புதன், 12 பிப்ரவரி, 2020

கேஜ்ரிவாலின் வெற்றியின் ரகசியம் என்ன?
NGO அரசியல் என்றால் என்ன?
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
கலைஞர், மேனன், ஜெயலலிதா ஆகியோர் கடைப் பிடித்த
அரசியல், கொள்கை கோட்பாட்டு அரசியல் ஆகும்.
அப்படியானால் அவர்கள் பேசிய, பிரச்சாரம் செய்த,
முன்னிறுத்திய அரசியல் என்ன? அதை சமூகநீதி
அரசியல் என்று கொள்ளலாம்.

சமூகநீதி அரசியலைப் பேசித்தான் மேற்கூறிய மூவரும்
கட்சியை வளர்த்தார்கள்; ஆட்சியையும் பிடித்தார்கள்.
பண்பாட்டுத் தளத்தில் மட்டுமே செயல்பட்டு, மொழி
இனம் சாதி போன்ற விஷயங்களை மட்டுமே
இவர்களின் சமூகநீதி அரசியல் முன்னிறுத்தும்.

சாராம்சத்தில் இது குட்டி முதலாளித்துவ அரசியல்
ஆகும். பண்பாட்டுத் தளத்தில் மட்டுமே செயல்படும்
ஒரு வகை அடையாள அரசியல் ஆகும் இது.
பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்த
மட்டில் இந்திய ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளையே
இக்கட்சிகள் கடைப்பிடிக்கும். இந்தியாவில் எந்த ஒரு
மாநிலக் கட்சிக்கும் சொந்தமாகப் பொருளாதாரக்
கொள்கைகள் கிடையாது என்ற உண்மையை
அனைவரும் அறிய வேண்டும்.

கேஜ்ரிவாலின் அரசியலும் குட்டி முதலாளித்துவ
அரசியலே. என்றாலும் கலைஞர் மேனன் ஜெயலலிதா
ஆகிய மூவரின் அரசியலுக்கும் கேஜ்ரிவாலின்
அரசியலுக்கும் பெரிதும் வேறுபாடு உண்டு.

மேற்கூறிய மூவரைப் போல அடையாள அரசியலைக்
கட்டிக் கொண்டு அழுபவர் அல்லர் கேஜ்ரிவால்.
சமூகநீதி அரசியல் என்பதெல்லாம் கேஜ்ரிவாலிடம்
அறவே கிடையாது.

தத்துவம், கொள்கை கோட்பாடு என்பனவெல்லாம்
கேஜ்ரிவாலின் அரசியலில் கிடையாது. (அல்லது
அவற்றுக்கு மிகவும் அற்பமான முக்கியத்துவம்
மட்டுமே உண்டு).

இந்த சமூகத்தில் எதுவும் மாறாது; எல்லாம் அது அது
அப்படித்தான் இருக்கும். சமூகத்தை மாற்ற வேண்டும்
என்று நாம் ரத்தம் கக்க வேண்டிய அவசியம் இல்லை.

மக்களுக்குத் தேவை சிறந்த நிர்வாகம்; பெரிதும்
ஊழலற்ற அல்லது ஊழல் வெளித்தெரியாத ஒரு
நிர்வாகத்தையே மக்கள் விரும்புகிறார்கள்.
கொள்கை கோட்பாடு பற்றியெல்லாம் மக்கள்
பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

சிறந்த நிர்வாகத்தை ஒரு கட்சி கொடுக்குமானால்,
அக்கட்சியே நிரந்தரமாக ஆட்சி செய்யும்.
எனவே சிறந்த நிர்வாகத்தைத் தருவோம்;
நிரந்தரமாக ஆடசியில் இருப்போம். இதுவே
கேஜ்ரிவாலின் அரசியல் ஆகும். இதற்குப் பெயர்தான்
NGO அரசியல்!

1980களில் இந்தியாவில் புற்றீசல்களாக NGOகள்
நுழைந்தன. (NGO = Non Governmental Organisation).
அப்போது அடையாள அரசியலைப் புகுத்துவது
மட்டுமே NGOக்களின் வேலைத்திட்டமாக இருந்தது.
NGOக்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு அரசியல்
கட்சிகள் முளைத்தன. அவற்றில் சில ஆட்சியையும்
பிடித்தன.

மாயாவதியின் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கடசிகள்
NGOக்களால் உருவான கட்சிகளே.

தலித் அடையாளம், முஸ்லீம் அடையாளம், MBC
அடையாளம் ஆகிய அடையாளங்களை முன்னிறுத்திக்
கட்டப்பட்ட அடையாள அரசியல் வெகுவாகப்
பயனளித்தது. அடையாள அரசியல் செல்வாக்கு
அடைய அடைய, வர்க்க அரசியல் மார்க்சிய அரசியல்
ஆகியவை வெகுவாக மங்கத் தொடங்கின. இது
இந்தியாவின் வரலாறு. இதை எவராலும் மறுக்க
இயலாது.

ஒரு கட்டத்தில் அடையாள அரசியல் சலித்துப் போகும்
என்றும் எப்போதுமே அது வெற்றியை மட்டுமே தந்து
கொண்டிருக்காது என்றும் NGOக்கள் அறிவார்கள்.
அதாவது NGOக்களை இயக்கும் ஏகாதிபத்திய
சித்தாந்தவாதிகள் அறிவார்கள். எனவே காலத்துக்கு
ஏற்ப புதுப்புது மோஸ்தரில் வெவ்வேறு வகையான
அரசியலை NGOக்கள் முன்மொழிவார்கள்.

அப்படி NGO சித்தாந்தவாதிகள் முன்மொழிந்த
ஒரு நவீன வகை அரசியலைத்தான் கேஜ்ரிவால்
செயல்படுத்தி வருகிறர். அதுதான் அரசியலற்ற,
நிர்வாகத்திறனை மட்டுமே முன்னிலைப் படுத்துகிற
அரசியல் ஆகும்.

கலைஞர் நிர்வாகத்திறமை அற்றவர் என்று யாராவது
பேசினால், அந்த விமர்சனத்தை அவ்வளவாக
கலைஞர் பொருட்படுத்த மாட்டார். ஆனால் கலைஞர்
சமூகநீதியில்  அக்கறையற்றவர் என்று சொல்லிப்
பாருங்கள்; உங்களின் கழுத்தை நெரித்து
விடுவார்.

ஆனால் கேஜ்ரிவால் அப்படி அல்லர். கேஜ்ரிவாலுக்கு
சமூகநீதியில் அக்கறை கிடையாது என்று சொல்லிப்
பாருங்கள். ஆமடா, அதற்கென்ன இப்போ என்று
கேட்பார் கேஜ்ரிவால். ஆனால், கேஜ்ரிவால்
நிர்வாகத் திறமை அற்றவர் என்று சொன்னால்
போதும், உங்களைக் கொலை செய்துவிட்டு திஹார்
சிறைக்குப் போய் விடுவார் கேஜ்ரிவால்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370ஆவது
பிரிவை ரத்து செய்தபோது கேஜ்ரிவால் அலட்டிக்
கொள்ளவில்லை. பாஜகவையே ஆதரித்தார். மதச்சார்பற்ற
கட்சி என்று தம் கட்சிக்கு ஞானஸ்நானம் செய்யவும்
அவர் விரும்பவில்லை. முற்பட்ட வகுப்பு ஏழைகளுக்கு
10 சதம் இட ஒதுக்கீடு வழங்குவதால் சமூகநீதி
பாதிக்கப்படும் என்பது போன்ற அபத்தமான
உளறல்கள் தற்குறிகளின் மூளையில் உற்பத்தியாகும்
கழிவுகள் என்றே கேஜ்ரிவால் கருதினார்.

மைய நீரோட்ட அரசியலில் முக்கியமானவையாகக்
கருதப்பட்ட பல்வேறு விஷயங்களை கேஜ்ரிவால்
துச்சமாக மதித்தார் என்பதை செய்தித்தாள்
படிப்பவர்கள் அறிவார்கள்.

நிர்வாகத்திறன் மட்டுமே சிறந்த அரசியல் என்னும்
கேஜ்ரிவாலின் கோட்பாட்டில் ஒரு லாபம் உண்டு.
ஒரு கட்சியானது சிறந்த ஆட்சியைக் கொடுத்து
வருமானால், Anti incumbency என்னும் பேய் அவர்கள்
தோட்டத்தின் புளிய மரத்தில் ஏறாது.

2015 தேர்தலிலும் சரி, 2020  தேர்தலிலும் சரி,
மொத்தமுள்ள 70 இடங்களில், 60க்கும் மேற்பட்ட
இடங்களை கேஜ்ரிவால் கைப்பற்றியதன்
காரணம் Anti incumbency factor அங்கு இல்லாததே.

சமூகவியலில் எந்த ஒன்றுக்குமே வரம்புகள் உண்டு.
கேஜ்ரிவாலின் அரசியலற்ற நிர்வாகத் திறன் சார்ந்த
NGO அரசியலுக்கும் வரம்பு உண்டு. (Apolitical NGO politics
based only on good governance has its own limitations).

புதுடில்லி போன்ற காஸ்மோபாலிடன் நகரங்களில்
மட்டுமே இந்த அரசியல் செல்லுபடி ஆகும். இந்த
அரசியல் universal அல்ல; highly localised. இதை feudal
கூறுகளைக் கொண்ட பாஜகவின் அரசியலால்
வெல்ல இயலாமல் போனதில் வியப்பில்லை.

கேஜ்ரிவாலை வீழ்த்த வேண்டுமென்றால், அவரின்
மர்ம ஸ்தானத்தில் அடிக்க வேண்டும். அதாவது
அவரின் அரசு நிர்வாகத் திறனற்ற கோமாளி அரசு
என்றும் ஊழல் நிறைந்த அரசு என்றும் மக்களிடம்
நிரூபிக்க வேண்டும். இதற்கு கேஜ்ரிவால் வாய்ப்புத்
தராதவரை அவரைத் தோற்கடிக்க முடியாது, 2025லும்
கூட.                

ஒட்டுக்குப் பணம் கொடுப்பது என்பது கேஜ்ரிவாலின்
அரசியலில் இல்லை. டில்லி தேர்தலில் ஆம் ஆத்மி,
பாஜக ஆகிய இரு பெரும் கட்சிகளுமே ஓட்டுக்குப்
பணம் கொடுக்கவில்லை என்பது பெரிதும்
பாராட்டத் தக்கது. துரைமுருகனின் மகன் போட்டியிட்ட
வேலூர் இடைத் தேர்தலில் பணப் பட்டுவாடா
செய்வதற்காக, பூத் வாரியாக பணம் ஒதுக்கப்பட்டு
கட்டுக் கட்டாகப் பிடிப்பட்டதை இந்த நேரத்தில்
நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஒட்டுக்குப் பணம் கொடுக்காமல் வெற்றி பெற்ற
கேஜ்ரிவாலின் காலில் விழுந்து வணங்க, விரைவில்
டெல்லி செல்ல உள்ளேன். அதற்கு முன் மெரினா
கடற்கரைக்குச் சென்று ஒட்டுக்குப் பணம்
கொடுப்பதை ஒரு கலையாகவே வளர்த்த திராவிடத்
தலைவர்களின் சமாதியில் காரி உமிழ்ந்துவிட்டே
செல்வேன்.

இந்திய அரசியல்வாதிகளில் கேஜ்ரிவால் அதிகமான
IQ உள்ள தலைவர்களில் ஒருவர். அவரின் பல்வேறு
சிறப்புகளுக்கு அவரின் IQ ஒரு காரணம் ஆகும்.
IQ பற்றிய ஒரு சிறிய கணக்குடன் இந்தக் கட்டுரையை
நிறைவு செய்வோம். வாசகர்கள் கண்டிப்பாக
விடையளிக்க வேண்டும். கணக்கு இதுதான்!

IQ 121ஐக் கொண்டு முதலிடத்தில் இருக்கும்
ப சிதம்பரத்தின் IQவுக்கும் மு க ஸ்டாலின் அவர்களின்
IQக்கும் இடையிலான வேறுபாடானது,
ப சிதம்பரத்தின் IQவுக்கும் கேஜ்ரிவாலின் IQவுக்கும்
இடையிலான வேறுபாட்டின் 10 மடங்காகும்.

மேலும் ப சிதம்பரத்தின் IQ மற்றும் கேஜ்ரிவாலின் IQ
இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டின்
5ஆவது மடியானது (ஐம்மடி = raised to the 5th power)
ஒரு மூன்றிலக்க எண்ணாகும். எனில் மு க ஸ்டாலின்
அவர்களின் IQ என்ன?
******************************************************

கேஜ்ரிவாலின் அரசியல் வெற்றி அடையத்
தொடங்கியதுமே, மார்க்சிஸ்ட் கட்சியானது
ஆயிரம் அடி ஆழத்தில் புதைக்கப் பட்டது.
காங்கிரஸ் 500 அடி ஆழத்தில் புதைக்கப்
பட்டது. பாஜக தோற்கடிக்கப் பட்டிருக்கிறது.

டெல்லி தேர்தல் முடிவு குறித்தும், கேஜ்ரிவாலின்
அரசியல் குறித்தும் ஆழமானதும்
அகல்விரிவானதுமான கட்டுரை இதுவே.
இது மட்டுமே மிகச் சரியானதும் துல்லியமானதுமான,
மார்க்சிய லெனினியப்  பார்வையில் அமைந்த
ஒரே கட்டுரை என்று நியூட்டன் அறிவியல்
மன்றம் பிரகடனம் செய்கிறது.

91க்கு கீழ் எவரின் IQவையும் கொண்டு போக
விரும்பவில்லை. அதற்குக் கீழ் போனால்
ஆட்டிசப் பாதிப்பு இருக்கக் கூடும்
என்கிறார்கள் சைக்கியாட்ரிஸ்டுகள்.
ஆட்டிசம் என்பது மருத்துவர்களின் ஏரியா.
எனவே எங்களுடைய ஏரியாவுக்குள் நான்
நின்று கொள்கிறேன். 

We measure the IQ of normal people only.
So I have assumed that Mr MKS is a normal person.
This assumption may be wrong.The competent people
should declare it if it is wrong.
 ------------------------------------------
oruvelai naam

ஒருவேளை நாம் தோற்று விட்டால் என்ன செய்வது
என்று கருதிய கேஜ்ரிவால், on the safe side, வாக்குப் பதிவு
எந்திரங்கள் மீது பழி போட்டு ஒரு ஸ்டேட்மெண்டைக்
கொடுத்துள்ளார். இந்தியா ஒரு அறிவியல் தற்குறி
தேசம் என்பதால், இந்த அபத்தமெல்லாம் எடுபடும்
என்பதை கேஜ்ரிவால் நன்கறிவார்.

EVMகளில் மோசடி செய்ய இயலும் என்ற பொய்யை
எல்லோரும் நம்புவதில்லை. என்றாலும் படிப்பறிவற்ற
ஒரு தற்குறிக் கூட்டம் நம்பக்கூடும். டெல்லியின்
படிப்பறிவுள்ள மக்கள் இதை நம்புவதில்லை. அதே
நேரத்தில் படிப்பறிவற்ற மக்களும் டெல்லியில்
உண்டு. அவர்கள் இதை நம்பக்கூடும் என்று
கேஜ்ரிவால் நினைக்கிறார்.


தத்துவார்த்த ரீதியாக ஆராய்ந்தால்
கேஜ்ரிவாலின் வெற்றி என்பது
இந்துத்துவத்திற்கு எதிரான வெற்றி அல்ல.
இதை உணர மறுப்பவன் முழு மூடன்!

ஏற்கத் தக்க இந்துத்துவம்
ஏற்க இயலாத இந்துத்துவம்
என்று இருவகையான இந்துத்துவம் உண்டு.
அதாவது ஒரே இந்துத்துவத்தை வெவ்வேறு
normalityயில் தருவதுதான் இது.
(Normality என்பது ஒரு வேதியியல் வார்த்தை.
இங்கு வேதியியல் பொருளிலேயே ஆளப்படுகிறது)    

கேஜ்ரிவாலின் இந்துத்துவம் ஏற்கத் தக்க
இந்துத்துவம் ஆகும். அதாவது palatable இந்துத்துவம் ஆகும்.
இதை உணர மறுப்பது அறியாமையே ஆகும்.
--------------------------------------------------------------------------------
இந்தியாவின் தேர்தல் அரசியல் இந்துத்துவத்தைச்
சுற்றியே மையம் கொண்டுள்ளது ஏன்?
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
இந்த மில்லேனியத்திற்குப் பிறகான இந்தியாவின்
தேர்தல் அரசியல் என்பது இந்துத்துவத்தைச்
சுற்றியே மையம் கொண்டுள்ளது. நாட்டின் பிரதான
நீரோட்டத்தில் இந்துத்துவம் வலுவான இருப்பைக்
கொண்டுள்ளது.

இந்துத்துவத்தை ஆதரிக்க வேண்டும் அல்லது
எதிர்க்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இந்தியாவில்
அரசியல் செய்யும் ஒவ்வொருவரின் மீதும் உள்ளது.

எனினும், இந்துத்துவத்திற்கு இந்தியாவின்
28 மாநிலங்களிலும் ஒரு சீரான ஆதரவோ அல்லது
ஒரு சீரான எதிர்ப்போ இல்லை. உபி, குஜராத் போன்ற
மாநிலங்களில் இந்துத்துவத்திற்கு ஆதரவு உள்ளது.
தமிழ்நாடு கேரளம் போன்ற மாநிலங்களில் எதிர்ப்பு
உள்ளது.

2014, 2019 தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று மத்திய
ஆட்சியைப் பிடித்துள்ளது. இது 100 சதமும்
இந்துத்துவத்திற்குக்  கிடைத்த வெற்றி என்று
கருதுவது பேதைமை. இந்துத்துவம் தவிர்த்த ஏனைய
காரணிகளும் உண்டு.

அதே போல, பாஜகவின் தோல்வியை 100 சதமும்
இந்துத்துவத்தின் தோல்வி என்று வர்ணிப்பதும்
பேதைமை ஆகும். உதாரணமாக, டெல்லித்
தேர்தலில் பாஜக வெறும் ஒற்றை இலக்க (8/70)
இடங்களையே பெற்றுத் தோற்றது. எனினும் இது
இந்துத்துவத்தின் தோல்வி அல்ல.  

தத்துவார்த்த ரீதியாக ஆராய்ந்தால்
கேஜ்ரிவாலின் வெற்றி என்பது
இந்துத்துவத்திற்கு எதிரான வெற்றி அல்ல.

ஏற்கத் தக்க இந்துத்துவம்
ஏற்க இயலாத இந்துத்துவம்
என்று இருவகையான இந்துத்துவம் உண்டு.
அதாவது ஒரே இந்துத்துவத்தை வெவ்வேறு
normalityயில் தருவதுதான் இது.
(Normality என்பது ஒரு வேதியியல் வார்த்தை.
இங்கு வேதியியல் பொருளிலேயே ஆளப்படுகிறது).

கேஜ்ரிவாலின் இந்துத்துவம் ஏற்கத் தக்க இந்துத்துவம்
ஆகும். காஸ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பாஜக ரத்து
செய்த பொது, அதை கெஜ்ரிவால் எதிர்க்கவில்லை.

டில்லியில் ஷகீன்பாக் என்ற இடத்தில் நடந்த
CAA எதிர்ப்புப் போராட்டத்தை கேஜ்ரிவால்
சீந்தவே இல்லை. ஒரு படி மேலே போய், அமித்ஷா
அப்போராட்டத்தி ஒடுக்க வேண்டும் என்று
பேசியவர்தான் கேஜ்ரிவால்.

மூர்க்கத்தனமாக இந்துத்துவத்தை எதிர்த்தால்
புதைகுழிக்குப் போக வேண்டியதுதான் என்பதை
கேஜ்ரிவால் நன்கறிவார். ஆனால் IQ குன்றிய
சோனியா, ராகுல் குடும்பத்தினருக்கு இந்த
உண்மை ஒருபோதும் உறைக்காது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை மாயவதியோ
அகிலேஷ் யாதவோ எதிர்க்கவில்லை. மாறாக
ஆதரிக்கவே செய்வார்கள். ஏன்? இந்துத்துவ
அஜெண்டாவை மாயாவதியும் அகிலேஷும்
ஆதரிக்கக் காரணம் என்ன? அதற்கான தேவை
என்ன?

அதை எதிர்த்தால் மக்களின் ஆதரவை இழக்க
நேரிடும் என்று மாயாவதியும் அகிலேஷும்
நன்கறிவார்கள். காங்கிரசின் உள்ளூர்த் தலைவர்களும்
ராமர் கோவிலை ஆதரிப்பார்கள். ஆனால் சோனியா
ராகுல் தலைமையானது ராமர் கோவிலை எதிர்த்து
மக்களிடம் இருந்து தனிமைப் படும்.

இதன் விளைவு இந்தியாவின் எந்த ஒரு பொதுவான
தொகுதியிலும் நின்று ராகுல் காந்தியால் வெற்றி
பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது.
தீவிரமான மத அபிமானம் உடைய இஸ்லாமியப்
பெருமக்கள் நிறைந்த வயநாடு போன்ற
தொகுதிகளில் மட்டுமே ராகுல் காந்தியால் நின்று
வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது.
2024 தேர்தலிலும் இதே அவல நிலைதான் நீடிக்கும்.

தமிழ்நாட்டில் மு க ஸ்டாலினின் ஒரே கவலை இதுதான்.
திமுக ஒரு இந்து விரோதக் கட்சி என்று மக்கள்
கருதி விடக்கூடாது என்பதுதான். இந்த அச்சத்தால்தான்
அவர் பிரசாந்த் கிஷோரிடம் சரண் அடைகிறார்.

ஒரு சில உதாரணங்களை மட்டுமே இங்கு சொல்லி
இருக்கிறேன். சொல்லாமல் விடப்பட்டதையும்
சேர்த்தே வாசகர்கள் சிந்திக்க வேண்டும்.

370 ரத்து, ராமர் கோவில், முத்தலாக் ரத்து போன்ற
இந்துத்துவ அஜெண்டாவை பாஜக தன் சொந்த 
பலத்தில் நிறைவேற்றினாலும், அவற்றுக்கு ஏனைய
so called மதச்சார்பற்ற கட்சிகளின் ஏகோபித்த
ஆதரவு இருந்தது என்பது கண்கூடு. நாடாளுமன்ற
வாக்கு விவரங்களைப் பார்க்கவும்.

இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்
இதுதான். பாஜக தன்னுடைய இந்துத்துவ அஜெண்டாவை
ஒரு தேசிய அஜெண்டாவாக மாற்றுவதில் வெற்றி
அடைந்துள்ளது. பாஜகவின் அஜெண்டாவை
பல்வேறு so called மதச்சார்பற்ற கட்சிகளும்
மக்களும் ஏன் ஆதரிக்கின்றனர்? மக்களின்
ஆதரவு இல்லாமல் பாஜகவால் தன்னுடைய
நிகழ்ச்சி நிரலை ஒருபோதும் நிறைவேற்ற
இயலாது.

ஆக, இப்போது மில்லியன் டாலர் கேள்வி இதுதான்.
பாஜகவின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை மக்கள்
(பெருவாரியான மக்கள்) ஏன் ஆதரிக்கிறார்கள்?
என்ன காரணம்? அடுத்துப் பார்ப்போம்.
******************************************************* 
 



   
  





 

சொல்லுங்க. வணக்கம்.


உள்ளாட்சித் தேர்தலில் ஏதேனும் வாய்ப்பு
கிடைத்ததா?

ஒரு சீரான ஆதரவோ
ஒரு சீரான எதிர்ப்போ கிடையாது.
விளக்கக் கட்டுரை நாளை.


உங்களுக்கு ஏதாவது நல்லது நடந்தால்
முதல் மகிழ்ச்சி அடைவேன் நான்.

சீட்டு  கிடைக்கவும் வெற்றி பெறவும்
வாழ்த்துகிறேன்.நன்றி.  


நன்றி தோழர்! எல்லா நலமும்
தங்களுக்கு விளைக.  பார்வையால்

ராகு கேது பற்றிய குறிப்பு மிகவும் தொன்மை வாய்ந்தது.
ஆனால் இந்த விளக்கம் நவீன விளக்கமே. கோப்பர்
நிக்கசுக்குப் பிறகுதான் சூரியனைக் கோள்கள்
சுற்றுகின்றன என்று தெரிய வந்த பிறகு இந்தப்
புரிதலை மானுடம் வந்தடைந்தது.

விரிவான கட்டுரை அறிவியல் ஒளி இதழில்
உள்ளது. This is an old post.


மனிதன் சுதந்திர சித்தம் (free will) உடையவன்
என்று மானுடவியல் கூறுகிறது. மனித சிந்தனை
குறித்த பல்வேறு தத்துவங்களும் மனித சிந்தனை
கட்டற்றது என்றே கூறுகின்றன. இந்தப் பிரபஞ்சத்தில்
எதனினும் உயர்ந்த இடத்தை சிந்தனைக்கு
வழங்குகிறார் ஆதி சங்கரர்.

ஆக, சுதந்திர சித்தம் உடைய மானுடத்தை கோள்களின்
சஞ்சாரம் எவ்வாறு பாதிக்க முடியும்?


இதற்குப் பதில் சொல்ல ஆரிய பட்டரை, 
வராக மிகிரரை முழுசாகப் படிக்க வேண்டும்.
இது எனக்குச் சாத்தியப்படாது என்பதே என் சூழல்.
வராக மிகிரர் மன்றம் என்னும் ஓர் அறிவியல்
மன்றம் உள்ளது. என் நண்பர் கோபுவும் பத்ரி
சேஷாத்ரி அவர்களும் நடத்துகின்றனர்.

தொன்மையான இந்திய வானியல் என்ற பொருளில்
ஒரு தொடர் கூட்டத்தை  வரும் ஞாயிறு முதல் அவர்கள்
நடத்துகின்றனர்.அவர்களை நீங்கள் அணுகலாம்.

இக்கருத்தை மறுக்க முடிந்தால் மறுக்கலாமே.
என்னிடம் எதுவும் மறுப்பு இல்லை.

இதை ஏற்பதற்கில்லை. அறிவியலின் "அனுமானம்"
என்பதையும் ஏற்பதற்கில்லை. எனினும் இது
குறித்து ஓரிரு வரிகளில் பதிலளிக்க இயலாது.
சிறிது காலம் கழித்து விரிவான விளக்கக்
கட்டுரை எழுத உள்ளேன்.

விளக்கக் கட்டுரை பின்னர்.


 




 

   


         


  


1 கருத்து:

  1. http://tamilmarxism.blogspot.com/2020/02/ngo.html
    30 IQ உள்ள மனிதர்களின் மனநிலை எப்படி இருக்கும். நான் சராசரி மனிதன். ஆனால் அந்த மனநிலை கண்டிப்பாக உங்களை போன்றோரை இப்படி எழுதி கொண்டு இருக்க வைக்கும் என்பது மட்டும் எனக்கு புரிகிறது.
    நன்றி

    பதிலளிநீக்கு