தக்க IQ (> 121) உடையவர்கள்.

இந்த இடத்தில் வாசகர்கள் ஓர் உண்மையை உணர்ந்து
கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளால் ஒருபோதும்
ஒரு விஞ்ஞானியின் அல்லது தொழில்நுட்ப அறிஞரின்
IQவை எட்ட முடியாது. ப சிதம்பரத்தால் ஒருபோதும்
சாம் பித்ரோடாவின் IQவை எட்ட முடியாது.

இந்தியாவின் பெண் அரசியல்வாதிகளில் அதிக IQ
உடையவராக ஜெயலலிதாவும் குறைந்த IQ
உடையவர்களாக  ராப்ரி தேவி, பாலபாரதி (CPM)
ஆகியோரும் திகழ்கின்றனர். மறைந்த சுஷ்மா
ஸ்வராஜ் அம்மையார் 100.4 IQ உடையவர்.

தென்கிழக்கு ஆசியாவின் வரலாற்றிலேயே மிகக்
குறைந்த IQஉடன் அமைச்சராக இருந்தவர்
நம் அண்ணன் அஞ்சா நெஞ்சன் அவர்களே.
இவரின் IQ ஆட்டிசத்தால் பாதிக்கப் பட்ட
குழந்தைகளின் IQவை விடக் குறைவு.

ஆக, இதுவரை சொன்னது அனைத்தும் இக்கட்டுரையின்
பீடிகையே. என்ன செய்ய? இவ்வளவு நீண்ட பீடிகை
இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே சொல்ல வந்த
விஷயத்தைச் சொன்னால், எத்தனை பேருக்குப்
புரியும்? சரி, இப்போது பிரசாந்த் கிஷோரின் IQவுக்கு
வருவோம்.

பிரசாந்த் கிஷோர் அதிகமான IQ உடையவர் என்று
நினைத்திருந்தால், அந்த நினைப்பை உதறுங்கள்.
அவர் சராசரிக்குச் சற்றுக் கூடுதலான IQ உடையவர்
அவர்; அவ்வளவுதான்.

அவரின் IQ அதிகபட்சமாக 103.6 உள்ளது. இது மிகவும்
தாராளமாகப் போட்ட கணக்கு. பிரசாந்த் கிஷோர்
என்பவர் அறிவியல் அறிஞரோ தொழில்நுட்ப
மேதையோ அல்லர். தேர்தல் வியூகங்களை
வகுத்துத் தருபவர்.

தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கு பேரளவிலான
IQ தேவைப் படுவதில்லை. தமிழக அரசியலில்
கலைஞர் கருணாநிதி, தனிக்கட்சி நடத்திய
திருநாவுக்கரசர், சைதை துரைசாமி, கே கே எஸ் எஸ் ஆர்
ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பாகத் தேர்தல்
வியூகம் வகுத்து வெற்றி கண்ட சாதனையாளர்கள்.
இவர்களில் எவர் ஒருவரின் IQவும் 102ஐத் தாண்டாது.

இதன் மூலம் தேர்தல் வியூகம் வகுக்க பெரிய பெரிய
IQ தேவைப்படாது என்பது நிரூபிக்கப் படுகிறது.

மேலும் திரு பிரசாந்த் கிஷோர் ஒரு செபாலாஜிஸ்ட்டும்
அல்லர். (Psephologist = தேர்தல் கணிப்பியல் நிபுணர்)
இந்த இடத்தில் இந்தியாவின் முதல் செபாலஜிஸ்ட்டான
பிரணாய் ராய் அவர்களை நினைவு கூர வேண்டும்.
தற்போதைய ND TVயின் அதிபர் இவர். இவரின்
IQ = 108 ஆகும்.

செபாலஜிஸ்ட் பிரணாய் ராயின் IQ 108 என்பதால்,
எல்லா செபாலஜிஸ்ட்களுக்கும் IQ 108 இருக்கும் என்று
கருதி விடக்கூடாது  குறிப்பாக நமது லயோலா
கல்லூரியின் Pseudo Psephologists சிறப்புக்குரியவர்கள்.
அவர்கள் 94க்கும் கீழான IQவை வைத்துக் கொண்டு
எடுத்த முடிவுக்கு ஏற்ப தேர்தலைக் கணிப்பவர்கள்.

ஆக, பிரசாந்த் கிஷோர் என்பவர் சராசரிக்குச்
சற்றே கூடுதலான IQ உடையவர். அவ்வளவுதான்.
இவர் மலையைப் புரட்டுவாரா மாட்டாரா என்பது
2021ல் தெரிந்து விடும்.

எனினும் திமுக பிரசாந்த் கிஷோரைக் கண்டு
பிரமிக்கிறது. வாயைப் பிளந்து கொண்டு பார்க்கிறது.
காரணம் என்னவெனில், திமுகவைப் பொறுத்த
மட்டில், பிரசாந்த் கிஷோரின் 103.6 IQ என்பது மகாப்
பெரிய IQ ஆகும். திமுகவிலேயே யாருக்கும் இந்த
IQ கிடையாது. ஆனானப்பட்ட சபரீசனே 101.8ல்தான்
உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்னும்போது,
பிரசாந்த் கிஷோரின் IQவைக் கண்டு திமுக தலைவர்      
கைகால் உதறிப் போனதில் வியப்பில்லை.
***************************************************  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக