செவ்வாய், 23 ஜனவரி, 2018

பிரகாஷ் காரத்தா சீதாராம் யெச்சூரியா?
-------------------------------------------------------------------------
1) மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டி கூட்டம்
 கொல்கொத்தாவில் நடைபெற்றது.
2) காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ளலாம்
என்ற தீர்மானத்தை யெச்சூரி முன்மொழிந்தார்.
3) இதற்கு மாற்றாக, காங்கிரசுடன் எந்த விதமான
உறவும் கிடையாது என்ற நிலைபாட்டை பிரகாஷ்
காரத் முன்மொழிந்தார்.
3) இருபெருந் தலைவர்களின் கருத்துக்கள் மீதும்
ஆழமான விவாதம் நடைபெற்றது. உடன்பாடு
ஏற்படவில்லை. எனவே தீர்மானம் ஓட்டுக்கு
விடப்பட்டது.
4) மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள் 91 பேரில்,
வந்திருந்த 86 பேர் ஓட்டெடுப்பில் பங்கேற்றனர்
யெச்சூரியின் தீர்மானத்துக்கு 31 பேர் மட்டுமே
ஆதரவளித்தனர். தீர்மானத்திற்கு எதிராக
55 பேர் வாக்களித்தனர். யெச்சூரியின் தீர்மானம்
தோற்கடிக்கப் பட்டது.
5) மேற்குவங்க உறுப்பினர்கள் காங்கிரசுடன் கூட்டு
என்ற யெச்சூரியின் தீர்மானத்துக்கு ஆதரவாக
இருந்தனர். கேரளத்து உறுப்பினர்கள் காரத்தின்
நிலைபாட்டை ஏற்று தீர்மானத்திற்கு எதிராக
இருந்தனர்.
6) மேற்கு வங்க CPM என்பது தமிழகத்தில் உள்ள
அதிமுக போன்ற ஒரு அமைப்பு. பெரிதும் லும்பன்களும்
ஊழல் பெருச்சாளிகளும் நிறைந்த ஓர் அமைப்பு.
காங்கிரஸ் என்ன எந்தக் கட்சியுடனும் கூட்டு
வைத்து ஆட்சி அதிகாரத்தைப் பெறுவது ஒன்றே
அவர்களின் குறி.
7) கேரள CPM என்பது காங்கிரசை எதிர்த்து அரசியல்
செய்வதன் மூலமே ஜீவிக்கிறது. காங்கிரசுடன்
கூட்டு என்பது கேரள மாநில CPMஐக் கலைப்பது
என்பதற்குச் சமம்.
8) மத்தியக் கமிட்டியின் முடிவு என்றாலும் இது
இறுதி முடிவு அல்ல. ஏனெனில் கட்சியின் அகில
இந்திய மாநாடு வரும் ஏப்ரலில் (2018 ஏப்ரல்)
ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. அதில்
தமது தீர்மானத்தை வெற்றி பெறச் செய்யும்
நோக்கில் சீதாராம் யெச்சூரி காய் நகர்த்தி
வருகிறார்.
9) ஹைதராபாத் மாநாட்டில் யெச்சூரியின் தீர்மானம்
வெற்றி அடையுமேயானால், மார்க்சிஸ்ட் கட்சி
உடைவது தவிர்க்க முடியாத ஒன்று.
10) மத்தியக் கமிட்டியின் முடிவு பற்றிய திறனாய்வு
அடுத்த கட்டுரையில் வெளியாகும்.
**********************************************************         .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக