செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனம்
திவால் ஆகிறது!
வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
இதுதான் மார்க்சியப்  பொருளாதாரம்!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
ரிலையன்ஸ் ஜியோ = 36 கோடி வாடிக்கையாளர்கள்
வோடாபோன் (Vodafone idea) = 33 கோடி
ஏர்டெல் = 32 கோடி
BSNL = 12 கோடி.

வோடபோன் நிறுவனத்திற்கு ரூ 1.15 லட்சம் கடன்
உள்ளது. இக்கடனை அது மத்திய அரசுக்குச் செலுத்தியே
ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாகக்த்
தீர்ப்பளித்து விட்டது.

வோடாபோன் நிறுவனத்தின் சொத்து மதிப்பு
ரூ 30,000 கோடி மட்டுமே.

ஆக, கடன்  (liabilities) = 1.15 லட்சம் கோடி.
சொத்து (assets) = 30,000 கோடி.
ஆஸ்தியைப் போல கடன் மூன்றரை மடங்கு!

இந்த இடத்தில் ஒரு சிறிய கணக்கு! வோடாபோன்
நிறுவனம் திவால் நோட்டீஸ் கொடுக்குமானால்,
அது கடன்காரர்களுக்கு எவ்வளவு திருப்பிக்
கொடுக்கும்?

20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை அந்நிறுவனம்
கடனைத் திருப்பிக் கொடுக்க இயலும்.
அதாவது, 1 கோடி ரூபாய் கடன் கொடுத்தவனுக்கு
இந்நிறுவனம் 20 லட்சம் ரூபாய் மட்டுமே திருப்பிக்
கொடுக்க இயலும்.

இந்தக் கேடு கேட்ட நிறுவனத்துக்கு கடன்
கொடுத்தவர்கள் யார்? வேறு யார்? வங்கிகள்தான்!
பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகள்தான்!
ஸ்டேட் வங்கி (SBI) மட்டுமே ரூ 11,000  கோடி
கடன் கொடுத்துள்ளது.

வோடாபோன் திவால் நோட்டீஸ் கொடுக்குமென்றால்
ஸ்டேட் வங்கிக்கு எவ்வளவு திரும்பக் கிடைக்கும்?
20 சதம் திரும்பக் கிடைக்கும்! அதாவது ரூ 2200 கோடி
மட்டுமே திரும்பக் கிடைக்கும். அப்படியானால்
ஸ்டேட் வங்கிக்கு எவ்வளவு நஷ்டம்?
கடன் கொடுத்த தொகை = ரூ 11,000 கோடி
திரும்பக் கிடைப்பது = ரூ 2200 கோடி
நஷ்டம் = ரூ 8800 கோடி.

ஸ்டேட் வங்கிக்கு ஏற்படும் நஷ்டம் இந்திய அரசுக்கு
ஏற்படும் நஷ்டம் ஆகும். சரி, கடன் கொடுக்காமல்
இருக்க முடியுமா? இந்தியாவின் தலைசிறந்த பூர்ஷ்வா
பொருளாதார நிபுணர் ப சிதம்பரம் ஒரு முறை
கூறினார்: "கடன் கொடுப்பது வங்கிகளின் தர்மம்!"

வங்கி என்ற ஒன்று உருவாக்கப் பட்டதே மூலதனத்தை
சேகரிக்கவும் கடன் கொடுக்கவும் மட்டுமே. எனவே
கடன் கொடுக்க மறுக்கும் வங்கி, வங்கியே அல்ல.

ஆக இதுதான் மார்க்சியப் பொருளாதாரம். இந்தியாவில்
கேந்திரமான தொழில்துறையில் உச்சாணிக் கொம்பில்
இருந்த ஒரு நிறுவனம் திவால் ஆவதையும், அதற்குக் கடன்
கொடுத்த வங்கிகளும் கூடவே சேர்ந்து நஷ்டம்
அடைவதையும் பற்றி எழுதுவதும் அறிந்து கொள்வதும்
மார்க்சியப் பொருளாதாரம் ஆகும்.

இன்றைய நடைமுறை என்ன என்பது பற்றி எந்த அறிவும்
இல்லாமல், ஏதோ ஒரு மூலையில் மார்க்சியப்
பொருளாதார வகுப்பு எடுக்கிறேன் என்று புழுவினும்
இழிந்த ஒரு ஈனத் தற்குறி தன் அறியாமையை
வெளிப்படுத்துவதும், அந்தத் தற்குறி கழிக்கும்
மலத்தை வேறு சில தற்குறிகள் உண்டு மகிழ்வதும்
மார்க்சியப் பொருளாதாரம் ஆகாது.

சமூகத்தின் பொருள் உற்பத்தியைப் பற்றி எழுதுவது
மட்டுமே பயனுள்ள எழுத்தாகும். உற்பத்தியைப்
பற்றி எழுத அறிவு வேண்டும். அறிவுக்கு எங்கே
போவான் நமது போலி இடதுசாரித் தற்குறி?

சதா சர்வ காலமும் சாதி. மதம், கூத்து, மொழி
பற்றியே எழுதுபவன் சமூக விரோதியை ஆவான்.
நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே எப்போதும்
உற்பத்தி பற்றி எழுதுகிறது.

இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாக ஒரு ஆங்கிலக்
கட்டுரையைக் கொடுத்துள்ளேன். அதைப் படித்துப்
புரிந்து கொள்ள வளமான ஆங்கில அறிவு வேண்டும்.
கொஞ்சம் பொருளாதார அறிவும் வேண்டும்.

ஏனெனில் இப்படிப்பட்ட கட்டுரைகள் ஒருபோதும்
தமிழில் வெளிவராது. தமிழ் மட்டும்தான் தெரியும்
என்றால் உதவாக்கரையாக வாழ்ந்து சாக
வேண்டியதுதான்.
**********************************************************        
போலி இடதுசாரிக் கயவர்கள் இந்நேரம் எமது
கட்டுரையைப் படித்திருப்பார்கள். ஸ்கிரீன்
ஷாட்டும் எடுத்து வைத்திருப்பார்கள். ஆனால்
promote பண்ண மாட்டார்கள். எனவே அறிவார்ந்த
வாசகர்கள் இக்கட்டுரையை வாட்சப் குழுக்களில்
அனுப்பி பரவலான வாசகர்களைச் சென்றடையச்
செய்யுமாறு வேண்டுகிறேன்.




 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக