இங்கு ஒரு பயலும் மார்க்சிஸ்டு கிடையாது!
எல்லாப் பயல்களும் கிராம்ஸியவாதிகளே!
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
தொலைதொடர்பு இந்தியாவின் அடிப்படையான
ஆதாரமான தொழில்துறை. இந்தத் தொழில் தற்போது
பெருத்த நெருக்கடியில் இருக்கிறது.
முதலில் BSNL நிறுவனம் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்து
நிதி நெருக்கடிக்கு இலக்கானது. மத்திய அரசு ரூ 80,000
கோடியில் BSNLன் புத்தாக்கத்தை மேற்கொண்டதுமே
BSNL நெருக்கடியில் இருந்து மீண்டது.
அடுத்து ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் அரசுக்கு
ரூ 1.47 லட்சம் கோடி செலுத்த வேண்டும் என்று உச்ச
நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வோடாபோன் நிறுவனத்தால்
இக்கடனைத் திரும்பிச் செலுத்த இயலாது. அந்நிறுவனம்
திவால் நோட்டீஸ் கொடுத்தால், அதற்குக் கடன் கொடுத்த
ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள்
கூடவே சேர்ந்து திவால் ஆகும் நிலை!
தொலைதொடர்புத் துறையும் சரி, வங்கித் துறையும் சரி,
நெருக்கடிக்கு உள்ளாவதால் இந்தியப் பொருளாதாரமே
நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நெருக்கடிக்குத்
தீர்வு என்ன?
முதலாளித்துவத் தீர்வு என்ன?
மார்க்சியத் தீர்வு என்ன?
மார்க்சியவாதிகள் என்போர் இது பற்றி ஒருபோதும்
கவலைப் படுவதில்லை. அவர்கள் அடையாள
அரசியலில் மூழ்கிப் புதையுண்டு போனார்கள்.
அவர்கள் என்றுமே சமூகத்தின் பொருள் உற்பத்தி
குறித்து அக்கறை காட்டியதில்லை.பொருள் உற்பத்தியில்
அக்கறை இல்லாத எவரும் மார்க்சியவாதியாக இருக்க
இயலாது! அவர்கள் கிராம்ஸியவாதிகள் ஆவர்.
இந்தியாவில் தமிழ்நாட்டில் மார்க்சியவாதிகளின்
எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து கொண்டே
வருகிறது. மார்க்சியவாதிகளாக இருந்த பலர்
காலப்போக்கில் கிராம்ஸியவாதிகளாக மாறிப்
போயினர். பொருள் உற்பத்தியில் அக்கறை
காட்டாமல் கிராம்சி கூறியபடி பண்பாட்டு விஷயங்களில்
மட்டுமே அக்கறை செலுத்திய அனைவருமே
கிராம்ஸியவாதிகளாக ஆகி விட்டனர்.
இவர்களுக்கு மார்க்சியம் பேசும் அருகதை இல்லை!
*********************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக