கட்டாய ஓய்வா? விருப்ப ஓய்வா?
ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் ஒய்வு பெற்றது ஏன்?
BSNL திவால் ஆகிறதா?
-----------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலாளர், NFTE BSNL, சென்னை.
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
பத்தாண்டுகளுக்கு முன்பு BSNL நிறுவனம் நஷ்டம்
அடையத் தொடங்கி இருந்த நேரம். இது டாக்டர்
மன்மோகன் சிங்கிற்கு அதிர்ச்சி அளிக்கிறது.
அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்புதான் இதே
BSNL நிறுவனம் ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில்
ரூ 10,000 கோடி லாபம் ஈட்டி இருந்தது.
ரூ 10,000 கோடி லாபம் ஈட்டிய BSNLல் ஏன் நஷ்டம்
வருகிறது என்று ஆராய்ந்து அறிய ஒரு குழுவை
அமைத்தார் டாக்டர் மன்மோகன் சிங்.
சாம் பித்ரோடா (Sathyan Gangaram Pithroda) என்னும்
தொழில்நுட்ப நிபுணரின் தலைமையில் அமைக்கப்
பட்ட அந்தக்குழு BSNL குறித்து ஆய்ந்தறிந்து ஒரு
அறிக்கையைச் சமர்ப்பிக்கிறது.
யார் இந்த சாம் பித்ரோடா? இந்தியத் துணைக்
கண்டத்தின் மாபெரும் தொழில்நுட்ப அறிஞர்.
ராஜிவ் காந்தி காலத்தில் டெலிகாம் கமிஷனின்
தலைவராக இருந்தவர். அந்நியத் தொழில்நுட்பத்தில்
அமைந்த தொலைபேசி எக்சேஞ்சுகளுக்குப்
பதிலாக, சுதேசித் தொழில்நுட்பத்தில் அமைந்த
CDOT எனப்படும் எக்சேஞ்சுகளை உருவாக்கியவர்
(CDOT = Centre for Development of Telematics).
BSNLன் நிலைமைகளை ஆராய்ந்த சாம் பித்ரோடா,
BSNLல் incipient sickness நிலவுவதாகத் தெரிவித்தார்.
Incipient sickness என்றால் என்ன என்று தெரியாமல்
இந்தக் கட்டுரையை மேற்கொண்டு படிக்க முடியாது.
(Incipient sickness = ஆரம்பநிலையில் உள்ள நலிவு)
சாம் பித்ரோடாவின் அறிக்கை 2012ல் வெளியானது.
BSNL குறித்து ஆராய மோடி அரசும் ஐஐஎம் அகமதாபாத்
நிபுணர் குழுவைப் பணித்தது. அந்தக் குழுவும்
சாம் பித்ரோடாவின் அறிக்கையையே வழிமொழிந்து,
BSNLல் incipient sickness நிலவுவதாகத் தெரிவித்தது.
அதே Incipient sickness! இரண்டு நிபுணர்களும் ஒரே
கருத்தையே தெரிவித்து உள்ளனர். இடைவெளி
பத்தாண்டுகளாக இருந்த போதிலும், BSNL பற்றிய
மதிப்பீடு மாறவில்லை. இது மிகவும் குறிப்பிடத்தக்க
அம்சம்.
ஆரம்ப நிலையிலான நலிவு தீவிரம் அடைந்து,
நலிவுறுதல் முற்றிப்போய், மூழ்கும் நிலையில்
BSNL இல்லை என்பதை இரண்டு நிபுணர்களின்
அறிக்கைகளும் தெளிவு படுத்துகின்றன.
தொடர்ந்து incipient sickness என்ற நிலையிலேயே
BSNL நீடிக்கிறது. BSNL என்பது யானை போன்றது.
அது படுத்தாலும் குதிரை மட்டம்!
எனவே BSNL மூழ்கி விட்டது; திவாலாகி விட்டது;
BSNL ஐ விற்கப் போகிறார்கள் என்றெல்லாம்
தனியார் நிறுவனங்களின் கைக்கூலிகள் பேசுவதில்
எந்த உண்மையும் இல்லை என்று மக்கள் புரிந்து
கொள்ள வேண்டும். வெறும் incipient sickness காரணமாக
எந்த நிறுவனமும் திவால் ஆகாது.
BSNL குறித்துப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால்,
வாசகர்களுக்கு குறைந்த பட்சமான அறிவியல்
தொழில்நுட்ப அறிவு வேண்டும். குறைந்தது
ப்ளஸ் டூ வரையிலான இயற்பியல் கணித அறிவு
தேவைப்படும். அதாவது 12ஆம் வகுப்பு இயற்பியல்
மாணவனின் அறிவியல் புரிதல் கண்டிப்பாக வேண்டும்.
CDOT எக்சேஞ்சு பற்றி வாசகர்கள் தெரிந்து வைத்திருக்க
வேண்டிய தேவை இல்லை. அது துறை சார்ந்த
தொழில்நுட்ப விஷயம். ஆனால் சாம் பித்ரோடா
பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.
ஊழியர்களை உபரியாக்கிய நவீன தொழில்நுட்பம்!
----------------------------------------------------------------------------------
BSNL என்பது முற்றிலும் அறிவியல் தொழில்நுட்பத்தால்
இயங்கும் ஒரு துறையாகும். மத்திய அரசின்
50 துறைகளில் மூன்றே மூன்று துறைகள் மட்டுமே
அறிவியல் தொழில்நுட்பத்தை அதிகமாகப்
பயன்படுத்துபவை.
1) அணுசக்தித்துறை 2) பாதுகாப்பு 3) தொலைதொடர்பு.
1980களில் தொலைபேசித் துறையில் நவீன மயமும்
கணினிமயமும் தொடங்கின.பழைய தொழில்
நுட்பத்திலான Manuel எக்சேஞ்சுகள், semi automatic
எக்சேஞ்சுகள் ஆகியவை படிப்படியாக அகற்றப்பட்டு
E10B வகை எக்சேஞ்சுகள் நிறுவப்பட்டன. Analogueல்
இருந்து Digitalக்கு தொழில்நுட்பம் மாறியது.
Fully automated மற்றும் fully computerised ஸ்விட்ச்சுகளைக்
கொண்ட எக்சேஞ்சுகள் செயல்பாட்டுக்கு வந்தன.
1995ல் இந்தியத் தொலைதொடர்புத்துறை Wireல்
இருந்து Wirelessக்கு மாறியது. மொபைல் சேவைகள்
அறிமுகம் ஆயின.
அக்டோபர் 1ஆம் தேதி 2000ல் அதுவரை அரசுத்
துறையாக இருந்த தொலைதொடர்பானது BSNL
என்ற பொதுத்துறை நிறுவனமாக மாற்றப் பட்டது.
முன்னதாக 1987லேயே மும்பை மற்றும் டெல்லியின்
தொலைதொடர்பு MTNL என்னும் பொதுத்துறை
நிறுவனமாக மாற்றப்பட்டு இருந்தது.
சுருங்கக் கூறின், 1980 முதல் 2000 வரையிலான
இருபதாண்டுகளில் BSNL நிறுவனம் முற்றிலும்
நவீன தொழில்நுட்பத்துக்கு மாறி இருந்தது.
இதன் விளைவாக சுமார் ஒன்றரை லட்சம் பேர்
உபரி (excess staff) ஊழியர்களாக மாறி இருந்தனர்.
ஊழியர்கள் உபரி ஆனது எப்படி?
----------------------------------------------------
ஒரு எளிய உதாரணத்தால் தொழிலாளர்கள் எப்படி
உபரி ஆயினர் என்று பார்ப்போம்.
சென்னையில் இருந்து டெல்லிக்குச் செய்தி (message)
அனுப்ப வேண்டுமெனில், இதற்கு சென்னை-டெல்லி
என்று ஒரு சர்க்யூட் வேண்டும். இது ஒரு point to point சர்க்யூட்
ஆகும். அன்றைய தொழில்நுட்பத்தில் இரண்டு
இடங்களை இணைக்க வேண்டுமெனில், ஒரு
point to point circuit மூலமாகத்தான் இணைக்க முடியும்.
இது போல சென்னை-கொல்கொத்தா, சென்னை-மும்பை,
சென்னை-தஞ்சை, சென்னை-திருச்சி என்று நிறைய
point to point சர்க்யூட்கள் தேவைப்படும். சென்னையில்
மட்டும் இவ்வாறு குறைந்தது 100 point to point சர்க்யூட்கள்
தேவைப்படும். அப்போதுதான் குறைந்தபட்ச
connectivity கொடுக்க முடியும்.
மேற்கூறிய 100 point to point சர்க்யூட்களுக்கு 150 பேர்
தேவைப்படும். ஆப்பரேட்டர்கள், டெக்னீஷியன்கள்,
எழுத்தர்கள், சூப்பர்வைசர்கள், எஞ்சீனியர்கள்,
என்று 150 பேர் இந்த சர்க்யூட்களில் வேலை செய்யத்
தேவைப் படுவார்கள்.
நவீன தொழில்நுட்பமானது point to point சர்க்யூட்களை
முற்றிலுமாக அகற்றி விட்டது.அதற்குப் பதிலாக
100 சர்க்யூட்களையும் ஒரே ஒரு ஸ்விட்ச்சிங்
சிஸ்டத்தில் (Switch) நவீன தொழில்நுட்பம் உள்ளடக்கி
விட்டது. இந்த ஸ்விட்ச்சைக் கையாள முன்பு போல
150 பேர் தேவையில்லை.
ஆப்பரேட்டர், டெக்னீஷியன், சூப்பர்வைசர், என்ஜீனியர்
என்று இந்த சிஸ்டத்தில் வேலை செய்ய அதிகபட்சம்
50 பேர் போதும். அதாவது 150 பேர் வேலை செய்த
இடத்தில் இப்போது 50 பேரே அதிகம். மீதி 100 பேரை
நவீன தொழில்நுட்பம் உபரியாக்கி விட்டது. அவர்கள்
நிறுவனத்துக்குத் தேவையற்றவர்களாகி விட்டனர்.
அதாவது மூன்றில் இரண்டு பங்கினர் உபரியாகி
விட்டனர்.
1995 முதல் வயர்லெஸ்சுக்கு தொலைத்தொடர்பு
மாறி விட்டது. இதன் விளைவாக நாடெங்கும்
வயர்லெஸ் கோபுரங்களை நிறுவ வேண்டிய தேவை
ஏற்பட்டது. இது அடுத்த கட்ட தொழில்நுட்ப
முன்னேற்றம். முன்பு கூறியது நவீன மயத்தின்
முதல் கட்டம். வயர்லெஸ் என்பது நவீன மயத்தின்
இரண்டாம் கட்டம்.
இதில் வேலை செய்யத் தேவையான நவீன தொழில்நுட்ப
அறிவு பழைய ஊழியர்களுக்கு இயல்பாகவே இல்லை.
எனவே communication engineering படித்த பொறியியல்
பட்டதாரிகளை BSNL நிறுவனம் வேலைக்கு எடுத்தது.
பொறியியல் டிப்ளமா படித்தவர்களை Technical Asst
வேலைக்கு எடுத்தது. காலப்போக்கில் இவ்வாறு
வேலைக்கு எடுக்கப்பட்டோரின் எண்ணிக்கை
பல்லாயிரமாக உயர்ந்தது.
ஒருபுறம் நவீன தொழில்நுட்பப் பகுதியில் (வயர்லெஸ்)
ஆட்கள் இருந்தும் பழைய ஊழியர்களைப் பயன்படுத்த
முடியாத நிலை! மறுபுறம் பல்லாயிரக் கணக்கில்
புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்ட பொறியியல்
பட்டதாரிகள்! இதன் விளைவாக BSNL நிறுவனத்தின்
ஊழியர்களின் Salary Bill காலப்போக்கில் மொத்த
வருவாயில் 68 சதம் என்ற அபாய அளவை எட்டியது.
BSNL உருவாக்கப் பட்டது 01.10.2000ல் என்பதை
வாசகர்கள் நினைவில் இருத்த வேண்டும். அப்போதே
குறைந்தது ஒரு லட்சம் உபரி ஊழியர்களை BSNL
நிறுவனம் கொண்டிருந்தது. எனினும் உபரி ஊழியர்களில்
ஒருவர் கூட வெளியேற்றப் படவில்லை. இதற்கான
பெருமை முழுவதும் தொலைதொடர்பின் தானைத்
தலைவர் ஓம் பிரகாஷ் குப்தா அவர்களையும் BSNLன்
கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களையுமே சாரும்.
சாம் பித்ரோடா குழு ஒரு லட்சம் பேரை VRSல்
வெளியேற்ற வேண்டும் என்று அறிக்கை அளித்தது.
இது நடந்தது 2012ல். அப்போது BSNLல் ஊழியர்
எண்ணிக்கை மூன்று லட்சம் ஆகும். இதற்காகும்
செலவு பற்றிய மதிப்பீடு அன்று ரூ 12,000 கோடி மட்டுமே.
ஆனால் டாக்டர் மன்மோகன்சிங்கின் அரசு ரூ 12,000
கோடியை BSNLன் VRSக்கு வழங்க மறுத்து விட்டது.
சாம் பித்ரோடாவின் VRSல் ஒரு லட்சம் என்ற இலக்கு
நிர்ணயிக்கப் பட்டு இருந்தது. ஆனால் இன்றைய
VRSல் எவ்வித இலக்கும் நிர்ணயிக்கப்படாமலேயே
ஒரு லட்சம் பேர் VRSல் சென்றுள்ளனர் (BSNL plus MTNL).
இன்றைய VRS என்பது ரூ 80,000 கோடி மதிப்பிலான
BSNLன் புத்தாக்கத் திட்டத்தின் ஒரு பகுதி.
இது எந்த விதத்திலும் கட்டாய ஒய்வு அல்ல. அப்படிச்
சொல்பவர்கள் எவ்விதமான தொழில்நுட்ப அறிவுமற்ற
முழு மூடர்களே ஆவர். 1980 முதல் நாளது தேதி
வரையிலான தொடர்ச்சியான நவீன மயத்தால்
உபரியாகித் தங்கி விட்ட தொழிலாளர்களே தற்போது
VRS மூலம் வெளியேறுகின்றனர்.
உபரி ஊழியர் பிரச்சினை எழுந்தபோதெல்லாம்,
natural wastage மூலம் அவர்கள் வெளியேறட்டும் என்பதே
தொழிற்சங்கங்களின் கோரிக்கையாக இருந்தது.
இதை BSNL நிர்வாகமும் ஏற்றுக் கொண்டிருந்தது.
(Natural wastage = மூப்படைந்து superannuationல் பணிஓய்வு
பெறுதல்).
BSNLன் ஊழியர்களும் அவர்களின் கம்யூனிஸ்ட்
தொழிற்சங்கங்களும் வரவேற்று ஏற்றுக் கொண்ட
புத்தாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த VRS ஆகும்.
இந்தக் கட்டுரையில் எல்லா உண்மைகளையும் நான்
சொல்லவில்லை. இந்தியா போன்ற அறிவியல் தற்குறி
தேசத்தில் அப்படி முழு உண்மையையும் சொல்ல
இயலாது. இந்தக் கட்டுரை உண்மையில் heavily diluted.
2012ல் அதிர வைக்கும் உண்மைகளுடன் ஒரு அடர் கந்தக
அமிலக் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதி (Kudos to the exodus!)
The Hindu Business Line ஆங்கில ஏட்டுக்கு அனுப்பினேன்.
அதைப் படித்து அதிர்ந்துபோன ஆசிரியர் குழுவில் உள்ள
ஒருவர் என்னை நேரில் அழைத்து விளக்கம் பெற்றார்.
இறுதியில் பெரும்புயலைக் கிளப்பும் அக்கட்டுரையை
நான் பணிஓய்வு பெற்ற பிறகு வெளியிடலாம் என்று
அப்பத்திரிகையில் பணியாற்றிய என் நண்பர் ஒருவர்
(நான் பேச்சிலராக இருந்தபோது விடுதியில் என்
ரூம் மேட் அவர்) எனக்கு அறிவுரை வழங்கினார்.
அது சரி என்று எனக்குப் பட்டதால் என்னுடைய
கட்டுரையைப் பிரசுரிக்க வேண்டாம் என்று எழுதிக்
கொடுத்து விட்டு வந்தேன்.
2012ல் எழுதிய Kudos to the exodus! என்ற solutionன்
normalityயில் 90 சதம் குறைக்கப் பட்டதே இக்கட்டுரை!
********************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக