கி ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் நாவல்
1970களின் இறுதியில் அல்லது 80களின் தொடக்கத்தில்
வந்த நாவல். அப்போது இலக்கியச் சிந்தனை அமைப்பின்
பரிசைப் பெற்றது. அந்த ஆண்டில் இந்துமதியின்
தரையில் இறங்கும் விமானங்கள் நாவலுக்கு இலக்கியச்
சிந்தனையின் பரிசு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன்
கூட்டத்திற்குச் சென்றோம். ஆனால் அதைவிடச்
சிறந்த படைப்பான கோபல்ல கிராமம் நாவலுக்குப்
பரிசு கிடைத்தது.
**
மார்க்சியம் பயில விரும்பும் புதிய இளைஞர்களுக்கு
கோபல்ல கிராமம் நாவலைப் படிக்குமாறு பரிந்து
உரைப்பதை நான் வழக்கமாக வைத்திருக்கிறேன்.
வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைச் சிறப்பாக
விளக்குவது கிராவின் அந்த நாவல் என்பது என்னுடைய
கணிப்பு.
**
வைரமுத்துவுக்குப் பதிலாக கிரா அவர்களுக்கு
ஞானபீடம் வழங்கப்பட வேண்டும் என்பது எனது
கோரிக்கை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக