செவ்வாய், 16 ஜனவரி, 2018

சூரியன் நிலையாக ஓரிடத்தில் இல்லை!
அது சுற்றிக்கொண்டே இருக்கிறது!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
1) பூமி தன்னைத் தானே ஓர் அச்சில் சுற்றுகிறது.
இதற்குப் பெயர் rotation.
2) மேலும் பூமியானது சூரியனையும் சுற்றி வருகிறது.
இதற்குப் பெயர் revolution.
3) சூரியக் குடும்பத்தின் எட்டுக் கோள்களும்
(பூமி உட்பட) தன்னைத்தானே சுற்றுகின்றன.
சூரியனையும் சுற்றி வருகின்றன. அதாவது
இந்த எட்டுக் கோள்களும் rotation, revolution ஆகிய
இரண்டையும் மேற்கொள்கின்றன.
4) சந்திரன் தன்னைத்தானே சுற்றுகிறது (rotation).
அது போல சந்திரன் பூமியையும் சுற்றி வருகிறது.
இது revolution ஆகும்.
5) சந்திரன் பூமியைச் சுற்றி முடிக்க 27.3 நாட்கள்
எடுத்துக் கொள்கிறது. அதே போல, தன்னுடைய
அச்சில் தன்னைத்தானே சுற்ற 27 நாட்களை
எடுத்துக் கொள்கிறது. அதாவது rotation, revolution
ஆகிய இரண்டுக்கும் கிட்டத்தட்ட சம அளவு
காலத்தை எடுத்துக் கொள்கிறது.  இதன் விளைவாக
சந்திரன் தன்னைத்தான் சுற்றவில்லை என்பது
போல  மயக்கம் ஏற்படுகிறது.
6) சூரியனும் தன்னைத்தானே ஒரு அச்சில் சுற்றுகிறது.
The sun does rotate. அதே போல, நம்முடைய காலக்சியான
பால்வீதியை சூரியன் சுற்றுகிறது. The sun revolve saround
the centre of our galaxy.
7)  சூரியன் ஓரிடத்தில் நிலையாக இருப்பதில்லை.
அது rotation, revolution ஆகிய இரண்டையும்
மேற்கொள்கிறது.
8) பூமி தன் அச்சில் தன்னைத்தானே ஒரு சுற்று சுற்றி
முடிக்க எவ்வளவு நேரம் ஆகிறது? 24 மணி நேரம்.
அதே போல, சூரியன் தன்னுடைய அச்சில் ஒரு
சுற்று சுற்றி முடிக்க எவ்வளவு நேரம் ஆகிறது?
சராசரியாக 27 நாட்கள் ஆகின்றன. பூமிக்கு
24 மணி நேரம். சூரியனுக்கு 27 நாட்கள். பூமிக்கு
மணி; சூரியனுக்கு நாள். இந்த வேறுபாட்டை உணரவும்.
சூரியன் ஒரு பெரு வாயுக்கோளம் என்பதால், அதன்
வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு கால அளவுகளில்
ஒரு சுற்று சுற்றி முடிக்கிறன. இதன் காரணமாக
27 நட்டார்கள் என்ற சராசரி கால அளவு இங்கே
கொடுக்கப் பட்டுள்ளது.
8) இவை அனைத்தும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளாகும்.     
*********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக