செவ்வாய், 2 ஜனவரி, 2018

ஆன்மிக அரசியல் என்றால் என்ன?
மூடத்தனமான விளக்கத்தின்
முதுகெலும்பை முறிப்போம்!
-----------------------------------------------------------------
நடிகர் ரஜனியின் 31ஆம் தேதிய அறிவிப்புக்குப்
பின்னால், தமிழகத்தில் உரையாசிரியர்களின்
ஜனத்தொகை ஜுர வேகத்தில் எகிறி விட்டது.
ஒவ்வொரு லும்பனும் அடியார்க்கு நல்லார் ஆகவும்
பெரிய வாச்சான் பிள்ளை ஆகவும் மாறி விட்டான்.

நடிகர் ரஜனி intellectually ஒரு எளிய மனிதர். குறைந்த
IQவை வைத்துக்கொண்டு நிறைந்த வாழ்வை
வாழ்ந்து வருபவர். மனதில் உள்ளதை நேரடியாகப்
பேசுபவர். He speaks his mind. பிறிது மொழிதல் அணி,
வேற்றுப்பொருள் அணி ஆகிய அணிகள் பயிலுமாறு
பேச ராஜனிக்குத் தெரியாது. கமலஹாசனின்
பின்நவீனத்துவப் பாணிப் பேச்சு ரஜனிக்கு
ஒருநாளும் கைவராது. அதற்கு குறைந்தது 105க்கு
மேல் IQ வேண்டும், பாவம், ரஜனி, அதற்கு அவர்
எங்கே போவார்?

"நான் ஆன்மிக அரசியல் செய்வேன்" என்று
தெளிவாகக் கூறி விட்டார் ரஜனி. நான்
கடவுளுக்குப் பயந்து கட்சி நடத்துவேன் என்று
இதற்குப் பொருள். வேறு பொருள் இல்லை.
இறையச்சத்தோடு அரசியல் செய்வேன் என்று
கூறி இருக்கிறார் ரஜனி. இது அவரின் மனதின்
குரல். இதில் பாசாங்கு எதுவும் இல்லை. மேலும்
ரஜனி கடவுளுக்குப் பயந்து வாழ்பவரே.

அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லா ஒருவனுக்கே
என்று அறிவித்துக் கொள்கிறார்கள் சில இஸ்லாமியத்
.தலைவர்கள். ரஜனியின் அறிவிப்பும் அத்தகையதே.
அதற்கு மேல் அதில் எதுவும் இல்லை. வலிந்து பொருள்
கொண்டு அந்த அபத்தமான பொருளை ரஜனியின்
மேல் ஏற்றுவது முழுமூடத்தனம் ஆகும். ரஜனி
என்றவுடனே அஞ்சி நடுங்கி அவரை மிகை மதிப்பீடு
(overestimate) செய்வது ஒருவகை மனநோய். இது
நாளடைவில் schizophreniaவுக்கு இட்டுச் செல்லும்.

தனது அரசியலுக்கும் மற்றவர்களின் அரசியலுக்கும்
ஒரு தெளிவான எல்லைக் கோட்டை வரையறுத்துக்
கொண்டார் ரஜனி. எப்படி? தமிழகத்தில் உள்ள
பெரும்பாலான அரசியல் கட்சிகள், பாஜகவைத்
தவிர, தங்களை மதச்சார்பற்ற கட்சிகள் என்று
அறிவித்துக் கொண்டுள்ளன. (இது உண்மையா
என்றால் இல்லை; இது முக்காலப் பொய்).

தமது கட்சியானது மேற்கூறிய கட்சிகளைப்
போன்ற மற்றுமொரு மதச்சார்பற்ற கட்சி அல்ல
என்று தெளிவாக அடித்துக் கூறியுள்ளார் ரஜனி.
ஆன்மிக அரசியல் என்பதன் அர்த்தம் இதுதான்.

இந்திய நாடும், மக்களும், இங்குள்ள 99.99 சதம்
அரசியல் கட்சிகளும் மதச்சார்பு உள்ளவர்களே.
மானுட வரலாற்றில் முதல் மதச்சார்பற்ற அரசை
1917ல் சோவியத் ஒன்றியத்தில் (ரஷ்யாவில்) லெனின்
அமைத்தார்; ஸ்டாலின் தொடர்ந்தார். குருச்சேவ்,
பிரஷ்னேவ் காலத்திலும் மதச்சார்பற்ற அரசாகவே
சோவியத் அரசு நீடித்தது.

நாத்திகத்தை அரசின் கொள்கையாக ஏற்றுக்
கொண்ட அரசு மட்டுமே மெய்யான மதச்சார்பற்ற
அரசாக இருக்க முடியும். இதைத்தான் பெரியாரும்
கூறினார்.

கன்னிப்பெண் என்றால் எந்த ஆணோடும்
சம்பந்தம் இல்லாதவள் என்று பொருள். மாறாக
எல்லா ஆண்களையும் சமமாகப் பாவிப்பவள்
என்று பொருள் அல்ல.  அதைப் போலவே,
மதச்சார்பின்மை என்றால் எந்த மதத்தையும்
சாராமல் இருப்பது என்று பொருளே தவிர,
எல்லா மதங்களையும் சமமாகப் பாவிப்பது
என்று பொருள் கிடையாது. இப்படிச் சொன்னவர்
பெரியார்.

எனவே ரஜனி குறித்து பெரிதாக எவரும் அலட்டிக்
கொள்ள வேண்டியதில்லை. He is not invincible. He is neither a
Prometheus nor a Hercules! But then he would certainly make an impact
which would be well within manageable dimensions. 
----------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: இக்கட்டுரையின் முதல் பத்தியில்
கூறப்பட்ட அ)  அடியார்க்கு நல்லார் ஆ) பெரிய
வாச்சான் பிள்ளை ஆகியோர் யாவர்? சிறு குறிப்புத்
தருக. வாசகர்கள் விடையளிக்க வேண்டும்.
*********************************************************      
 இந்தியாவின் தேர்தல் அரசியல் என்பது தற்போது
முற்றிலும் வாக்கு வங்கி அரசியலே. வாக்கு வங்கி
அரசியலில் மதம் சார்ந்துதான் செயல்பட முடியும்.
எனவே மதம் சாராமல் இருப்பேன் என்பது
பித்தலாட்ட அரசியலே. எனவே இங்குள்ள சமூக
நிலையில் மதச்சார்பற்ற அரசியல் சாத்தியமில்லை.
ஏனெனில் இது  நிலவுடைமைச் சமூக அமைப்பின்
கூறுகளைக் கொண்ட ஒரு சமூகம்.       



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக