BSNLஐ அரசு நடத்த வேண்டியதில்லை!
அதை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்!
பொருளாதார நிபுணர் ப சிதம்பரம் அருள்வாக்கு!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
மாநிலங்களவையில் அண்மையில் பேசிய ப சிதம்பரம்
அவர்கள் மோடி அரசின் முதலீடு நீக்க (disinvestment)
நடவடிக்கையை ஆதரித்தார். அதாவது பொதுத்துறை
நிறுவங்களில் உள்ள அரசின் பங்குகளை விற்க வேண்டும்
என்று பேசினார்.
தொடர்ந்து, ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் எனப்படும்
அறிவுஜீவிகளின் கூட்டத்தில் பேசிய சிதம்பரம்
பொதுத்துறை என்ற பெயரில் நாட்டின் சொத்துக்களை
அரசு பூட்டி வைத்துக் கொள்கிறது. இது தவறு. இந்தச்
சொத்துக்களைத் திறந்து விட்டால் நன்மை ஏற்படும்
என்கிறார்.
Chidambaram said the government owning and managing
PSUs locks up wealth, which would get unlocked if privatised
and eventually listed in the market.
BSNL குறித்துப் பேசிய சிதம்பரம் BSNL நிச்சயம் வீழ்ச்சி
அடையும் என்றார். (BSNL is bound to collapse).
நலிவுற்ற BSNLஐப் புதுப்பிக்கவும் புத்தாக்கம் செய்யவும்
(REVIVAL PLAN) மோடி அரசு ரூ 80,000 கோடியை
ஒதுக்கி உள்ளது. இந்த ரூ 80,000 கோடியை
ஒதுக்காவிட்டால், சிதம்பரம் ஆருடம் கூறியபடி
BSNL வீழ்ச்சி அடையும். ஆனால் BSNLன் disposalல்
ரூ 80,000 கோடி இருக்கும்போது, BSNL ஒருபோதும்
வீழ்ச்சி அடையாது; மாறாக சிதம்பரம்தான்
வீழ்ச்சி அடைவார். மீண்டும் திகார் சிறைக்குச்
செல்வார் சிதம்பரம்.
BSNLன் நலிவு ஆரம்ப நிலையில் இருந்தபோதே
(incipient sickness), 2012ல் சாம் பித்ரோடா தலைமையில்
ஒரு நிபுணர் குழுவை அமைத்தார் டாக்டர்
மன்மோகன் சிங். BSNLஐ நலிவில் இருந்து மீட்க
ரூ 12,000 கோடி செலவழித்தால் போதும் என்று
சாம் பித்ரோடா.
2012ல் நிதியமைச்சராக இருந்தவர் மாண்புமிகு
சிதம்பரம் அவர்கள்தான். எவ்வளவு கெஞ்சிக் கேட்டும்
அந்தத் தொகையை ஒதுக்க மறுத்து விட்டார்
சிதம்பரம்.
அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக
இருந்தவர் கபில் சிபல். இவர் ஒரு மேனா மினுக்கி.
தன் துறை சார்ந்து எந்த அக்கறையும் எடுத்துக்
கொள்ளவில்லை. இதனால் டாக்டர் மன்மோகன் சிங்,
சாம் பித்ரோடாவின் முயற்சி பயனற்றுப் போனது.
சிதம்பரத்தின் IQ 120.8 என்று பலமுறை குறிப்பிட்டுள்ளோம்.
ஆனால் தொழில்நுட்ப அறிஞரான சாம் பித்ரோடா
அவர்களின் IQ 125 ஆகும். தமது ஆணவத்தால் அன்று
BSNLஐ குறைந்த செலவில் காப்பாற்றும் திட்டத்தை
குப்பையில் வீசினார் சிதம்பரம்.
மத்திய அரசில் யார் நிதியமைச்சராக இருந்தாலும்
அவர்கள் தங்களைக் கொம்பு முளைத்தவர்களாகக்
கருதிக் கொள்வது வழக்கம். காரணம் அவர்களுக்குள்ள
அதிகாரம். அதிலும் ப சிதம்பரம் போன்ற
நிதியமைச்சர்களின் கொம்பு மிக மிக நீளம்.
மோடி அரசிலும் இது தொடர்கிறது. நிதியமைச்சரான
நிர்மலா அம்மையார் BSNLன் புத்தாக்கத் திட்டத்திற்கான
ரூ 80,000 கோடி நிதியைத் தர மறுத்தார். ஆனால்
அந்த நிதியைக் கேட்டுப் பெறுவதில் முழுவெற்றி
அடைந்தார் ரவி சங்கர் பிரசாத். இவர்தான் இன்றைய
தொலைதொடர்பு அமைச்சர்.
பாஜக அரசில் நிர்மலா அம்மையார் ஒரு political light weight.
ஆனால் ரவிசங்கர் பிரசாத்தோ ஒரு big shot. எனவே
ரவிசங்கர் பிரசாத் கேட்ட தொகையை ஒதுக்குவதைத்
தவிர நிர்மலா அம்மையாருக்கு வேறு வழியில்லை.
இதே தொலைதொடர்பு அமைச்சராக மனோஜ் சின்ஹா
இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அவர் ஒரு political
light weight. அவருடன் ஒப்பிடும்போது நிர்மலா
அம்மையார் big shot. எனவே அம்மையார் நிதி ஒதுக்க
மறுத்திருப்பார். மனோஜ் சின்ஹாவால் வற்புறுத்திப்
பெற இயலாமல் போயிருக்கும்.
ஏன் இங்கு இதை இவ்வளவு விஸ்தாரமாகச் சொல்லுகிறேன்
என்றால், வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம்
என்ன என்பதை அறிந்து கொள்ளவே. மனோஜ் சின்ஹாவின்
பாத்திரமும் ரவிசங்கர் பிரசாத்தின் பாத்திரமும்
வேறு வேறானவை. (மார்க்சியத்தில் வரலாற்றில்
தனிநபர் வகிக்கும் பாத்திரம் என்பது மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்தது)
மனோஜ் சின்ஹாவை ஏன் இங்கு குறிப்பிட வேண்டும்?
அவர்தான் இதற்கு முன்பு தொலைதொடர்பு
அமைச்சராக இருந்தவர். ஐஐடியில் M.Tech படித்த
மனோஜ் சின்ஹாவின் IQ, நிர்மலா அம்மையாரின்
IQவை விட அதிகம்.
மீண்டும் சிதம்பரத்துக்கு வருவோம். மனித குல
வரலாற்றிலேயே மிகவும் வெறுக்கத்தக்க நபராக
சிதம்பரம் ஆகி விட்டார் என்பதை நிரூபிக்க ஆயிரம்
உதாரணங்கள் உண்டு.
ஆனால் சிதம்பரத்தின் பேச்சுக்கள் ஆங்கில ஏடுகளில்
மட்டுமே வெளியாகின்றன. எனவே சிதம்பரத்தின்
மாக்கள் விரோதப் போக்கை அறிந்து கொள்ள,
ஆங்கில ஏடுகளைப் படிக்க வேண்டும். இதற்கு
ஆங்கிலம் அறிந்திருக்க வேண்டும். சாதாரண
ஆங்கில அறிவை வைத்துக் கொண்டு சிதம்பரத்தின்
பேச்சைப் புரிந்து கொள்ள முடியாது. சிதம்பரத்தின்
IQ 120.8 ஆகும். எனவே சிறந்த ஆங்கிலப் புலமை
இருந்தால் மட்டுமே சிதம்பரம் என்ன சொல்கிறார்
என்பதை புரிந்து கொள்ள முடியும்?
ஆனால் சிறந்த ஆங்கிலப் புலமைக்கு நாம் எங்கே
போவது?
**********************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக