திங்கள், 3 பிப்ரவரி, 2020

ஆடம் ஸ்மித்தும் ராஜாத்தி அம்மாளும்
நாட்பட்ட மலச்சிக்கலும்!
பட்ஜெட் 2020 பற்றிய பகுப்பாய்வுக் கட்டுரை!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
நாட்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் அனைவரும்
நிர்மலா அம்மையாரின் பட்ஜெட் குறித்து
மயிர் பிளக்கும் விவாதத்தில் இறங்கி விட்டார்கள்.

இந்தியாவுக்கான பட்ஜெட் 2045ஆம் ஆண்டு வரையிலும்
ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டது. இந்த உண்மை
மேற்படி உதிர்ந்த ரோமங்களுக்குத் தெரியாது..
ஆம், 1995 முதல் 2045 வரையிலான 50 ஆண்டுகளின்
பட்ஜெட் ஏற்கனவே போடப்பட்டு விட்டது.

1995 என்ன கணக்கு? இந்திய பொருளாதாரத்தின்
வரலாற்றை கிமு கிபி என்று பிரித்தால், 1995க்கு
முன், 1995க்குப் பின் என்று பிரிக்க வேண்டும்.

1995ல்தான் முதன் முதலாக இந்தியப் பொருளாதாரம்
திசை மாறியது. அதுவரை பயணம் செய்த திசைக்கு
நேர் எதிரான திசையில் இந்தியப் பொருளாதாரம்
பயணித்தது.

1995 ஜனவரி 1ஆம் தேதியன்று இந்தியா WTOவில்
உறுப்பினராகச் சேர்ந்தது. LPG கொள்கைகள்
செயல்பாட்டுக்கு வந்தன. இறக்குமதி மீதான
கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு
இந்தியச் சந்தையை அந்நிய நாட்டுப் பொருட்கள்
ஆக்கிரமித்தன.

அப்போது (1995 மற்றும் 1996) ஒரு பட்ஜெட் போட்டார்
டாக்டர் மன்மோகன் சிங். அதுதான் மூல பட்ஜெட்.
அதாவது இன்னும் 50  பட்ஜெட்டுகளுக்கான மூல
ஃ பார்முலா அது. அதில் காலத்துக்கேற்றபடி தேவையான
மதிப்புகளைப் பிரதியிட்டால் போதும் (substituting the values).
அந்தந்த ஆண்டுக்குத் தேவையான பட்ஜெட் கிடைத்து
விடும்.

இதை ஒரு ஃபார்முலா மூலம் விளக்கலாம்தான்.
ஆனால் அப்படி விளக்கினால் IQ < 91 உள்ளவர்களால்
படித்துப் புரிந்து கொள்ள முடியாது. அது என்ன
IQ 91? அதற்கு கீழ் போனால், ஆட்டிசம் என்று
கொள்ளலாம் என்கிறார் எனது நண்பரான ஒரு
சைக்கியாட்ரிஸ்ட். 

எனவேதான் எனது முந்தைய கட்டுரையில்,
ஆண்டுதோறும் நிதியமைச்சர் பட்ஜெட் சமர்ப்பிப்பதை
தினசரி மலம் கழிப்பதுடன் ஒப்பிட்டு எழுதினேன்.
மனித குல வரலாற்றிலேயே பட்ஜெட் சமர்ப்பிப்பதை
மலம் கழிப்பதுடன் ஒப்பிட்டு எழுதிய ஒரே ஆள்
நான்தான். இப்படி ஒப்பிட்டு எழுத அறிவாற்றலுடன்
துணிச்சலும் வேண்டும். என்றாலும் தமிழ்நாட்டின்
போலி இடதுசாரிகள் இதைக் கண்டு கொள்ளவில்லை.

ஆட்டிச இடதுசாரிகள்!
---------------------------------
Adjective qualifies the noun! இந்திய இடதுசாரிகளுக்குப்
பொருத்தமான ஒரு adjective எதுவென்றால் ஆட்டிசம்தான்.
நாடாளுமன்ற இடதுசாரிகள் மற்றும் நாடாளுமன்றப்
பாதையை ஏற்காத இடதுசாரிகள் என சகல தரப்பு
இடதுசாரிகளுக்கும் பொருத்தமான adjective
ஆட்டிசம்தான். எனவே ஆட்டிச இடதுசாரிகள் என்ற
சொல்லாட்சியை தமிழ்ச் சமூகத்திற்கு வழங்குகிறேன்.

ஆடு + இசம் = ஆட்டிசம் என்று யாரும் கருதி விடக்
கூடாது. இங்கு ஆட்டிசம் (autism) என்பது ஆங்கிலச் சொல்.
ஆட்டிசம் குறித்து நன்கறிந்திட, தக்க
சைக்கியாட்ரிஸ்டுகளை நாடவும். எனினும்
ஆட்டிச இடதுசாரிகள் என்றால் ஆட்டு மூளை
இடதுசாரிகள் என்று அனைவரும் புரிந்து கொள்ளவும்.

எலும்பு கவ்வுவதில் முற்போக்கு!
----------------------------------------------
1995ல் LPG கொள்கைகளும் உலகமயப்பட்ட
ஏகாதிபத்திய சார்புப் பொருளாதாரக் கொள்கைகளும்
இந்தியாவில் நடைமுறைக்கு வந்தபோது,
ஆட்டிச இடதுசாரிகள் மூச்சுத் திணறிப் போனார்கள்.
அவர்களுக்குத் தலையும் புரியவில்லை; வாலும்
புரியவில்லை. இந்தப் புதிய சூழலை ஆதரிப்பதா
எதிர்ப்பதா, எப்படி எதிர் கொள்வது என்று ஒரு இழவும்
புரியவில்லை. புதிய பொருளாதாரத்தை
எதிர்கொள்வதற்கான எந்தவொரு ப்ளூ பிரிண்ட்டையும்
அவர்கள் தயாரிக்கவில்லை; இன்று வரை தயாரிக்க
இயல்வும் இல்லை.

எனவே ஆட்டிச இடதுசாரிகளின் மலச்சிக்கலுக்கு
கால் நூற்றாண்டு கால (1995-2020) துர்நாற்ற வரலாறு
உண்டு.

ஆட்டிச இடதுசாரிகள் யாருக்குச் சேவை செய்கிறார்கள்?
குரோனி முதலாளித்துவ, லஞ்ச ஊழல் பெருச்சாளிகளான
ராஜாத்தி அம்மாள், ஜகத் ரட்சகன், பாரிவேந்தர்,
கேடி பிரதர்ஸ், ஆண்டிமுத்து ராசா ஆகியோரைப்
பல்லக்கில் வைத்துச் சுமப்பதே நமது ஆட்டிச
இடதுசாரிகளின் புரட்சிப்பணி! இதற்கான எலும்புகளை
மு க ஸ்டாலின் அவ்வப்போது இவர்களை நோக்கி
வீசுவதும், இவர்கள் அதை லாவகமாய் வாயில்
கவ்விக் கொள்வதும் முற்போக்கான கலை
வடிவம் என்கிறது குட்டி முதலாளித்துவ தமுஎகச.

பட்ஜெட் என்றால் தனியார்மயம்தான்!
-----------------------------------------------------------
1995 முதல் நாளது தேதி வரை இந்தியாவில் எல்லா
பட்ஜெட்டும் தனியார்மய பட்ஜெட்டே. தனியார்மயம்
இல்லாத ஒரு பட்ஜெட்டை யாராவது காட்ட முடியுமா?

பட்ஜெட் என்பது அரசின் கொள்கையின் பிரதிபலிப்பு!
தனியார்மயம்தான் அரசின் கொலை என்று ஆன
பின்னால், யார் பட்ஜெட் போட்டாலும் அதில்
தனியார்மயம் இருக்கும். எனவே எல் ஐ சி
தனியார்மயம் ஆகிறதாமே என்பதில் எந்தச்
செய்தி மதிப்பும் இல்லை (No news value at all).

ஏதேனும் ஒன்று தனியார்மயம் ஆகாமல் இருந்தால்
அதுதான் செய்தி! (உதாரணம் BSNL).

ஆடம் ஸ்மித்தும் ராஜாத்தி அம்மாளும்!
-----------------------------------------------------------
பூர்ஷ்வா பொருளாதாரத்தின் தந்தை ஆடம் ஸ்மித்!
இந்தியாவின் புதிய பொருளாதாரத்தின் தந்தை
டாக்டர் மன்மோகன் சிங். அதன் சிற்பிகள் நரசிம்மராவ்,
ப சிதம்பரம் ஆகியோர். தாராளமயம் வந்த பிறகுதான்
ராஜாத்தி அம்மாள் போன்ற புழுவினும் இழிந்த
தற்குறிகளால் பொருளாதார நிபுணராக முடிந்தது.
சொத்து சேர்க்க முடிந்தது; வெளிநாடுகளில் சொத்து
வாங்கிக் குவிக்க முடிந்தது. புதுப்பணக்காரர்கள் என்ற
புதிய வர்க்கம் இந்தியாவில் உருவானது. 

கழுதை காமம் கத்தித் தீரும்!
--------------------------------------------
கழுதைகளுக்கு காம உணர்வு மிகுந்த உடனே 
அவை காள் காள் என்று கத்தத் தொடங்கும்.
கத்திக் கத்தி, தொண்டை வறண்டு, சக்தியெல்லாம் 
கத்துவதிலேயே செலவழிந்து கடைசியில் 
கழுதைகளின் காமம் அடங்கி விடும். இதையே 
கழுதை காமம் கத்தித் தீரும் என்ற பழமொழி
உணர்த்தும்.

நமது ஆட்டிச இடதுசாரிகளும் ஒவ்வொரு பட்ஜெட்
வந்ததுமே சில நாட்கள் கத்திப்பின்னர் அடங்கி 
விடுவார்கள். இதை கடந்த 25 ஆண்டுகளாக 
இந்த நாடு பார்த்து வருகிறது.

ஆக, பட்ஜெட் சமர்ப்பிப்பதும் மலம் கழிப்பதும் சமம் 
என்று நான் சொன்னது சரிதான் என்று இங்கு 
நிரூபித்து இருக்கிறேன். மறுக்க முடியுமா?
*********************************************************      



 
       
   

   


  



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக