செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

ஒரு அலைக்கற்றையை வைத்து சேவை வழங்க
வேண்டுமெனில், அதற்குரிய டவர்களை நாடு முழுவதும்
கட்ட வேண்டும். அதற்கான நிதி இல்லை.
இது ஒரு காரணம்.

அடுத்து, இது முற்றிலும் புதிய வயர்லெஸ் தொழில்நுட்பம்.
உபரியாகித் தங்கி விட்ட, பழைய தொழில்நுட்பம்
மட்டுமே தெரிந்த ஊழியர்களை வைத்துக் கொண்டு
இந்த வேலையைச் செய்ய முடியாது. எனவே அதற்கு
GATE தேர்வில் தேறிய பொறியியலாளர்களை
வேலைக்கு எடுக்க வேண்டும். அதற்கு இன்னும்
அதிகச் செலவாகும். ஊழியர்களின் salary bill
மேலும் அதிகமாகும். இந்தச் செலவை BSNL
நிறுவனத்தால் செய்ய இயலாது. இவ்விரண்டும்தான்
அலைக்கற்றை சரண்டருக்கான காரணங்கள்.  
 


மொழிவெறுப்பெல்லாம் எதுவும் இல்லை.
தமிழை உற்பத்தி மொழியாக ஆக்க வேண்டும்
என்ற உன்னத நோக்கத்துடன் உலகின் உயர்
அறிவியலை தமிழில் எழுதிக் கொண்டு இருப்பவன்
தமிழ்நாட்டில் நான் ஒருவன் மட்டுமே. வேறு யார்
எவரும் இல்லை. வெளிநாட்டில் வாழ்வோர் வெகு
சிலரும் இம்முயற்சியை மேற்கொண்டு
வருகின்றனர். நிற்க.

இக்கட்டுரை பொருள் உற்பத்தி சார்ந்த கட்டுரை.
இந்தியாவின் பொருள் உற்பத்தி முழுவதுமாக
ஆங்கிலத்தில்தான் உள்ளது. எனவே உற்பத்தி
சார்ந்த செய்திகள், தரவுகள் அனைத்தும் ஆங்கிலத்தில்
மட்டுமே உள்ளன. அவற்றைப் படிக்க வேண்டுமெனில்
ஆங்கிலப் புலமை வேண்டும்.

சமூகத்தின் பொருள் உற்பத்தி குறித்து எதுவுமே
தெரியாத நிலையில், சமூக மாற்றம் என்றெல்லாம்
பேச இயலாது. உற்பத்தி மாறும்போதுதான் சமூகம்
மாறும். உற்பத்தி குறித்த அறிவைப் பெறாத
ஒரு சமூகம் எங்ஙனம் சமூக மாற்றத்திற்காகப்
போராட இயலும்.

தமிழ் தவிர வேறு மொழி தெரியாது என்பதால்
நூறாண்டுக்கு முன்பு எந்தக் குறையும் இல்லை.
இன்று அப்படி அல்ல. மகா மகா உபாத்தியாய
உ வே சாமிநாதையர் பெரும் அறிஞர்; டாக்டர்
பட்டம் பெற்றவர் (தட்சிணாத்ய கலாநிதி).
அவருக்கு ஆங்கிலம் தெரியாது. ஆக ஆங்கிலம்
தெரியாமல் உ வே சா அவர்களால் டாக்டர் பட்டம்
பெற முடிந்தது. காரணம் அவர் காலத்திய
உற்பத்தி முறை.

ஒரு காலக்கட்டத்தின் உற்பத்தி, உற்பத்தி முறை
ஆகியவையே அனைத்தையும் தீர்மானிக்கின்றன.
      

பொருளாதாரம் பற்றிய எள்முனை அறிவுமற்ற
தற்குறிகள், மார்க்சியப் பொருளாதாரம் என்று
சமூகத்தை ஏமாற்றிக் கொண்டு இருக்கும்போது
அவர்களிடம் இதோபதேசம் எடுபடாது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக