ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

கட்டித் தங்கம் வெட்டி எடுத்து!
------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
இந்த பூமியில் உலோகங்கள் கிடைக்கின்றன.
தங்கமும் வெள்ளியும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
தங்க வேட்டை குறித்தான நிறைய ஆங்கிலப்
படங்களை நம்மில் பலரும் பார்த்திருக்கக் கூடும்.

நம் நாட்டில் தங்கம், தாமிரம், வெள்ளி, அலுமினியம்
போன்ற உலோகங்கள் பல்வேறு இடங்களில் தோண்டி
எடுக்கப் பட்டு உள்ளன. இங்கு கவனிக்க வேண்டிய
விஷயம் என்னவெனில், கிடைக்கிற எந்த உலோகமும்
தூய்மையாக அந்த உலோகமாகவே கிடைப்பதில்லை.

அலுமினியம் என்றால் அது பல்வேறு பொருட்களுடன்
கலந்து ஒரு கூட்டுப் பொருளாகக் கிடைக்கிறதே
தவிர தனித்த அலுமினியமாகக் கிடைப்பதில்லை.
இந்தக் கூட்டுப் பொருளை நாம் மூலத்தாது (ore)
என்று குறிப்பிடுகிறோம்.

அலுமினியம் எப்படி எந்த வடிவில் கிடைக்கிறது?
பாக்சைட் வடிவில் கிடைக்கிறது. இந்த பாக்சைட்
(Bauxite) என்பது அலுமினியத்தின் முக்கியமான தாது.

உலோகங்கள் ஆக்சிஜனுடன் கலந்து வேதியியல்
வினை புரிந்து ஆக்சைடு தாதுக்கள் கிடைக்கின்றன.
இரும்புத் தாதுக்களான ஹேமடைட் மேக்னடைட்
ஆகியவை ஆக்ஸைடு தாதுக்களாகும்.

கார்பனுடன் கலந்து வினைபுரிந்து கார்போனேட்
தாதுக்கள் உருவாகின்றன. சுண்ணாம்புப்
பாறைகளை நாம் பார்த்திருக்கிறோம். இவை
கால்சியம் என்னும் உலோகத்தின் தாதுவான
கால்சியம் கார்பொனேட் ஆகும்.

காரீயமும் (Lead) பாதரசமும் (Mercury) கந்தகத்துடன்
வினை புரிகின்றன. இதன் விளைவாக இவற்றின்
தாதுக்கள் கந்தகத் தாதுக்களாக உள்ளன
(sulphide ores). காரீயத்தின் தாது கலேனா (Galena PbS)
ஆகும். பாதரசத்தின் தாது சின்னபார் (Cinnabar HgS)
ஆகும்.

ஆக உலோகங்கள் FREE METAL என்ற நிலையில்
கிடைப்பதில்லை. அவை பிற பொருட்களுடன்
கலந்த கூட்டுப் பொருட்களாகவே (ores)
கிடைக்கின்றன என்ற ஒளிவீசும் உண்மையை
மனதில் இருத்த வேண்டும்.

உபி மாநிலத்தில் தங்கச் சுரங்கம் தோண்டி, தங்கம்
கலந்த பாறைகளை வெட்டி எடுத்து, அதிலிருந்து
தங்கத்தைப் பிரித்தெடுத்தால் எவ்வளவு தங்கம்
கிடைக்கும்?

ஒரு கிலோ தங்கப் பாறையில் இருந்து சுமார்
ஒரு மில்லி கிராம் முதல் 5 மில்லி கிராம் வரை
தங்கம் கிடைக்கும். அவ்வளவுதான். கவனிக்கவும்:
1 மில்லி கிராம் = 1 கிராமில் ஆயிரத்தில் ஒரு பங்கு.

கட்டித் தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டித் தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
என்ற பழைய திரைப்படப் பாட்டு தமிழ்நாட்டில்
பிரசித்தம். மேனனும் சரோஜாதேவியும் நடித்த
காதல் காட்சியின் பாட்டு இது.

பாடலை இயற்றிய கவியரசர் கண்ணதாசன்
பூமிக்கு அடியில் தங்கம் கட்டி கட்டியாக இருப்பது
போல ஒரு கற்பனையை உருவாக்கி அதை மக்களை
நம்ப வைத்தார். கவியரசருக்கு கற்பனை செய்ய
உரிமை உண்டு. ஆனால் அறிவியல் அதை ஏற்பதில்லை.

மூலத தாதுவில் இருந்து தங்கத்தை எப்படிப்
பிரித்தெடுப்பது என்ற பாடம் பத்தாம் வகுப்பு
அறிவியல் பாட நூற்களில் இருக்கிறது. தமிழிலேயே
இது இருக்கிறது. வாசகர்கள் பத்தாம் வகுப்பு
அறிவியல் புத்தகத்தைப் படிக்க வேண்டும்.

இறுதியாக ஒரு கணக்கு! இது அறிவியல் கட்டுரை!
எனவே கணக்கு இல்லாமல் எப்படி?

ஒரு சுரங்கத்தில், ஒரு கிலோகிராம் தங்கத் தாதுவில்
இருந்து 3 மில்லிகிராம் அளவு தங்கம் பிரித்தெடுக்கப் பட
முடியும். அச்சுரங்கத்தில் இருந்து 3500 டன் தங்கம்
பிரித்தெடுக்கப் பட்டுள்ளது என்றால், எவ்வளவு
தங்கத்தாது இதற்குப் பயன்பட்டிருக்கும்?
(விடையை வாசகர்கள் scientific notationல் தரவும்.
******************************************************   
   
விஞ்ஞானிகள் அனைவரும் Gold என்பதை
சுருக்கமாக எழுதும்போது Au என்றே எழுதுகிறார்கள்.
அது என்ன Au? Go என்றோ Gl என்றோ எழுதுவதில்லை.
ஏன்? இடதுசாரிகளும் மார்க்சிய லெனினிஸ்டுகளும்
முற்போக்காளர்களும் இதற்கு விடையளிக்க
வேண்டும்.

நல்லாசிரியர் ஆகிட நியூட்டன் அறிவியல்
மன்றம் நெஞ்சார வாழ்த்துகிறது!


வாசகர்களுக்கு அறிவிப்பு!
-----------------------------------------
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்ட கணக்கு
உண்மையிலே மிக எளிய கணக்கு.
இந்தக் கணக்கைச் சரியாகச் செய்து விட்டால்
எந்த ஒரு சுரங்கத்தில் இருந்தும் எவ்வளவு
உலோகத்தைப் பிரித்தெடுக்கும் முடியும்
என்ற விஷயம் அத்துப்படி ஆகி விடும்.

இது என்னுடைய கற்பனையில் நான் கொடுத்த
கணக்கு அல்ல. இது real time situationல் இருந்து
எடுத்த கணக்கு. இது real time solutionஐ கோருகிறது.

முயற்சி செய்யும் அனைவரும் ஏதோ ஒரு அளவில்
கணித அறிவைப் பெறுகின்றனர்.

இங்கு கொடுக்கப்பட்ட  figures மிகப்பெரியவை ==
என்பதால், scientific notationல் மட்டுமே விடையளிக்க
இயலும்.
================================================
சரியான விடை!
----------------------
3500 டன் தங்கம் வேண்டுமென்றால்,
1,166,666,667 டன் தங்கத்தாது (ore) வேண்டும்.
அதாவது 116 கோடியே 67 லட்சம் டன் டாது வேண்டும்.

விடை பத்து ஸ்தான எண் ஆகும்.
 
சரியான விடையளித்த Leo Vel,
Vishvak Senan, Sivasankara Nainar ஆகியோருக்கு நன்றி.
விடையளிக்க அனைவருக்கும் நன்றி.
-------------------------------------------------------------- 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக