திங்கள், 17 பிப்ரவரி, 2020

நீங்கள் கூறிய கட்டுரையைப் படித்தேன்.
அறிவியல் உணர்வும் தொழில்நுட்ப அறிவும்
சிறிதும் இன்றி எழுதப்பட்ட கட்டுரை. எனவேதான்
அது BSNL ஊழியர்களின் கவனத்தையோ ஆதரவையோ
பெறவில்லை. அவர்களின் மார்க்சிஸ்ட் தொழிற்சங்கம்
BSNLல் இருக்கிறது. அவர்களே அக்கட்டுரையைச்
சீந்தவில்லை.   

ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை நான் எழுதி
இருக்கிறேன். அதில் எந்த ஒன்றையும் அவரின்
கட்டுரை மறுக்கவில்லை. சுருங்கக் கூறின்
முட்டாள்களுக்காக முட்டாளால் எழுதப்பட்ட கட்டுரை அது.

காங்கிரஸ் அரசோ அல்லது பாஜக அரசோ முற்றிலுமாக
BSNLக்கு துரோகம் செய்தது என்பது உண்மையல்ல.
2011ல் டாக்டர் மன்மோகன் சிங் அரசு BSNLக்கு
திறன் மிக்க 3G அலைக்கற்றையை (3G UMTS) ஒதுக்கியது.
தனியார் நிறுவனங்கள் ஏலத்தில் பங்கெடுத்து.
பல்லாயிரம் கோடி முன்பணம் செலுத்தினால்தான்
3G அலைக்கற்றையை வாங்க முடியும். ஆனால் BSNLக்கு
ஏலத்தில் பங்கு பெறாதபோதும் முன்பணம் (upfront payment)
செலுத்தாத போதும் 3G அலைக்கற்றையை
ஒதுக்கியவர் டாக்டர் மன்மோகன் சிங்.

3G மட்டுமல்ல, BWA spectrum எனப்படும்  4G அலைக்
கற்றையையும் BSNL க்கு ஏலம் இல்லாமலும் முன்பணம்
செலுத்தாமலும் ஒதுக்கினார் டாக்டர் மன்மோகன் சிங்.

ஆனால் நடந்தது என்ன? 4G அலைக்கற்றையை
வைத்து சேவை வழங்க முடியாமல், அரசிடம் 4G
அலைக்கற்றையை சரண்டர் செய்தது BSNL.

எனவே 4G அலைக்கற்றையை இன்று வரை அரசு
தர மறுக்கிறது என்று எழுதுவது அப்பட்டமான
பொய். உங்களைப் போன்றவர்கள் 4G அலைக்கற்றையை
அரசு தர மறுத்து துரோகம் செய்கிறது என்று
புழுவினும் இழிந்த அந்த முட்டாள் கட்டுரையாளர்
எழுதினால் அதை அப்படியே நம்புவீர்கள்.

ஆனால் BSNLல் உள்ள ஊழியர்கள் அந்த முட்டாள்
எழுதியதைப்  படித்து விட்டு காரி உமிழ்கிறார்கள்.

3G ஏலம் நடந்தபோது, நான் பணியில் இருந்தேன்.
34 நாட்கள் ஏலம் நடந்தது. நான் பணியாற்றிய
அலுவலகத்தில் பலருடன் அமர்ந்து ஏலத்தை
ஒவ்வொரு நாளும் கவனித்தோம். ஆனால் புழுவினும்
இழிந்த முட்டாள் கட்டுரையாளர் அப்போது என்ன
செய்தார்? சினிமா சான்ஸ் கிடைக்குமா என்று
ஒவ்வொரு கூத்தாடிப் பயலின் காலை நக்கிக்
கொண்டிருந்தார்.
     
மொத்த வருவாயில் 68 சதம் ஊழியர்களின்
சம்பளத்திற்குப் போய் விடுகிறதே! அதைப்பற்றி
ஒரு வரி கூட எழுதாத ஒரு கட்டுரையாளரை
புழுவினும் இழிந்த ஈனப்பயல் என்று நாங்கள்
சொன்னால் என்ன தப்பு?


            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக