திங்கள், 10 பிப்ரவரி, 2020

BSNLன் மறுமலர்ச்சி! வோல்டே சேவை தொடக்கம்!
கோவையில் தொடங்கி வைத்தார் BSNL CMD!
செயற்கரிய செய்வார் பெரியர்!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
முற்றிலும் புதிய ஒரு சேவையை கோவை மாநகரில்
BSNLன் தலைவர் திரு பிரவீன் குமார் புர்வார் நேற்று
தொடக்கி வைத்தார். இந்தச் சேவைக்கு வோல்டே
சேவை என்று பெயர்.

VoLTE என்றால் Voice over LTE என்று பொருள்படும்.
LTE என்றால் Long Term Evolution ஆகும். இது குறித்து
சிறிது முயற்சி செய்து புரிந்து கொள்ளலாம்.

தொலைபேசி சேவை என்றால் குரல் சேவை (voice)
மட்டுமே என்று ஒரு காலம் இருந்தது. ஓரிடத்தில்
இருந்து இன்னொரு இடத்திற்கு குரலை (voice)
அனுப்புவதும் பெறுவதுமே (transmission and reception)
தொலைபேசி சேவையாக ஆரம்ப காலத்தில் இருந்து
வந்தது. இது analogue வகையிலான சேவை ஆகும்.
தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகி உள்ளது.
குரல் சேவைக்காக தனித்த குரல் சர்க்யூட்கள்
(voice circuits) உருவாக்கப் பட்டன.

காலப்போக்கில் தொலைதொடர்பின் வளர்ச்சியில்
குரல் சேவை மட்டுமே ஒரே சேவை என்றிருந்த
நிலை மாறி, தரவுப் பரிமாற்ற சேவை, இணைய சேவை
போன்றவையும் சேவைகளாக உருவெடுத்தன.
ஆரம்பத்தில் Wired network மூலமாக வழங்கப்பட்ட
இச்சேவைகள் வயர்லெஸ்சின் வளர்ச்சியைத்
தொடர்ந்து. வயர்லெஸ்  மூலமாக வழங்கப்பட்டு
வருகின்றன.

LTE என்பது Long Term Evolution ஆகும். இதை
நீண்ட காலப் பரிணாம வளர்ச்சி என்று எவரேனும்
மொழிபெயர்த்து உயிரை இழக்க வேண்டாம் என்று
எச்சரிக்கிறோம். நீண்ட, நெடிய போன்ற சொற்களுக்கு
தொலைதொடர்பில் இடமில்லை.

தொலைதொடர்பு என்பதே காலத்தையும் தூரத்தையும்
வெல்லுவதற்காகப் பிறந்தது: வென்று நிற்பது.
(Annihilation of time and distance). நேற்று கோவையில்
எங்கள் தலைவர் (CMD) அவர்கள் தொடக்கி வைத்த
VoLTE சேவையில், டயல் செய்தவுடன் தொடர்பு
கிடைக்கும். Hunting tone, beep sounds ஆகியவை எல்லாம்
முற்றிலுமாக இச்சேவையில் அகற்றப் பட்டு விட்டன.

Instantaneous connection is ensured. சென்னையில் இருந்து
14,000 கிமீ தூரத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில்
வாழும் உங்கள் மகனுடன் பேச வேண்டுமா? நம்பரை
டயல் செய்து முடித்தவுடன் உங்கள் மகனின் குரல்
கேட்கும். இதற்கு நாங்கள் உத்தரவாதம் தருகிறோம்.

BSNLஐச் சேர்ந்த நாங்கள் ஒரு அகராதி (dictionary)
வைத்திருக்கிறோம். அதில்,தொலைதொடர்பு என்பதற்கு
instantaneous என்று பொருள் தரப்பட்டுள்ளது.

LTE என்பது மொபைல் தொலைபேசிகளில் செயல்படும்
wireless broadband குறித்த ஒரு தரப்படுத்தல் (standard).
அதாவது LTE என்பது இன்னின்ன specificationsஐக்
கொண்டிருக்க வேண்டும் என்று கூறும் சட்ட திட்டம்.
4G LTE என்றால் LTE தொழில்நுட்பத்தின்
அடைப்படையில் அமைந்த 4G என்று பொருள்.
ஒரிஜினல் 4G வேறு; 4G LTE வேறு. 4G LTE என்பது
ஒரிஜினல் 4Gயை விட சற்றே குறைந்த spec உடையது.

வோல்டே சேவை (VoLTE) என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட
சர்க்யூட்களில், குரல் சேவையை அவற்றின் மீது
ஏற்றி வழங்குவதே வோல்டே சேவை ஆகும்.
தரவுகளைப் பரிமாறிக் கொள்ள உருவாக்கப்பட்ட
data circuitsகளில் குரல் சேவையை அடிஷனலாக
வழங்குவதே வோல்டே சேவை ஆகும். தனித்த
voice circuitsஐ உருவாக்கும் தேவை இல்லாமலே
இருக்கின்ற data சர்க்யூட்களைப் பயன்படுத்தி
குரல் சேவையை வழங்குவது VoLTE ஆகும்.

VoIP குறித்து தொழில்நுட்பப் பரிச்சயம் உடையவர்கள்
அறிந்திருக்கலாம். அதைப் போன்றதே VoLTE.
(VoIP = Voice over Internet Protocol).

வோல்டே சேவையில் backward compatibility உண்டு.
எனவே 2G GPRS, 2G EDGE, 3G (UMTS) தொழில்நுட்பத்தையும்
வோல்டே சேவை அரவணைத்துச் செல்லும்.

அண்ணா சாலையில் இரவு நேரத்தில் 100 கிமீ
வேகத்தில் ஒரு பென்ஸ் காரில் செல்கிறீர்கள்.
வண்டியை டிரைவர் ஓட்டுகிறார். நீங்கள்
BSNL VoLTE சேவை உடைய மொபைலில் 4G வேகத்தில்
தர்பார் படம் பார்த்துக் கொண்டே, சான்
பிரான்சிஸ்கோவில் உள்ள உங்கள் மகனுடன் குடும்ப
விஷயங்களையும் பேசுகிறீர்கள். இதை BSNL
நடத்திக் காண்பிக்கிறது.

இதுதான் BSNLன் புத்தாக்கத் திட்டம் செயல்பாட்டுக்கு
வந்ததன் அடையாளம்! இதுதான் BSNLன் மறுமலர்ச்சி!

உயர்ந்து நிற்கும் உருக்குப் போன்ற பாறை மீது
சதா அலைகள் வந்து மோதுகின்றன.
என்றாலும் அலைகள்தான் சிதறுகின்றன.
BSNL என்னும் பாறை சிதறுவதில்லை!     
---------------------------------------------------------------------
பின்குறிப்பு:
தெரிந்தெடுக்கப்பட்ட சில தென்னிந்திய நகரங்களில்
மட்டுமே VoLTE சேவை உள்ளது. அங்குள்ள BSNL
வாடிக்கையாளர்கள் உரிய handsetஉடன்
இச்சேவையை அனுபவிக்குமாறு வேண்டுகிறோம்.
இச்சேவைக்கு எவ்விதக் கூடுதல் கட்டணமும் இல்லை!
*********************************************************

Pure voice circuits offered through
WIRED network are no doubt superior;
but then this is a conventional thinking.

Now we have entered into the satellite era and satellites are
invariably meant for multiple use.
LTE, VoLTE, VoIP etc are coming under optimized usage.
In wireless communication various factors affect the quality
of voice. VoLTE is a recent advancement introduced in USA
some 6 years ago.

Our people told me that VoLTE commissioned yesterday
in Coimbatore offers HD quality. The quality gets improved
once all the hurdles are removed; ie if the noise is removed.
The spectrum used here is also of good quality.

What you have experienced might be true and many customers
might have brought this to the notice of our technical panel.
Since R and D is constantly working, the factors that had
affected quality might have been identified and removed.

When VoIP was introduced long back, we never boasted of
HD quality of voice. But our people assure of HD quality
of voice during the commissioning of VoLTE yesterday.
So in the meantime, not only BSNL  but other operators
might have done to avoid complaints like  poor quality of voice
and remedial measures might have been taken.


mikka nanri

மிக்க நன்றி ஐயா.

இன்னும் ஓராண்டில் வந்து விடும். இது ஒரு
value added service. எனவே அடிப்படைக் கட்டமைப்பு
நிறைவுற்றவுடனே அடுத்த நிமிடம் இதைக்
கொடுத்து விடுவோம்.
 

டெல்லியில் உள்ள எங்கள் தலைவர் (Chairman and MD)
கோவைக்கே  வந்து, அங்கு இந்தப் புதிய சேவையை
(VoLTE) தொடங்கி வைக்கிறார் என்றால் அது
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த விஷயம் அல்லவா!

உலக அளவில் இந்தப் புதிய சேவை அறிமுகம்
ஆகியே ஐந்தாறு ஆண்டுகள்தான் ஆகின்றன.
அந்தச் சேவை இப்போது உங்கள் ஊரில்.
துல்லியமான குரல் (VOICE), HD தரம்,
டயல் செய்த உடனேயே எதிர்முனையுடன்
தொடர்பு...இத்தியாதி சிறப்புகளைக் கொண்ட
இந்தச் சேவை பற்றி மக்கள் அறிந்து கொள்ள
வேண்டுமா?

இதைச் சொல்ல வேறு எவரேனும் இருந்தால்,
நான் எழுத வேண்டிய தேவை இல்லை.
இன்று அறிவியலுக்குத்தான் ஆள் தேவை.
சமூகவியலுக்கு ஆயிரம், லட்சம் என்று
ஆட்கள் இருக்கிறார்களே.  டா


தடுப்பு முகாம் என்ற சொல் தற்போது
பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது.
மற்ற ஆப்ஷன்கள் பொருத்தமாக இல்லை.
(தடுப்பு முகாம் = ஒரு முகாமில் தடுத்து வைத்தல்)




   





    

   
    



      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக