ஞாயிறு, 21 ஜனவரி, 2018

பெர்மட்டின் கடைசித் தேற்றத்தை
நிரூபிப்பாரா செயல் தலைவர்?
---------------------------------------------------------------
கலையியல் நிறைஞர்
புலவர் வீரை பி இளஞ்சேட்சென்னி
------------------------------------------------------------------
1) செயல் தலைவர் தெளிவாக இருக்கிறார்!
குட்டிமுதலாளித்துவத் தற்குறி ஞமலிகள்
அவரைப் பார்த்துக் குரைக்கின்றன!
2) வைரமுத்து ஏதோ சொல்லித் தொலைத்து
விட்டார். அவர் திமுக உறுப்பினர் அல்ல.
என்றாலும் அவர் சொன்னதன் பலன் யார்
தலையில் விடியும்? செயல் தலைவரின்
தலையில்தான் விடியும்.
3) அப்படி விடிந்தால் அது வெண்ணெய் திரளும்போது
தாழியை உடைப்பதில் போய் முடியும்.
இதை செயல் தலைவர் அணுவளவும் விரும்பவில்லை.
துர்கா அம்மையாரும் விரும்பவில்லை.
4) ஆம், செயல் தலைவர் தெளிவாக இருக்கிறார்.
5) வரவிருக்கும் தேர்தலே காலம் தரும் கடைசி வாய்ப்பு
என்பதை அவர் அறிவார். பெர்மட்டின் கடைசித்
தேற்றத்தை (Fermat's last theorem) நிரூபித்தே தீர வேண்டிய
கட்டாயத்தில் செயல் தலைவர் இருக்கிறார்.
6) எனவே  மகாபாரத அர்ஜுனனின் மனநிலையில்
எந்நேரமும் கிளியின் கழுத்தைக் குறி
பார்த்தவண்ணம் இருக்கிறார் அவர்.
6) காதல் ஒருவனைக் கைப்பிடித்து
அவன் காரியம் யாவிலும் கைகொடுக்கும்
புகழ் புரிந்த இல்லாளாக மனையறம் படுத்து வரும்
மாதரசி துர்கா, செயல் தலைவரின் கவனம்
சிதைக்கும் எந்த ஜந்துவையும் சிதைத்து விடும்
உறுதியுடன் உடன் நிற்கிறார்.
7) சிலை இது சிலீமுகங்கள் இவை
கடுந்திரிகை வேகத்து எந்திரத் திகிரி........
என்று வில்வித்தையின் விதிகளை அறிவிக்கத்
தொடங்கி விட்டார் வில்லிபுத்தூர் ஆழ்வார்.
8) மொத்தக் களமும் ஒரு பிளாஸ்மா நிலைக்குப்
போய்விட்டது. ஒவ்வொரு துகளும் மின்னேற்றம்
பெற்று நிற்கிறது.
9) ஆனால் கூடம் தெரியாமல் சாமி ஆடும்
குட்டி முதலாளித்துவ அற்பப் பதர்கள்
தங்களின்  தொடை இடுக்கை செயல் தலைவர்
சொறிந்து விடவில்லை என்று மூஞ்சி சுருங்குகிறார்கள்.
10) பிறக்கும்போதே ஒரு பக்தையாகப் பிறந்த
துர்கா அம்மையார் புகுந்த வீட்டிலும் ஒரு
பக்தையாகவே வாழ்ந்தார். பாசாங்கையும்
ஆஷாடபூதித்தனத்தையும் (hypocrisy) அறவே
வெறுத்த அவர் யாரினும் கூடுதலாக
சடங்குகளையும் வழிபாட்டையும் தடையின்றி
மேற்கொண்டார்.
11) அண்மைக்காலமாக தமது கணவரின்
கட்டளையை ஏற்று, தமது சடங்குகளை
அனைவரும் அறியும்வண்ணம் பொதுவெளியில்
காட்சிப் படுத்துகிறார். இதன் மூலம் தம் மீது
விழுந்திருக்கும் இந்துக்களின் எதிரி என்னும்
எதிர்மறை முத்திரையைத் (negative connotation)
துடைத்தெறிய முயன்று வருகிறார் செயல் புயல்.
12) ஜீயரிடம் பேசி உண்ணாநோன்பைக் கைவிடச்
 செய்தார் துர்கா அம்மையார். இது அவரின் சுயமான
முயற்சி அல்ல. செயல் தலைவரின் கட்டளையை
ஏற்றுக் செயல்பட்ட ஒரு சிப்பாய்தான் அவர்.
13) இந்தச் செய்தியைப்  முரசறைந்து அறிவித்த 
ஜகத் ரட்சகனும் செயல் தலைவரின்
கட்டளைப்படியே அறிக்கை வெளியிட்டு
அனைத்தையும் அம்பலத்திற்குக் கொண்டு வந்தார்.
இதனால் வேதபுரி குளிர்ந்தது.
14) செயல் தலைவரின் கட்டளைப்படியே இவை
அனைத்தும் நடக்கின்றன என்ற ஒளிவீசும்
உண்மையை ஏற்க மறுக்கும் குட்டி முதலாளித்துவ
அடிமுட்டாள்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்.
15) வெற்றி ஒரு தர்மம் என்கிறது நமது சாத்திரம்.
இதன் பொருள் தோல்வி என்பது அதர்மம் என்பதே.
செயல் தலைவர் வெற்றியை விரும்புகிறார்.
அவர் தர்மத்தை விரும்புகிறார்!
15) திமுக அதிமுக அடங்கிய திராவிட இயக்கத்தில்
திராவிட இந்துத்துவத்தை முதன் முதலில்
தைரியமாகவும் வெளிப்படையாகவும்
புகுத்தியவர் புழுவினும் இழிந்த மேனன்தான்.
இன்று திமுகவை ஒரு முழு நிறைவான திராவிட
இந்துத்துவக் கட்சியாக மாற்றுவது என்ற புனித
வேள்வியை அக்கறையுடன் மேற்கொண்டு
வருகிறார் செயல் தலைவர்.
16) மேனனின் திராவிட இந்துத்துவத்தை தமிழகம்
ஏற்றுக் கொண்டது; கொண்டாடியது. இதனால்
தைரியம் அடைந்த திமுகவும் அதே பாதையில்
தளர்நடை போட்டது.  தற்போது அந்தத் தளர்நடை
வீறுநடையாகி உள்ளது.
17) திமுகவின் திராவிட இந்துத்துவத்தையும் தமிழகம்
அரவணைத்தது. தமிழ்நாட்டில் இந்துத்துவத்திற்கு
எதிர்ப்பு என்பதெல்லாம் எதுவும் கிடையாது.
அது குட்டி முதலாளித்துவம் சுயஇன்பம்
செய்கையில் வெளிப்படும் நீர்த்துப்போன
இந்திரியம் மட்டுமே.
18) இந்த உண்மை கலைஞருக்கும் தெரியும்.
செயல் தலைவருக்கும் தெரியும். ஆயின்
யாருக்கு மட்டும் தெரியாது? குட்டி முதலாளித்துவ
அடிமுட்டாளுக்கு மட்டும் தெரியாது.
19) தெரிந்துவிட்டால் குட்டி முதலாளித்துவம் என்ன
செய்யும்? என்ன பெரிதாகச் செய்து விடும்?
நாலு நாளைக்கு காள் காள் என்று கத்தும்.
அதன் பிறகு கத்திக் கத்தித் தொண்டை வறண்டு
சக்தி இழந்து அடங்கி விடும். ஆம், கழுதை காமம்
கத்தித் தீரும்!
*********************************************************** 
                    
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக