வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

பொறியியல் பட்டதாரி ஏன் பிச்சை எடுக்கிறான்?
GATE தேர்வுக்கு BE பட்டதாரிகளைப் பயிற்றுவிக்க
தமிழ்நாட்டின் சிற்றூர்களில் பயிற்சி நிலையங்கள் தேவை! 
சாதிச்சங்க மூடர்களே, உங்களின் பதில் என்ன?
------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில்
ஒரு லட்சத்து எழுபதாயிரம் இடங்கள் உள்ளன.
எனினும் தற்போது ஓராண்டில் 80,000 பேர் மட்டுமே
சேர்கின்ற்னர். இவர்களில் 50,000 பேர் அரியர்ஸ்
இல்லாமல் கோர்ஸ் முடிக்கின்றனர்.

வெறுமனே BE படித்தால் எந்த வேலையும் கிடைக்காது.
ஆட்டோ ஓட்டலாம்; ஸ்விக்கி போன்ற உணவுக்
கடைகளில் உணவுப் பொட்டலங்களை டெலிவரி
செய்யலாம். வேறு எந்த வேலையும் கிடைக்காது.

எனவே நல்ல வேலை வேண்டுமென்றால், BE பட்டதாரிகள்
GATE தேர்வு எழுதித் தேற வேண்டும்.
BE with Gate passed - ரூ 60,000 சம்பளத்தில் நல்ல வேலை.
BE without Gate = No employability.

சிற்றூர்களில் சிறு நகரங்களில் நிலைமை என்ன?
------------------------------------------------------------------------------
இங்கெல்லாம் GATE தேர்வுக்குக்கான எந்த ஒரு
Coaching Centreம் கிடையாது. Coaching Centreல் பயிலாமல்
GATE தேர்வில் தேறுவது கடினம். Coaching centresல் பயில
வேண்டுமெனில் சென்னை போன்ற நகரங்களுக்கு
வர வேண்டும். அதற்கு ஆகும் செலவு மேலும்
சில லட்சம் ஆகும். BE படித்த பெண் குழந்தைகளை
வெளியூருக்கு அனுப்புவதில் ஆயிரம் சிக்கல்கள்!

ஆக, நிகர விளைவு என்னவெனில், காசிக்குப் போயும்
கருமம் தொலையவில்லை என்பது போல BE படித்தும்
பயனில்லை.

ஒரு உதாரணம் சொல்கிறேன். திருநெல்வேலி மாவட்டத்தில்
வீரவநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது தேர்வுநிலைப்
பேரூராட்சி அந்தஸ்து உள்ள ஊர். 15000க்கு மேல்
மக்கள் தொகை உண்டு.

இதை ஒட்டி உள்ள ஊர்கள் சேரன்மகாதேவி, கல்லிடைக்
குறிச்சி, அம்பாசமுத்திரம் போன்ற சற்றே பெரிய ஊர்கள்.
இந்த ஊர்களில் BE படித்தவர்கள் குறைந்தது 500 பேர்
உண்டு. சேரன்மகாதேவியில் பொறியியல் கல்லூரியும்
உள்ளது. எனினும் திருநெல்வேலியில் கூட
Coaching centre கிடையாது.

இதற்கான பயிற்சி மையங்களை அரசாங்கம்
நடத்தாது. எனவே மக்கள்தான் நடத்த வேண்டும்.
இதற்கான செலவு குறைவே.

M Tech படித்தவர்கள், M.Sc Maths, Physics படித்தவர்கள் என்று
ஒரு 10 அல்லது 15 பேர் இருந்தால் போதும்.பயிற்சி
மையம் நடத்தலாம். ஒன்றிரண்டு பேர் முழுநேர
ஆசிரியர்களாக இருந்தால் போதும். மற்றவர்களை
பகுதி நேரமாக அமர்த்தி பயிற்சி மையத்தை
நடத்தலாம்.

இதை யாரும் சேவையாகச் செய்ய வேண்டாம்;
வணிகமாகச் செய்தாலே போதும்.

தென் மாவட்டங்களில் மட்டும், பல்லாயிரக் கணக்கான
BE பட்டதாரிகள் GATE தேர்வு  வழியில்லாமல்
வேலை கிடைக்காமல் உட்கார்ந்து கொண்டு
இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் சூத்திரக்
குடும்பத்துப் பிள்ளைகளே! BC, MBC, SC, ST சமூகத்தைச்
சேர்ந்த பிள்ளைகளே! பெரும்பாலோர் தேவமார்
நாடார் சாதிப் பிள்ளைகளே! இவர்களில் 40 சதம் பெண்கள்.

சாதிச் சங்கம் நடத்தும் முட்டாள்களே,
சூத்திர சாதிப் பிள்ளைகள் உயர் கல்வி பெற்ற பின்பும்
சோத்துக்கு லாட்டரி அடிக்கும் நிலையில்
இருக்கிறார்களே, இதைக் களைய நீங்கள் என்ன
செய்யப் போகிறீர்கள்?

ஏதாவது உருப்படியாகச் செய்யுங்கள்; அல்லது சாவுங்கள்.
மறைந்த பசும்பொன் தேவர் ஐயா அவர்கள் உயிரோடு
இருந்தால், அவரிடம் சென்று இந்த விஷயத்தை நான்
கூறியதுமே, அவர் உங்களின் முதுகுத் தொலியை
உரித்து விடுவார்.

சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் குறைந்தது
200 பயிற்சி மையங்கள் வேண்டும். இன்னும்
ஓராண்டுக்குள் இவை செயல்பட வேண்டும். இதுவே
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் கோரிக்கை!
**********************************************************

மருதுபாண்டியன் நன்றி அம்மா.
     
இது போன்ற இழிந்த பொய்களுக்கு இங்கு இடமில்லை.


இறந்தவர்களை விட்டு விடுங்கள்.


நண்பரே, நான் 200 மையங்கள் வேண்டுமென்று
கேட்கிறேன். நீங்கள் ஒன்றே ஒன்றைக் காட்டுகிறீர்கள்.
 



GATE குறித்த முக்கிய அறிவிப்பு!
-------------------------------------------------
 GATE தேர்வை IIT நடத்துகிறது. வேறு யாரும்
நடத்த இயலாது.

ஒவ்வோராண்டும் பெப்ரவரி மாதம் இத்தேர்வு
நடக்கும். 25 subjectகளில் இத்தேர்வு நடக்கிறது.
டிகிரி முடிப்பதற்கு முன்பே, கடைசி செமஸ்டரில்
படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இதில் தேறி, நல்ல மதிப்பெண் எடுத்தால் M.Tech
படிப்பில் இடம் கிடைக்கும்; கூடவே ஸ்காலர்ஷிப்பும்
கிடைக்கும். இது merit scholarship ஆகும்.
பெற்றோர்களின் வருமானம் பார்த்துத் தரப் படுவதல்ல.

இந்தியாவின் 50க்கும் மேற்பட்ட பொதுத்துறை
நிறுவனங்களில் வேலை கிடைக்க, GATE தேர்வு
எழுதி இருக்க வேண்டும். உதாரணமாக BSNLல்
இளநிலைப் பொறியாளர் வேலை வேண்டுமெனில்,
GATE தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான்
அது கிடைக்கும்.

இப்பொருளில் எழுதப்பட்ட எனது முந்திய
கட்டுரையைப் படியுங்கள்.

கணினியில் பரிச்சயமும் ஆங்கில அறிவும் உடைய
பெற்றோர்களும் மாணவர்களும் GATEன் official websiteஐ
பார்க்க வேண்டும். அப்போதுதான் விஷயம் தெரியும்.
--------------------------------------------------------
      

அம்மா,  இதை நான் அறிவேன். ஆனால் இதெல்லாம்
யானைப் பசிக்கு சோளப்பொரி என்பதுதான்
யதார்த்த நிலை. நான் சொல்வது கோச்சிங்
சென்டர்களைப் பற்றி. திருநெல்வேலியில் இருந்து
ஒரு பெண் குழந்தை சென்னைக்கு வந்து
GATE கோச்சிங்கில் படிக்க வேண்டுமெனில்
சில லட்சங்கள் செலவாகும். பெண் குழந்தை
என்பதால், கூட யாரவது தங்க வேண்டும். செலவு
அத்துக்கொண்டு போகும்.

சின்னச் சின்ன ஊர்களில் கோச்சிங் சென்டர்
அமைக்க வேண்டும் என்பது என் கோரிக்கை.
துரதிருஷ்ட வசமாக, இந்த உண்மையை எடுத்துச்
சொல்ல என்னைத் தவிர வேறு நாதி இல்லை.
நான் சொன்னாலும் எத்தனை பேர் மண்டையில்
ஏறும் என்று தெரியவில்லை.

மண்டையில் ஏறினாலும் எத்தனை பேர் நடவடிக்கை
எடுப்பான் என்று தெரியாது. ஊதுகிற சங்கை
ஊதி வைக்கிறேன்.





             

         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக