திங்கள், 17 பிப்ரவரி, 2020

BSNL பற்றிய விவாதத்துக்கு அழைக்கிறோம்!
இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் விவாதிக்க வருக!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
தொலைதொடர்புத் துறை ஒரு அறிவியல் தொழில்நுட்பத்
துறை. இங்கு அரசின் BSNLம் ஏர்டெல் வோடாபோன்
ஜியோ போன்ற தனியாரும் உள்ளனர்.

தொலைதொடர்பில் ஒரு நிறுவனம் ஜீவிக்குமா என்பது
பிரதானமாக எதைப் பொறுத்தது? மொபைல் போன்
பயன்படுத்தும் ஒவ்வொருவரும் இதற்குப் பதில்
சொல்ல வேண்டும். ஆனால் ஒருவருக்கும் பதில்
தெரியாது. ஏனெனில் இந்தியா ஒரு அறிவியல்
தற்குறி தேசம் (scientifically illiterate country).

இதற்கு நான் பதில் சொல்லப் போவது இல்லை.
நான் பதில் சொல்லாத பட்சத்தில் உங்களால் இதற்கான
பதிலை ஒருபோதும் தெரிந்து கொள்ள முடியாது.

இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கிறது
தொலைதொடர்பு. எனவே இத்துறை குறித்து தேசிய
ஊடகங்களில் அன்றாடம் செய்திகள் வருகின்றன.
அவை முக்கியத்துவம் பெறுகின்றன.நாடெங்கும்
விவாதிக்கப் பட்டு வருகின்றன.

BSNL அழிந்து விட்டது; அது திவால் ஆகிறது; அதை
தனியார் நிறுவனங்கள் விழுங்கி விட்டன என்றெல்லாம்
தமிழ்நாட்டில் உள்ள போலி இடதுசாரித் தற்குறிகளும்
போலி முற்போக்குக் கழிசடைகளும் இடைவிடாமல்
வதந்தியைப் பரப்பி வந்தார்கள். BSNL எதிர்ப்புப்
பிரச்சாரம் இந்தியாவிலேயே அதன் உச்சத்தில்
இருந்தது தமிழ்நாட்டில்தான்.

ரூ 80,000 கோடியில் BSNL புதுப்பிக்கப் படுகிறது என்ற
உண்மை விஸ்வரூபம் எடுத்து நிற்கிற ஒரு தருணத்தில்,
போலி இடதுசாரிக் கழிசடைகளின் பொய்
எடுபடவில்லை. இந்தத் தற்குறிகளின் முதுகுத்
தொலியை உரித்தது நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே.
வேறு யார் எவரும் BSNLக்கு ஆதரவாகக் களத்தில்
இறங்காத நிலையில், நியூட்டன் அறிவியல் மன்றம்
மட்டுமே களத்தில் இறங்கி. சமூகத்தின் பொதுவெளியில் 
BSNLக்காக வாதாடி வென்றது.

ரூ 80,000 கோடியை நிதியமைச்சர் நிர்மலா அம்மையாரிடம்
இருந்து பெறுவது கல்லில் நார் உரித்த கதையாக
இருந்தது. இருப்பினும் பகீரதப் பிரயத்தனம் செய்து
ரவிசங்கர் பிரசாத் பைசா குறையாமல் ரூ 80,000
கோடியைப் பெறுவதில் வெற்றி பெற்றார். அமைச்சர்
ரவிசங்கர் பிரசாத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைக்குச்
சென்ற தோழர் D கோபாலகிருஷ்ணன் (முன்னாள் மாநிலச்
செயலாளர் BSNLEU) சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில்
(11.02.2020) இதைத் தெரிவித்தார்.

BSNL குறித்தும் ஒட்டு மொத்த Telecom industry குறித்தும்
யார் எவருடனும் ஒரு உருப்படியான விவாதத்துக்கு
நான் தயார்.

விவாதத்துக்கு வருகிற அன்பர்கள்
1) ப்ளஸ் டூ வரையிலான கணிதமும் இயற்பியலும்
படித்திருக்க வேண்டும். இந்த subject அறிவியல் சார்ந்தது
என்பதால், அறிவியல் கல்லாதவர்களுடன் விவாதிக்க
இயலாது.

2) BSNL குறித்தும் Telecom industry குறித்தும் வருகிற
செய்திகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே
உள்ளன. தமிழில் ஒரு சதவீதம் செய்திகள் கூட
வெளியாவதில்லை. எனவே விவாதத்துக்கு வருவோர்
சிறந்த ஆங்கிலப் புலமை பெற்றிருக்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
அறிவியல் தெரிய வேண்டும், ஆங்கிலம் தெரிய
வேண்டும் என்று நான் கூறும்போது தற்குறிகள்
அனைவருக்கும் கடுமையான கோபமும் ஆத்திரமும்
உண்டாகும் என்பதை நான் அறிவேன். உண்மை
சுடத்தான் செய்யும்.

COAI என்று ஓர் அமைப்பு உண்டு. இது என்ன என்று
எத்தனை பேருக்குத் தெரியும்? மனச்சாட்சியைத்
தொட்டுச் சொல்லுங்கள்; தெரியாது அல்லவா"
இது தெரியாமல் Telecom industry குறித்து நீங்கள்
என்ன பேச முடியும்?

டாட்டாவும் அம்பானியும் COAI என்ற அமைப்பில்
நுழைய முயன்றனர். ஆனால் COAI அமைப்பைத்
தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சுனில் மிட்டல்
டாட்டாவையும் அம்பானியையும் விரட்டி விரட்டி
அடித்தார். ஏன்? இது ஏன் என்று தெரிந்து கொள்ள
வேண்டுமெனில், GSM தொழில்நுட்பம், CDMA
தொழில்நுட்பம் பற்றி ஓரளவேனும் தெரிந்திருக்க
வேண்டும்.

அதனால்தான் சொல்கிறேன், குறைந்த பட்சம் ப்ளஸ் டூ
வரை PHYSICS, MATHS படித்தவர்கள் மட்டுமே
விவாதத்தில் பங்கேற்கும் தகுதி உடையவர்கள் என்று.
சொன்னதுமே, போலி இடதுசாரித் தற்குறியே, உனக்குக்
கோபம் வரும்; வராமல் காத்துக் கொள்; உன்னுடைய
கோபம் உனக்கு மாரடைப்பைக் கொண்டு வந்து விடப்
போகிறது. செத்துக் கித்துத் தொலைக்கப் போகிறாய்!
*******************************************************        

தொலைதொடர்பின் வரலாற்றிலேயே அரசுத்துறை
நிறுவனமான BSNLக்கு அதிகபட்ச சாதகமாக
இருந்த அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். இருப்பினும்
அவரின் சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட
அவரின் சாதனையை உணராமல் உள்ளனர்.
காரணம் இவர்கள் வலதுசாரித் தற்குறிகள்.

இந்திய அரசியலில் அரசியல்வாதிகளும் சரி,
அவர்களை ஆதரிப்பவர்களும் சரி, 99.9 சதம்
தற்குறிகளே. கோபப் படுபவர்கள் கோபப்
படலாம்!

(இந்த நிபந்தனைகள் BSNL ஊழியர்களுக்குப் பொருந்தாது)


நன்றி. அவரை நான் அறிவேன்.







நேருவும் ப சிதம்பரமும் பொதுத்துறையும்!
----------------------------------------------------------------
பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் கோவில்கள்!
சொன்னவர் ஜவகர்லால் நேரு.

பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் செல்வத்தைப்
பூட்டி வைத்துக் கொள்கின்றன. இதனால் அவை
சமூகத்துக்குப் பயன்படாமல் போகின்றன.
சொன்னவர் ப சிதம்பரம்.

Chidambaram said the government owning and managing
PSUs locks up wealth, which would get unlocked if privatised
and eventually listed in the market.

நேரு ஒரு சராசரி அரசியல்வாதி மட்டுமே. அவர் எந்தத்
துறையிலும் நிபுணர் அல்லர்.

ப சிதம்பரம் அப்படி அல்லர். அவர் சட்ட நிபுணர்!
பொருளாதார நிபுணர்!

நேருவின் IQ ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு.
நேருவின் IQவை விட சிதம்பரத்தின் IQ அதிகம்.
வல்லபாய் படேலின் IQ நேருவின் IQவை விட அதிகம்.
Crisis managementன் பொது நேருவின் குறைவான IQ
நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை
ஏற்படுத்தி இருக்கிறது.

இருப்பினும் நேருவுக்கு ஒரு சமூகக் கண்ணோட்டம்
இருந்தது. தனது செயல்கள் மக்களுக்குப் பயன்பட
வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் நிறைந்து இருந்தது.

ப சிதம்பரத்திடம் அந்த எண்ணமே கிடையாது.
மக்களுக்குச் சேவை செய்வது இரண்டாம் பட்சமாகவும்
பெரு முதலாளிகளுக்குச் சேவை செய்வது
பிரதானமாகவும் இருந்தது சிதம்பரத்திடம்.

நேரு ஒரு உருப்படாத லிபரல் பூர்ஷ்வா.
இந்தியாவுக்கு நன்மையையும் தீமையையும்
சேர்த்தே செய்தவர். ஆனால் அவர் தீமை செய்தார்
என்று சொல்கிறபோது அவரிடம் malafide intention
கிடையாது. அவரின் மூளை அவ்வளவுதான்.
அவரின் குறைந்த IQ காரணமாகவே அவர்
தீமை செய்தார் தவிர, வேறு எந்தக்
காரணத்தாலும் அல்ல.

ப சிதம்பரம் உணர்வுபூர்வமாகத் தீமை செய்கிறவர்.
************************************************     

 
அக்கட்டுரைக்கு உரிய இணைப்பு இருந்தால் தருக.
நான் சூனியர் விகடன் படிப்பதில்லை.

இங்கு சூனியர் என்று எழுதக் காரணம் எனது
தமிழ்ப்பற்று அல்ல. சூனியர் என்றால் சூனியம்
வைப்பவர் என்ற பொருளியிலேயே எழுதி உள்ளேன். 
       
ப சிதம்பரம் ஊழல் பெருச்சாளி! நேரு நேர்மையானவர்!   

போ

IQ = Intelligent Quotient. நேரடியாக மொழிபெயர்த்து
நுண்ணறிவு ஈவு என்று சொல்கிறார்கள்.
இது சரியன்று. நுண்ணறிவுத் திறன் என்று
கொள்ளுவதே பொருத்தமாக இருக்கும்.

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி
என்று பாடினார் பட்டுக்கோட்டை.
இதுதான் IQவின் தத்துவம்.

ஒருவருக்கு 30 வயது ஆகிறது. இந்த 30 வயது
என்பது கால அடிப்படையிலான வயது.
இது கால வயது (chronological age) எனப்படும்.

இந்த நபருக்கு 30 வயதுக்கு உண்டான அறிவு
வளர்ச்சி இருக்க வேண்டும் அல்லவா?
அதாவது அவருக்கு அறிவு வளர்ச்சியின்
அடிப்படையிலான வயதும் 30 இருக்க வேண்டும்.
அப்படியானால் அவரின் IQ 100 என்று நிர்ணயிக்கப்
படுகிறது.

எப்படி நிர்ணயிப்பது? இதற்கான சூத்திரம் (formula) என்ன?
காலவயது = 30
அறிவின் வயது = 30
அறிவின் வயதை கால வயதால் வகுக்க வேண்டும்.
வகுத்து வரும் இவை 100ஆல் பெருக்கினால்
IQ கிடைக்கும்.

ஒருவரின் IQ 100 என்றால், அவர் வயதுக்கேற்ற
அறிவு வளர்ச்சி உடையவர் என்று பொருள்.
ஒருவரின் IQ 100ஐ விடக் குறைவாக இருக்குமானால்
அவர் அறிவு வளர்ச்சி குன்றியவர் என்று பொருள்.

ஒருவரின் IQ 100ஐ விட அதிகம் என்றால்,
அவர் அறிவு வளர்ச்சியில் உயர்ந்து மேலோங்கி
நிற்பவர் என்று பொருள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக