சனி, 15 பிப்ரவரி, 2020

நீரா ராடியாவும் டாக்டர் பூங்கோதையும்
பட்லர் இங்கிலீஷ் பேசும் ஊடகத் தற்குறிகளும்!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
2G ஊழல் கொழுந்து விட்டு எரிந்த நேரம் அது. இந்தியாவின்
ஒவ்வொரு டீக்கடையிலும் 2G ஊழல் பேசப்பட்ட
நேரம் அது.

அப்போது நீரா ராடியாவின் டேப்புகள் வெளியாகி
இருந்தன. திமுக தலைவர்கள் சிலருடன் நீரா ராடியா
உரையாடிய ஆடியோ டேப்புகள் வெளியாகி நாடே
கொந்தளிப்பில் இருந்தது.

ரகசியமாக இருந்த இந்த ஆடியோ டேப்புகள்
பொதுவெளியில் வெளியாகக் காரணமாக இருந்தவர்கள்
இரண்டு பேர். 1) தயாநிதி மாறன் 2) ப சிதம்பரம்.

நீரா ராடியா டேப்பில் பல்வேறு உரையாடல்கள் உண்டு.
அதில் ஒன்று நீரா ராடியா- ராஜாத்தி அம்மாள் உரையாடல்.
ராஜாத்தி அம்மாள் எப்படி கற்றறிந்த நீரா ராடியாவுடன் 
உரையாடி இருக்க முடியும் என்று வாசகர்கள் 
கேள்வி எழுப்பலாம்.

மொழிபெயர்ப்பாளராக டாக்டர் பூங்கோதை பணியாற்றினார். 
யார் இவர்? ஆலடி அருணாவின் மகள். லண்டன் சென்று
மருத்துவத்தில் எம்டி பட்டம் பெற்று இந்தியா
திரும்பியவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா.

நீரா-பூங்கோதை உரையாடலில் மு க அழகிரி பற்றிப்
பேச்சு வந்தது. அப்போது டாக்டர் மன்மோகன் சிங்
அரசில் மு க அழகிரி Chemicals and Fertilisers துறையின்
அமைச்சராக இருந்தார்.

ஆங்கிலம் அறவே தெரியாத காரணத்தால் மு க அழகிரி
நாடாளுமன்றத்திலேயே இருப்பது கிடையாது.
குறிப்பாக கேள்வி நேரத்தின்போது, ஆங்கிலமோ
இந்தியோ தெரியாத தற்குறித் தனத்தால், சபாநாயகர் 
மீரா குமாரிடம் சைகை காட்டி விட்டு நாடாளுமன்றத்தை 
விட்டு அழகிரி தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்த நேரம் அது.

இதைக் கேள்வியுற்றிருந்த நீரா ராடியா பூங்கோதையிடம்
அதுபற்றி விசாரிக்கிறார். இருவரின் உரையாடலும் 
ஆங்கிலத்தில்தான் நிகழ்ந்தது. நீரா ராடியா கேட்ட
கேள்வி இதுதான்!
"கலைஞரின் மகன் அழகிரிக்கு அரசியலில்
ஆர்வம் இல்லை என்கிறார்களே, அது உண்மையா"?
என்று கேட்கிறார் நீரா.

இதற்கு பூங்கோதை அளித்த பதில் இதுதான்!
"No no, they are cut throat politicians."

நன்கு கவனிக்கவும். CUTTHROAT POLITICIANS 
கட் த்ரோட் அரசியல்வாதி என்கிறார் பூங்கோதை. 
பூங்கோதை இப்படிச் சொன்னது எல்லா ஆங்கிலப் 
பத்திரிகைகளிலும் வந்து விட்டது. 

இதைப் படித்த ஒரு ஊடகத் தற்குறி இந்த விஷயத்தை 
அழகிரியின் காதில் போட்டு உரிய சன்மானம் பெறலாம் 
என்று நாக்கைத் தொங்கவிட்டுக்
கொண்டு மதுரை சென்றான்.

அழகிரி வீட்டில் நாயாய்க் காத்துக் கிடந்து, அழகிரி
நல்ல மூடில் இருக்கும்போது அவரிடம் சென்று, "ஐயா,
அந்த அம்மா உங்களை கழுத்தறுப்புன்னு
சொல்றாங்கய்யா" என்றான். கேட்ட அழகிரி
கொதித்துப் போனார்; அப்போது அவர் வாயிலிருந்து 
உதிர்த்த வார்த்தைகளை யாராலும் ஜீரணிக்க முடியாது.

இங்கு மிக முக்கியமாக வாசகர்கள் ஒன்றைத் தெரிந்து
கொள்ள வேண்டும். கட் த்ரோட் என்ற சொல்லுக்கு
என்ன பொருள்? கழுத்தறுப்பு என்று பொருள் அல்ல. 
கட் த்ரோட் அரசியல்வாதி என்றால் தீவிரமாக அரசியலில்
ஈடுபடுபவர் என்று பொருள்.

கற்றறிந்த நீரா ராடியாவும் டாக்டர் பூங்கோதையும் 
பேசுகிற ஆங்கிலம் தமிழ்நாட்டு ஊடகத் தற்குறிகளுக்கு
ஒருபோதும் புரியாது.  தாங்கள் எவ்வளவு பெரிய 
முட்டாள்கள் என்றுகூட உணர முடியாத அசிங்கம் 
பிடித்த இந்த ஊடகத் தற்குறிகளுக்கு பட்லர் இங்கிலீஷ்
மட்டுமே தெரியும். எனவே கட் த்ரோட் என்றால்
கழுத்தறுப்பு என்கிற பட்லர் இங்கிலீஷை மட்டுமே 
இந்த முட்டாள்களால் புரிந்து கொள்ள முடியும்.
-------------------------------------------------------------------
பின்குறிப்பு:
IQ  > or = 105 உள்ளவர்கள் மட்டுமே எதிர்மறையான
பின்னூட்டங்களை உரிய தர்க்கத்துடன் இட முடியும்.
அவர்கள் போதிய ஆங்கில அறிவு பெற்றிருக்க வேண்டும்.
குறைந்த IQ உடையவர்கள் மற்றும் கல்வியறிவு 
அற்றவர்கள் இங்கு பின்னூட்டம் விடவேண்டாம் என்று 
கேட்டுக் கொள்கிறோம்..
***************************************************



        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக