”பிராமணன் முகமானான் – கைகள் அரசன் – தொடைகள் வைசியன் – பாதங்களில் சூத்திரன் தோன்றினான்”. புருஷ சூக்தத்தில் உள்ள இந்த மந்திரம் பல்வேறு வகையான விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகியுள்ளது. இந்து எதிர்ப்பாளர்கள் வேத காலத்திலேயே சாதி வேறுபாடுகளும், அடக்குமுறைகளும் இருந்தன என்பதற்கு சான்றாக இந்த மந்திரம் உள்ளது என்று கூறி இதனைக் கட்டுடைக்கின்றனர்.
ஆனால் முழுமையாக இந்த சூக்தத்தையும், ஒட்டுமொத்தமாக ரிக்வேதத்தையும் கற்பவர்கள் அத்தகைய கருத்துக்கள் ஆதாரமற்றவை என்பவை உணர்வார்கள். நான்கு வர்ணத்தினரும் பரம புருஷனின் அங்கங்கள் என்றால் அதன் பொருள் என்ன? நான்கு வர்ணங்களும் தெய்வத் தன்மை கொண்டவை. இதில் ஒரு வர்ணம் இல்லாமல் போனாலும், விராட் புருஷன் குறைபட்டவனாக, ஊனமுற்றவனாக ஆகி விடுகிறான் என்பதே பொருள். விராட் புருஷனின் கால்களில் தோன்றியவர்கள் என்பதால் சூத்திரர்கள் தொடர்ந்து இழிவுற்றனர், அடிமைப் படுத்தப் பட்டனர் என்று ஒரு வாதம் வைக்கப் படுகிறது. அதுவும் தர்க்க பூர்வமாக இல்லை. ஏனென்றால் இதே சூக்தத்தில் இன்னொரு மந்திரத்தில் “பாதங்களினின்று பூமி தோன்றியது” என்று வருகிறது. அந்த பூமியை வேதம் வழிபாட்டுக்குரியதாக, தெய்வீக அன்னையாகத் தான் கூறுகிறதே அன்றி இழிவான ஒன்றாக அல்ல.
நான்கு வர்ணங்கள் இருந்ததற்கான சான்று இந்த மந்திரத்தில் கிடைக்கிறது என்பது உண்மையே. ஆனால் பிற்காலத்தில் வர்ணங்களை வைத்து உண்டான ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இதில் கற்பிக்கப் படவில்லை. வேதங்களில் எங்கு தேடினாலும் பிறப்பு அடிப்படையிலான சமூகப் பாகுபாடுகள் மற்றும் வர்ண ஏற்றத் தாழ்வுகளுக்கான சான்றுகள் கிடைக்காது.
ரிக்வேதத்தில் வைகறையின் தேவியான உஷையைக் குறித்த சூக்தம் (1.113) கூறுகிறது –
வீரச்செயலுக்கென ஒருவனை
புகழுக்கென ஒருவனை
மகத்தான வேள்விக்கென ஒருவனை
பலனுக்கென ஒருவனை
உழைப்பிற்கென ஒருவனை
தொழிலுக்கென அனைவரையும் என
உஷை
புவனத்தின் ஒவ்வொரு உயிரையும்
எழுப்பினாள்.
புகழுக்கென ஒருவனை
மகத்தான வேள்விக்கென ஒருவனை
பலனுக்கென ஒருவனை
உழைப்பிற்கென ஒருவனை
தொழிலுக்கென அனைவரையும் என
உஷை
புவனத்தின் ஒவ்வொரு உயிரையும்
எழுப்பினாள்.
யஜுர்வேதம் (தைத்திரிய சம்ஹிதை 5.7.6.6) கூறுகிறது –
பிராமணர்களுக்கு நல்லொளி தருக
அரசர்க்கு நல்லொளி தருக
வைசியர்களுக்கும் சூத்திரர்களுக்கும்
நல்லொளி அளித்திடுக.
அரசர்க்கு நல்லொளி தருக
வைசியர்களுக்கும் சூத்திரர்களுக்கும்
நல்லொளி அளித்திடுக.
சுக்ல யஜுர்வேதம் கூறுகிறது –
நலம் தரும் இம்மந்திரங்களை
நான் உங்களுக்குக் கூறுகிறேன்
பிராமணர் அரசர் சூத்திரர்
இன்னும் மற்றுமுள்ளோர்
நம் மக்கள் அன்னியர்
அனைவர்க்கும் இவற்றைக் கூறுக.
நான் உங்களுக்குக் கூறுகிறேன்
பிராமணர் அரசர் சூத்திரர்
இன்னும் மற்றுமுள்ளோர்
நம் மக்கள் அன்னியர்
அனைவர்க்கும் இவற்றைக் கூறுக.
வேதகால வர்ண அமைப்பு மூன்று காலகட்டங்களைக் கடந்து, அதற்குப் பின்னர் புராணங்களிலும் ஸ்மிருதிகளிலும் குறிப்பிடப் படும் வர்ண அமைப்பாக மாறியுள்ளதாக டாக்டர் அம்பேத்கர் கருதுகிறார். முதல் காலகட்டத்தில் வர்ணம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவரால் செய்யப்படும் தொழிலாக அமைந்திருந்தது. வாழ்க்கையின் நடுவில் ஒருவர் வர்ணத்தை மாற்றிக்கொள்ள முடியும். இரண்டாம் கால கட்டத்தில் வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒருவரது வர்ணம் நிர்ணயிக்கப்படும். ஆனால் அதனை அதன் பின்னர் மாற்றிக்கொள்ள முடியாது. மூன்றாவது காலகட்டத்திலேயே அது குல அடிப்படையில் மாறியது. இதற்கான சான்றுகளையும் தனது நூல்களில் அம்பேத்கர் எடுத்துரைக்கிறார். இதன் அடிப்படையில் புருஷ சூக்தத்தில் உள்ள இந்த சித்திரம் வேதகால வர்ண அமைப்பின் முதலிரண்டு காலகட்டங்களையே சார்ந்தது என்று கருத வேண்டும்.
ஸ்ரீ அரவிந்தர் இந்த மந்திரம் நமது பொதுப் புத்திக்குப் புலப்படுவதைக் காட்டிலும் மகத்தான பொருள் கொண்ட ஒன்று என்று கூறுகிறார் –
“இங்கு சமூகத்தின் நான்கு பிரிவுகள் சிருஷ்டிக் கடவுளின் உடலில் இருந்து, அவரது சிரம், புஜங்கள், தொடைகள் மற்றும் பாதங்களில் இருந்து உதித்ததாக சித்தரிக்கப் படுகிறது. நமக்கு இது ஒரு கவித்துவமான உருவகமாகத் தோற்றமளிக்கிறது – பிராமணர்கள் அறிவின் மக்கள், க்ஷத்திரியர்கள் ஆற்றலின் வடிவம், வைசியர்கள் உற்பத்தி செய்பவர்கள், சூத்திரர்கள் பணி செய்பவர்கள்.
ஆனால், ரிஷிகளுக்கு சிருஷ்டிக் கடவுளின் உடல் என்ற இந்தக் குறியீடு, ஒரு உருவகம் மட்டுமல்ல, அதை விட மேலானது. தெய்வீக சத்தியத்தை வெளிப்படுத்தி நிற்பது. அவர்களைப் பொறுத்த வரையில் மனித சமுதாயம் என்பது பிரபஞ்ச வடிவான புருஷனைத் தன் வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் வெளிப்படுத்தும் முயற்சியே ஆகும். ஏனெனில் புருஷனே தன்னை பௌதீக உலகமாகவும், பருவெளிக்கு அப்பாலான பிரபஞ்சமாகவும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான்.
இங்கு நாம் காணும் கருத்து என்ன? நான்கு பிரிவுகளும் எதை வெளிப்படுத்துகின்றன? தெய்வீகத்தை அறிவாகவும், தெய்வீகத்தை ஆற்றலாகவும், தெய்வீகத்தை உற்பத்தி – துய்த்தல் – ஒத்துழைப்பு என்பதாகவும், தெய்வீகத்தை தொண்டு – பணிதல் – வேலை என்பதாகவும் அவை வெளிப்படுத்துகின்றன. இந்த நான்கு பிரிவுகளும் நான்கு பிரபஞ்ச விதிகளுக்கு பொறுப்பாகின்றன. எல்லாவற்றின் ஒழுங்கையும், இயல்புகளையும் சிந்தித்து கட்டமைக்கிறது அறிவு என்ற விதி. அவற்றை நடைமுறைப் படுத்தி, நிலைநிறுத்தி, அதிகாரபூர்வமாக்குகிறது ஆற்றல் என்ற விதி. அதன் உறுப்புகளை சீராக அமைக்கிறது ஒத்துழைப்பு என்ற விதி. இவற்றின் ஏவல்களைச் செய்கிறது பணி என்ற விதி”
- புருஷ சூக்தத்தை தமிழில் மொழியாக்கம் செய்து முழுவதுமாக விளக்கி நான் முன்பு எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.
முழுக்கட்டுரையையும் இங்கு வாசிக்கலாம் - http://www.tamilhindu.com/2013/03/purusha-sukta/
-----------------------------------------------------------------------
புருஷ சூக்தத்தில் வரும் கீழ்கண்ட வரிகளை காண்பிப்பார்கள்
"ப்ராஹ்மணோ”உஸ்ய முக’மாஸீத் | பாஹூ ரா’ஜன்யஃ’ க்றுதஃ |
ஊரூ தத’ஸ்ய யத்வைஶ்யஃ’ | பத்ப்யாக்ம் ஶூத்ரோ அ’ஜாயதஃ ||"
ஊரூ தத’ஸ்ய யத்வைஶ்யஃ’ | பத்ப்யாக்ம் ஶூத்ரோ அ’ஜாயதஃ ||"
இந்த வரிகளை மேலோட்டமாக படித்தால், இதன் அர்த்தம் - "முகத்திலிருந்து வந்தவன் ப்ராஹ்மணன், தோளிலிருந்து வந்தவன் க்ஷத்ரியன்,தொடையிலிருந்து வந்தவன் வைஷ்யன், காலிலிருந்து வந்தவன் சூத்திரன்".
அப்போது இவர்கள் சொல்வதுபோல் வேதத்தில் ஜாதி சொல்லப்பட்டிருக்குதானே என்று நீங்கள் கேக்கலாம். அதுதான் இல்லை.
மேலே சொன்னவரிகள் ஒரு சமூகத்தில் உள்ள 4 வகையான தொழில்களையே குறிக்கும்.
1 . ப்ராஹ்மணன் என்பவன் படிப்பு மற்றும் நற்பண்புகளை சொல்லிகுடுக்கும் ஆசிரியர். ஆசிரியருக்கு தேவை அறிவு, அதுனால் தான் ப்ராஹ்மணன் முகத்தில் இருந்து தோன்றினானென்று குறிப்பிடுகிறது
2. தன் நாட்டையும் நாட்டுமக்களையும் எதிரிகளின் படையெடுப்பிலிருந்து காப்பாற்றுபவனே க்ஷத்ரியன். ஒரு க்ஷத்ரியனுக்கு தேவை பலமான தோள்கள், அதுனால் தான் க்ஷத்ரியன் தோளிலிருந்து வந்தானென்று குறிப்பிடுகிறது
3. வியாபாரம்/வணிகம் செய்து தன் வசிக்கும் நாட்டிற்கு பொன் மற்றும் பொருள் ஈட்டுதருபவன் வைஷ்யன். நம் உடலில் மிக பலமான பகுதி தொடைகள். அதே மாதிரி ஒரு நாட்டை செல்வசெழிப்பாக வைத்திருக்க தேவை நல்ல வணிகர்கள். அதுனாலதான் வைஷ்யனை தொடையிலிருந்து வந்தானென்று குறிப்பிடுகிறது
4. விவசாயம், சிற்ப கலை, மண்பாண்டங்கள் செய்வது போன்ற இதர தொழில்களில் ஈடுபட்டவர்களை சூத்திரர்கள் எனப்படுவர். ஒரு உடம்புக்கு எப்புடி கால்கள் வலுசேர்க்குமோ அதுபோல் ஒரு சமூகத்தின் இருக்கும் மக்கள் வளமாக வாழ இவர்களின் பங்கு தான் மிகவும் முக்கியம், அதுனாலதான் சூத்திரன் கால்களிலிருந்து வந்தான் என்று குறிப்பிடுகிறது
1 . ப்ராஹ்மணன் என்பவன் படிப்பு மற்றும் நற்பண்புகளை சொல்லிகுடுக்கும் ஆசிரியர். ஆசிரியருக்கு தேவை அறிவு, அதுனால் தான் ப்ராஹ்மணன் முகத்தில் இருந்து தோன்றினானென்று குறிப்பிடுகிறது
2. தன் நாட்டையும் நாட்டுமக்களையும் எதிரிகளின் படையெடுப்பிலிருந்து காப்பாற்றுபவனே க்ஷத்ரியன். ஒரு க்ஷத்ரியனுக்கு தேவை பலமான தோள்கள், அதுனால் தான் க்ஷத்ரியன் தோளிலிருந்து வந்தானென்று குறிப்பிடுகிறது
3. வியாபாரம்/வணிகம் செய்து தன் வசிக்கும் நாட்டிற்கு பொன் மற்றும் பொருள் ஈட்டுதருபவன் வைஷ்யன். நம் உடலில் மிக பலமான பகுதி தொடைகள். அதே மாதிரி ஒரு நாட்டை செல்வசெழிப்பாக வைத்திருக்க தேவை நல்ல வணிகர்கள். அதுனாலதான் வைஷ்யனை தொடையிலிருந்து வந்தானென்று குறிப்பிடுகிறது
4. விவசாயம், சிற்ப கலை, மண்பாண்டங்கள் செய்வது போன்ற இதர தொழில்களில் ஈடுபட்டவர்களை சூத்திரர்கள் எனப்படுவர். ஒரு உடம்புக்கு எப்புடி கால்கள் வலுசேர்க்குமோ அதுபோல் ஒரு சமூகத்தின் இருக்கும் மக்கள் வளமாக வாழ இவர்களின் பங்கு தான் மிகவும் முக்கியம், அதுனாலதான் சூத்திரன் கால்களிலிருந்து வந்தான் என்று குறிப்பிடுகிறது
கொஞ்சம் உற்று கவனித்தால் உங்களுக்கு தெரியும் - இந்த இடத்தில "இவன் உயர்ந்தவன், அவன் தாழ்ந்தவன்" என்று குறிப்பிடவில்லை, மாறாக ஒரு சமூகம் என்பதை ஒரு மனிதனின் உடம்போடு ஒப்பிட்டு சொல்லப்படுகிறது. அவ்வளவுதான். இது ஜாதி கிடையாது.
நாம் நம் உடம்பில் எப்பொழுதாவூது இதுதான் முக்கியம், இது முக்கியம் இல்லையென்று நினைத்திருக்கோமா? இல்லை தானே. நம் முகம், கைகள் போலவே கால்களையும் பராமரிக்கிறோம்தானே!
உங்களுக்கு மேலும் ஒரு விஷயத்தை சொல்ல போகிறேன் - வேதத்தில் உயர்த்தி பேசப்படுபவன் சூத்திரனே.
என்ன குழப்புகிறதா? வாருங்கள் விளக்குகிறேன்
(a) புருஷ சூக்தத்தின் அடுத்தபடியாக வருவது நாராயண சூக்தம். இதில் பின்வரும் ஸ்லோகம் இருக்கிறது -
"அம்த’ர்பஹிஶ்ச’ தத்ஸர்வம் வ்யாப்ய னா’ராயணஃ ஸ்தி’தஃ"
இதன் அர்த்தம் - இந்த பிரபஞ்சத்தில் அனைத்தும் நாராயணன், எங்கும் நாராயணன், எதிலும் நாராயணன். இந்த பிரபஞ்சமே நாராயணன்.
"அம்த’ர்பஹிஶ்ச’ தத்ஸர்வம் வ்யாப்ய னா’ராயணஃ ஸ்தி’தஃ"
இதன் அர்த்தம் - இந்த பிரபஞ்சத்தில் அனைத்தும் நாராயணன், எங்கும் நாராயணன், எதிலும் நாராயணன். இந்த பிரபஞ்சமே நாராயணன்.
(b) சனாதன தர்மத்தின்படி (இன்று இருக்கும் ஹிந்து மார்க்கம்) "நாராயணன்" தான் வேதத்தில் போற்றப்படும் "புருஷன்".
(c) சனாதன தர்மத்தின் ஒரு முக்கிய அங்கம் - "பக்தி".
பக்தி மார்க்கத்தின் ஒரே கொள்கை - பரமாத்மாவிடம் சரணாகதி வழியாக முக்தியடைவது, அதாவது ஒருவருடைய அகங்காரத்தை இறைவனுடைய சரணங்களில் (பாதத்தில்) சமர்ப்பித்தால் தான் அவன் முக்திக்கு அருகதை ஆகிறான்.
இங்கு பரமாத்மா என்பது வெறுயாரும் இல்லை, வேதங்கள் போற்றும் "புருஷன்", நாராயணனே தான்.
பக்தி மார்க்கத்தின் ஒரே கொள்கை - பரமாத்மாவிடம் சரணாகதி வழியாக முக்தியடைவது, அதாவது ஒருவருடைய அகங்காரத்தை இறைவனுடைய சரணங்களில் (பாதத்தில்) சமர்ப்பித்தால் தான் அவன் முக்திக்கு அருகதை ஆகிறான்.
இங்கு பரமாத்மா என்பது வெறுயாரும் இல்லை, வேதங்கள் போற்றும் "புருஷன்", நாராயணனே தான்.
(d) அலைமகள் என்று போற்றப்படும் சகல செல்வத்தையும் (பொருள் செல்வம், ஞான செல்வம்) அருளும் "அன்னை லட்சுமிதேவி", நாராயணனின் பாதத்தின் அருகில் தான் அமர்ந்திருக்கிறாள். அன்னையின் திருவருட்பார்வை இல்லையெனில் சரணாகதி என்பது கிட்டாத எட்டாத கனி.
இதிலிருந்து என்ன புலப்படுகிறதென்றால் - வேதபுருஷனாகிய நாராயணனின் உடம்பில் மிகவும் புனிதமானது அவனுடைய சரணம்/பாதமே/கால்களே. அந்த புருஷனின் கால்களில் தோன்றிய "சூத்திரர்களை" மதிக்காத/மரியாதை செய்யாத எந்த சமூகத்துக்கும் அலைமகளின் கடாக்ஷம் [செல்வ செழிப்பாயினும், சரணாகதி ஆயினும்] கிடைக்காது.
இது தான் வேதத்தின் தாத்பர்யம், அதில் அடங்கியிருக்கும் சூக்ஷுமம்.
செரி, அப்போ ஏற்ற தாழ்வு எப்பொழுது ஏற்பட்டது என்று நீங்க கேட்கலாம். அதற்கான விடை மிகவும் எளிது - ஆரம்பத்தில் மக்கள் நற்பண்புகளோடு இருந்தாலும், காலப்போக்கில் "நான் அரசன் ஆகையால் என் மகன்தான் அடுத்த அரசன்" என்ற எண்ணம் தோன்றி, பிறப்புக்கும் தொழிலுக்கும் முடிச்சுபோட்டிருப்பார்கள். நாளடைவில் உயர்ந்தவன்-தாழ்ந்தவன் என்று பிரிந்து இன்று நிலவும் ஜாதிய வேறுபாடுகளாக ஆகின.
ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார், ஸ்ரீ ராமானுஜாச்சாரியார், ஸ்ரீ மத்வாச்சாரியார் , ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி போன்ற மஹான்கள் யாரும் ஜாதி என்று பார்த்ததில்லை, காரணம் அவர்கள் அனைவரும் நான் மேலே கூறிய வேதத்தின் சூக்ஷுமத்தை அறிந்தவர்கள். நாமும் அவர்களுடைய வழிகாட்டுதலில் நடப்போம்.
பின்குறிப்பு: இந்த பதிவில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக