புதன், 24 ஜனவரி, 2018

தேசியகீதம் (ஜன கண மன) பாடும்போதும்
எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போதும் எழுந்து
நின்று மரியாதை செலுத்த வேண்டும். 

தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இரண்டுக்கும்
மரியாதை வேண்டும். இதில் எவ்விதமான
தளர்வும் கூடாது. இது மட்டுமே சரியான நிலை.


விஜயேந்திரர் மீது தவறு இருந்ததா?
எழுந்து நிற்காததன் உள்மர்மம் என்ன?
---------------------------------------------------------------------
1) மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது
காஞ்சி இளைய சங்கராச்சாரி எழுந்து நிற்காமல்
தமிழை அவமதித்தார் என்பது செய்தி.
2) கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும்
பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்ற
அடைப்படையில் விசாரணையில் இறங்கினோம்.
3) சங்கர மட முக்கியஸ்தர்கள் மற்றும்
விஜயேந்திரருடன் கிரிக்கெட் ஆடிய நண்பர்கள்
என்று பலரையும் விசாரித்தோம். உண்மை
அறிந்தோம்.
4) கடந்த 5 ஆண்டுகளாகவே விஜயேந்திரர் மூல
நோயால் (பைல்ஸ்) அவதிப்பட்டு வருகிறார்.
மருத்துவ ஆலோசனையின் பேரில் புழுங்கல்
அரிசிச் சோற்றை உண்கிறார்.மேலும் புதன்
சனிகளில் அவர் இறைச்சி உண்பதும் உண்டு.
இதன் மூலம் நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்
என்று அவர் கருதுகிறார்.
5) சம்பவத்தன்று மதிய உணவில் அவர் சற்றுக்
கூடுதலாகவே இறைச்சி உண்டு விட்டார். அது
செரிமானம் ஆகவில்லை.
6) எனவே உண்ட இறைச்சி செரிப்பதற்காக அவர்
ஆல்கஹால் அருந்தி உள்ளார்.
7) அருந்திய ஆல்கஹாலுக்கும் அவரின் உடலுக்கும்
ஒரு சமநிலை (balance) பாவிக்கப் படுவதற்கு
சிறிது நேரம் ஆகும். ஆனால் அதற்கு முன்னரே அவர்
கூட்ட ஏற்பாட்டாளர்களால் மேடையில் அமர
வைக்கப்பட்டு விட்டார். எனவே  இசைக்கப்
படுவது தமிழ்த்தாய் வாழ்த்து என்பது அவரின்
மூளையில் உறைக்கவில்லை.
8) இதுதான் அவர் எழுந்து நிற்காததன் காரணம்.
வேறு காரணம் எதுவும்  கிடையாது,
9) வேறு காரணம் இருந்தால், நான் ஏன் தமிழ்த்தாய்
வாழ்த்தை அவமதித்தேன் என்று அவர் அறிக்கை
வெளியிட்டு இருப்பார். அப்படி எந்த அறிக்கையும்
அவர் வெளியிடவில்லை.
10) எனவே குற்றம் ஜெயேந்திரர் மீது இல்லை.
அவர் அருந்திய ஆல்கஹாலே குற்றவாளி! இந்த
உண்மையை சங்கர மட வட்டாரங்கள் மூலம்
அறிந்தோம். எனவே விஜயேந்திரர் மீது கண்டனம்
தேவையில்லை என்பது சங்கர மடக் காரியஸ்தர்
சுந்தரேச ஐயர் அவர்களின் அபிப்பிராயம்.
------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்
ஆகிய இரண்டும் பாடப்படுகையில் எழுந்து நின்று
மரியாதை செய்ய வேண்டும். இதுவே சரியான 
நிலைபாடு. தேசிய கீதம் பாடும்போது
எழுந்து நிற்க வேண்டாம் என்று கூறுபவர்களுக்கு
விஜயேந்திரரின் கயமையைக் கண்டிக்கும்
அருகதை இல்லை.
************************************************************ 
உறைத்தது. அதனால்தான் எழுந்து நின்றார்.
இந்தக் கேள்விக்கே அவசியமில்லை. இந்தப் பதிவு
கூடுதல் IQ  உள்ள வாசகர்களுக்காக எழுதப்
பட்டது. மீடியாக்கர்கள், சப் மீடியாக்கர்கள்
பிறழ் புரிதலைத் தவிர்க்கவும். 

தோழரே, ஒரு இருமல் சிரப் அருந்தினாலே, அதில்
8 சதம் ஆல்கஹால் இருக்கும். அல்லோபதி
மருத்துவத்தில் ஆல்கஹால் ஒரு முக்கிய
அடித்தளம் (BASE). மருத்துவ ஆலோசனையை மீறுவது
சரியல்லவே. புலால் மறுப்பு என்பது சமண பௌத்தக்
கொள்கையே. சைவ வைணவ மதத்தில் புலால்
மறுப்பு கட்டாயம் இல்லை.

என்னுடைய பார்வையில் விழா
ஏற்பாட்டாளர்கள்தான் குற்றவாளிகள். அவர்
சாப்பிட்டு இருக்கிறார் என்று
தெரிந்த பின்னும் அவரை அப்படியே கூட்டிக்
கொண்டு வந்து மேடையில் அமர்த்தியது சரியா?
கால் கிலோ அவித்த உருளைக்கிழங்கும் 
பால் சேர்க்காத ஒரு கப் காப்பியும் குடிக்க
வைத்து அதன் பிறகு கூப்பிட்டு வந்திருக்கலாம்
அல்லவா?
    
சற்று முன் கிடைத்த செய்தி!
-----------------------------------------------------
கஞ்சா அருந்தியிருந்த காரணத்தாலேயே
விஜயேந்திரர்  தமிழ்த்தாய் வாழ்த்துக்கு
எழுந்து நிற்கவில்லை என்று சங்கர மட
அன்பர் கூறுகிறார்.இது உண்மையே.
விஜயேந்திரருக்கு கஞ்சா அருந்தும் பழக்கம்
உண்டு. சங்கரராமன் கொலை வழக்கில்
சிறையில் இருந்தபோது இந்தப் பழக்கம்
அவருக்கு ஏற்பட்டு விட்டது. சகவாச தோஷம். 


சங்கரராமன் கொலை வழக்கில்
ஜெயிலில் இருந்தபோது, சகவாச தோஷத்தால்
விஜயேந்திரருக்கு கஞ்சா பழக்கம்
ஏற்பட்டு விட்டது. எழுந்து நிற்காததற்கு
கஞ்சாவே காரணம்.

உ வே சாமிநாதய்யரும் பாரதியாரும்
பரிதிமாற் கலைஞரும் தமிழ் வளர்க்கப்
பட்ட பாட்டையெல்லாம் ஒரே நொடியில்
மண்ணில் சரித்து விட்டாரே விஜயேந்திரர்.
பரமபதத்தில் ஏணியில் மேலேறும்போது
விஜயேந்திரரால் பாம்புக்கடி தேவையா?


போதை தெளிந்து விட்டது. அதனால் எழுந்து நின்றார்.
தமிழ்த்தாய் வாழ்த்தை கூட்டத்தின் தொடக்கத்தில்
இசைக்கிறீர்கள். அப்போது போதை தெளியாத நேரம்.
தேசிய கீதத்தை கூட்டத்தின் முடிவில் இசைக்கிறீர்கள்.
அதாவது தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடிய பிறகு,
ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரம் கழித்த
பிறகே தேசிய கீதம் பாடுகிறீர்கள். இந்த இரண்டு
மணி நேரத்தில் போதை தெளிந்து விடாதா?


  
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக