ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

ஆடம் ஸ்மித்தும் ராஜாத்தி அம்மாளும்
நாட்பட்ட மலச்சிக்கலும்!
(பட்ஜெட் 2020 பகுப்பாய்வுக் கட்டுரை)
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------
அந்த நாள் ஓர் இனிய நாள்! அதுதான் 1995ஆம் ஆண்டின்
ஜனவரி முதல் நாள் (01.01.1995). ஏறக்குறைய கால்
நூற்றாண்டு காலம் ஆன பின்னும் அந்த நாள்தான்
இன்றும் இந்தியாவின் பட்ஜெட்டுகளில் ஆதிக்கம்
செலுத்தி வருகிறது.

அந்த நாளில்தான் இந்தியா உலக வர்த்தகக் கழகத்தில்
இணைந்தது. நரசிம்ம ராவ் பிரதமராகவும், பிரணாப்
முகர்ஜி வணிகத் துறை அமைச்சராகவும் இருந்தபோது
WTO ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து இட்டது.

புதிய பொருளாதாரக் கொள்கை வகுக்கப் பட்டது.
LPG கொள்கைகள் செயல்பாட்டுக்கு வந்தன.
இறக்குமதிக்கான தடைகள் நீங்கின. அந்நிய நாட்டுப்
பொருட்கள் இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்கத்
தொடங்கின.

சுருங்கக் கூறின், இந்தியப் பொருளாதாரம் இதுவரை
பயணம் செய்த திசைக்கு நேர் எதிரான திசையில்
பயணம் செய்யத் தொடங்கியது. 1995க்கு முன்
கிழக்கு திசையில் பயணம் என்றால், 1995க்குப் பின்
மேற்கு திசையை நோக்கிய பயணம்!

அப்போது இந்தியாவின் புதிய பட்ஜெட்டை டாக்டர்
மன்மோகன் சிங் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து
வந்த அனைத்து பட்ஜெட்டுகளும், இன்றைய
நிர்மலா அம்மையாரின் பட்ஜெட் உட்பட , டாக்டர்
மன்மோகன் சிங்கின் புதிய பட்ஜெட்டின் மறுபதிப்புகளே.

அடுத்து வரும் 50 ஆண்டுகளுக்கான பட்ஜெட்டை
1995ல், 1996ல்  டாக்டர் மன்மோகன்சிங் ஏற்கனவே
தாக்கல் செய்து விட்டார். அதில் விட்ட குறை தொட்ட
குறை இருந்ததையும் அடுத்து வந்த ப சிதம்பரம்
நிவர்த்தி செய்து முழுமை ஆக்கி விட்டார்.

ஆக, 1995 முதல் 2045 வரை ஒரே பட்ஜெட்தான்.
ஆண்டுதோறும் மாறி வரும் பட்ஜெட் என்று
யாராவது நினைத்தால் அவர்கள் பரிதாபத்துக்கு
உரியவர்கள்.

1995 முதல் 2045 வரையிலான 50 ஆண்டுகளின்
பட்ஜெட் ஒரே பட்ஜெட்தான். அதே நேரத்தில் 2045ல்
ஏதாவது மாற்றம் வரும் என்று நான் சொல்லத்
தயாராக இல்லை. இங்கு மாற்றம் என்பது
அடிப்படையான மாற்றம் (paradigm shift) என்று
பொருள்படும்.


  . 



    
  

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக