கிரந்தம் குறித்த முற்றிலும் தெளிந்த நிலைபாடு!
----------------------------------------------------------------------------
1) கிரந்த எழுத்துக்கள் தமிழில் சில நூற்றாண்டுகளுக்கு
முன்பே கொண்டு வரப்பட்டு விட்டன. அவை தமிழ்
எழுத்துக்களாகவே கோடிக்கணக்கான தமிழர்களால்
ஏற்கப்பட்டு விட்டன.
2) எனவே இன்று திடீரென்று சிலர் கிரந்தம் வேண்டாம்
என்று கூறுவது தமிழைச் சீர்குலைக்கவே. கிரந்தம்
வேண்டாம் என்று கூறும் உரிமை யாருக்கும் இல்லை.
3) நம்மைச் சுற்றிலும் பேசப்படும் மொழிகளான
மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி,
வங்கம், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய அனைத்து
மொழிகளிலும் கிரந்த எழுத்துக்களும் உச்சரிப்பும் உண்டு.
ஆனால் தமிழில் மட்டும் அது கூடாது என்பது
தமிழை காலாவதியாகிப்போன மொழியாக ஆக்க
வேண்டும் என்னும் தீய நோக்கமே.
4) மொழி என்பதன் தலைமைப் பண்பு என்னவெனில்,
மக்கள் அனைவரையும் ஒருவருக்கொருவர்
தொடர்புறுத்துவதே, கிரந்தத்தை மறுத்தால்
தமிழானது தொடர்புறுத்தல் என்னும் மொழியின்
உயிரையே இழந்து விடும்.
5) மொழி குறித்த குட்டி முதலாளியக் கருத்துக்கள்
ஏற்கத் தக்கன அல்ல. மொழி குறித்த மார்க்சியக்
கருத்து மட்டுமே அறுதியானதும் அனைவரையும்
கட்டுப் படுத்தக் கூடியதும் ஆகும். ஏனெனில்
குட்டி முதலாளியக் கருத்துக்கள் தந்தக் கோபுரச்
சிந்தனைகளின் விளைவு! ஆனால் மார்க்சியக்
கருத்துக்கள் நீருக்குள் மீனாய் மக்களோடு இருந்து,
மக்களோடு வாழ்ந்து, மக்களிடம் இருந்து பெற்றவை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக