சனி, 22 பிப்ரவரி, 2020

அன்று ஆ ராசாவை மிரட்டிய சுனில் மிட்டல்
இன்று ரவிசங்கர் பிரசாத்தின் காலில் விழுந்தது ஏன்?
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
என்னுடைய பூட்ஸ் காலின் கீழ் உன்னை ஒரு மூட்டைப்
பூச்சியைப் போல் நசுக்கி விடுவேன் என்று சுட்டு
விரல் நீட்டி ஆ ராசாவை எச்சரித்தார் சுனில் மிட்டல்!
இடம்: சஞ்சார் பவன்; ஆண்டு 2010.

இதே மிட்டல், நேற்று தொலைத்தொடர்புத் துறை
அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தைச் சந்திக்கச்
சென்றபோது, அவரின் காலில் விழுந்து வணங்கினார்.
(இடம்: சஞ்சார் பவன், ஆண்டு 2020)

காலில் விழுந்து வணங்கிய சுனில் மிட்டலை
இளக்காரமாகப் பார்த்த ரவிசங்கர் பிரசாத்திடம்
"ரூ 35,586 கோடி ரூபாய் கடனில் (AGR dues) ரூ 10,000 கோடி
செலுத்தி விட்டதாகவும் மீதியை மார்ச் 17க்குள்
(கெடு தேதி) செலுத்தி விடுவதாகவும் சத்தியம்
செய்தார் சுனில் மிட்டல்.

பத்தே ஆண்டுக்குள் தலைகீழ் மாற்றம்!
எப்படி இது நிகழ்ந்தது? பதில் சொல்ல வேண்டும்!
குறிப்பாக, தமிழகத்தின் போலி இடதுசாரிகள்
போலி மார்க்சிஸ்டுகள் பதில் சொல்ல வேண்டும்.
*************************************************** 
ஒரு குமாஸ்தா லெவல் ஆங்கில அறிவும்
வளமான ஆங்கிலப் புலமையும்!
கிராம்ஸியவாதிகளின் குஷ்டரோகம்!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் அண்மையில்
வெளிவந்த ஒரு கட்டுரை இது!

"All or nothing? It's Hobson's choice for Anil Ambani's lenders."

இதன் அர்த்தம் என்ன?
All or nothing = எல்லாமும் அல்லது ஒன்றும் இல்லை.
It is Hobsons's choice = அது ஒரு ஹாப்சன்ஸ் சாய்ஸ் ஆகும்.
for Anil Ambani's lenders = அணில் அம்பானியின் லெண்டர்களுக்கு 
லெண்டர் = கடன் கொடுத்தவன்.

இப்போது பதவுரை எழுதி விட்டேன். எனினும் கட்டுரையின் 
தலைப்புப் புரியவில்லை. அது புரிய வேண்டுமெனில் 
ஒரு குமாஸ்தாவின் லெவல் ஆங்கிலம் பயன்படாது.
அதற்கு வளமான ஆங்கிலப் புலமை வேண்டும்.

இங்கு ஹாப்சன்ஸ் சாய்ஸ் என்றால் என்ன என்று
புரிய வேண்டும். அதற்கு ஒரு சிறிய இரண்டு வரிக்
கதை உண்டு. அதை நீங்களே முயன்று தெரிந்து
கொள்ளுங்கள்.

இப்போது ஹாப்சன்ஸ் சாய்ஸ் என்றால் நோ சாய்ஸ்
என்று பொருள் என்பதை மட்டும் தெரிந்து
கொள்ளுங்கள்.அனில் அம்பானிக்குக் கடன்
கொடுத்தவன் பாடு திண்டாட்டம் என்பதுதான்
கட்டுரையின் தலைப்பு.

ஆங்கிலம் எக்கேடாவது கெடட்டும். இதுதான்
கட்டுரையின் தலைப்புக்கு அர்த்தம் என்று
உங்களால் உய்த்து உணர முடியுமானால்
நல்லது.

அன்பார்ந்த வாசகர்களே,
மார்க்சியம் என்றால் பொருள் உற்பத்தியை
முதன்மையாகப் பார்க்கும் தத்துவம். பண்பாட்டை
மார்க்சியம் முதன்மையானதாகப் பார்ப்பதில்லை.

சமகால சமூகத்தின் பொருள் உற்பத்தி பற்றிய
எந்த அறிவும் இல்லாத மூடன் மார்க்சியவாதியே அல்ல.
பொருள் உற்பத்தி பற்றிய அனைத்து
அறிவும் ஆங்கிலத்தில்தான் உள்ளது. ஏனெனில்
இந்திய சமூகத்தின் பொருள் உற்பத்தி மொழியாக
ஆங்கிலம் மட்டுமே உள்ளது.

எனவே ஆங்கிலம் தெரியாமல், ஆங்கிலத்தில்
வளமான புலமை இல்லாமல் இந்திய சமூகத்தின்
பொருள் உற்பத்தி பற்றி எவர் ஒருவரும் அறிந்து
கொள்ள முடியாது. ஆங்கிலத்தில் எழுதப்படும்
அனைத்து விஷயங்களையும் தமிழில் மொழி
பெயர்ப்பது ஒருநாளும் சாத்தியமில்லை.
இது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மை.

இதை எடுத்துச் சொல்வதால் என் மீது ஒவ்வொரு
கிராம்ஸியவாதியும் கோபப் படுவான். அப்படிக்
கோபப் படுவதன் மூலம் அவன் ஒரு சிந்தனைக்
குஷ்டரோகியாய் மாறுவான்.   
************************************************






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக