திங்கள், 15 ஜனவரி, 2018

காலண்டரின் வரலாறு!
கிறிஸ்து சகாப்தம் (CHRISTIAN ERA) மாறி
பொது சகாப்தமாக (COMMON ERA) ஆனது ஏன்?
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------
1) காலண்டர் என்றால் நாள் வாரம் மாதம் ஆண்டு என
அனைத்து விதமான காலப் பகுப்புகளையும் கணித்துக்
கூறும் முறை என்று பொருள்படும்.

2) உலகில் நூற்றுக்கணக்கான காலண்டர்கள்
இருந்தன; இன்றும் இருந்து வருகின்றன.

3) பல்வேறு கலாச்சாரங்களை சார்ந்த மக்கள், தங்களின்
கலாச்சாரத்திற்கும் வானியல் அறிவுக்கும் ஏற்றவாறு
தங்களின் காலண்டர்களை உருவாக்கிக் கொண்டனர்.

4) இவற்றுள் சூரியச் சுழற்சியை  அடிப்படையாகக்
கொண்ட காலண்டர்கள் அதிகம். சில காலண்டர்கள்
சந்திரச் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டவை.
உதாரணமாக இஸ்லாமிய காலண்டர்கள் சந்திரக்
காலண்டர்கள் ஆகும்.

5) ஐரோப்பா உலகின் தலைமைக்கு வந்தபோது
ஐரோப்பிய காலண்டரானது உலகில் மிக அதிகமான
நாடுகளில் பின்பற்றப் பட்டது. அதில் ஒன்றுதான்
ரோமானிய காலண்டர். தொடக்கத்தில் இது பத்து
மாதங்களை மட்டுமே கொண்டிருந்தது. ஆண்டுத் தொடக்கமாக  மார்ச் மாதத்தைக் கொண்டிருந்தது.

6) காலந்தோறும் இதில் மாற்றங்கள் ஏற்பட்டன.
 ஜூலியஸ் சீசர் காலத்தில் இதில் மிகப்பெரிய
மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆண்டுத்
தொடக்கமாக ஜனவரி ஆனது.12 மாதங்கள்
கொண்டு காலண்டர் அமைந்தது. இக்காலண்டர்
ஜூலியன் காலண்டர் என்று பெயர் பெற்றது. இது
கிமு 46ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.

7) கிபி 1582 அக்டோபர் மாதத்தில் போப்பாண்டவர்
பதின்மூன்றாம் கிரெகோரி என்பவர் ஜூலியன்
காலண்டரில் மேலும் சில திருத்தங்களைச் செய்தார்.
Centuries are not leap years unless divisible by 4 என்பது கிரெகோரி
மேற்கொண்ட முக்கியமான திருத்தம். இக்காலண்டர்
கிரெகோரி காலண்டர் என்று கூறப்படுகிறது.
இதையே இன்று உலகம் பின்பற்றி வருகிறது,
சில திருத்தங்களுடன்.

8) கிரெகோரி காலண்டர் கிறிஸ்து பிறப்பை
அடிப்படையாகக் கொண்டு ஆண்டைக்
கணக்கிடுகிறது. இம்முறை கிறிஸ்து சகாப்தம் என்று
அழைக்கப் படுகிறது. கிமு கிபி என்ற சொற்கள்
மொத்தக் காலத்தையும் கிறிஸ்து பிறப்பைக்
கொண்டு இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றன.

9) கிரெகோரி காலண்டரின் ஆண்டு கணக்கிடும் முறை  கத்தோலிக்கச் சார்புடையது என்று கூறி பிற மதத்தவர்
அதை ஏற்க மறுத்தனர். குறிப்பாக, பிராட்டஸ்டண்டுகள்,
யூதர்கள், இஸ்லாமியர் ஆகியோர் கிறிஸ்து சகாப்தம்
என்ற பெயரை ஏற்கவில்லை. எனவே மதச்சார்பற்ற
ஒரு பெயரை உருவாக்க வேண்டிய தேவை
ஏற்பட்டது.

10) எனவே கிறிஸ்து சகாப்தம் என்ற பெயர்
கைவிடப் பட்டது. அதற்குப் பதிலாக, பொது சகாப்தம்
(Common Era) என்ற  புதிய பெயர் சூட்டப்பட்டது.
வானியல் அறிஞர் ஜோஹன்னஸ் கெப்ளர் 1615இல்
எழுதிய ஒரு புத்தகத்தில் இருந்து பொது சகாப்தம்
(common era) என்ற சொல் எடுக்கப் பட்டது.

11) இருபதாம் நூற்ராண்டின் பிற்பகுதியில் இருந்து
பொது சகாப்தம் நடைமுறைக்கு வந்து விட்டது.
இதன்படி, கிமு, கிபி ஆகியவை கைவிடப் பட்டு,
அவற்றுக்குப் பதிலாக முறையே BCE, CE என்னும்
பெயர்கள் சூட்டப் பட்டன.
CE = Common Era பொது சகாப்தம்.
BCE = Before Common Era பொது சகாப்தத்திற்கு முன்.
  
12) ஆண்டைக் கணக்கிடும் முறை இரண்டிலும்
ஒன்றுதான். கிறிஸ்து சகாப்தம் என்ற பெயர்
அகற்றப்பட்டு பொது சகாப்தம் என்ற பெயர்
நடைமுறைக்கு வந்துள்ளது. மீதி அனைத்தும்
கிரெகோரி காலண்டரேதான்.

13) நடப்பாண்டான 2018ஐ பொது சகாப்தத்தில்
எப்படிக் குறிப்பிடுவது?
CE 2018. தமிழில் பொ.ச 2018.

14) அடுத்து நேரம். உலகம் முழுவதும் UTC நேரம்
(UTC = Universal Coordinated Time) பின்பற்றப் படுகிறது.

15) இதுதான் காலண்டரின் சுருக்கமான கதை.
இதை அனைவரும் அறிந்திட வேண்டும். உலகின்
அனைத்து மக்களும் ஏற்கின்ற, மதப் பிரிவுகளைக்
கடந்த எல்லோருக்கும் பொதுவான, அறிவியல் வழியில்
அவ்வப்போது திருத்தம் செய்யப் படுகிற ஒரு
காலண்டரை இன்று நாம் கொண்டிருக்கிறோம்
என்பதில் பெருமை அடைவோம்.
---------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: 2100ஆம் ஆண்டு லீப் ஆண்டா?
வாசகர்கள் பதில் தருதல் வேண்டும்.
********************************************************

புத்தரின் கொள்கை நிராத்ம வாதம் (Theory of NO SOUL).
ஆத்மா இல்லை என்பது பொருள்முதல்வாதம் ஆகும்.
துன்பத்துக்கு காரணம் என்ன என்பதுதான்
புத்தரின் தேடல். மறுவுலகில் இன்பம் கிடைக்கும்
என்பதையெல்லாம் புத்தர் ஏற்கவில்லை. அவர்
இந்த இப்பிறவியிலேயே காரணத்தைத் தேடினார்.
இதெல்லாம் பொருள்முதல்வாதப் பார்வை.
காலப்போக்கில் பௌத்தம் கருத்துமுதல்வாதமாக்
மாறி விட்டது.

எல்லாம் எனக்கே வேண்டாம். எனக்கு உரிய பங்கு
எனக்குக் கிடைத்தால் போதும்.

நீங்கள் சொல்வது சரிதான். அப்த பூர்த்தி ஆயுஷ்
ஹோமம் அழைப்பிதழ்களை  நிறைவே பார்த்து
இருக்கிறேன். ஆனால் சகாப்தம் என்ற சொல்
பெருவழக்காக இருக்கிறதே. ஒவ்வொரு படிப்பு
விண்ணப்பத்தில், வேலைக்கான விண்ணப்பத்தில்
பிறந்த தேதியை கிறிஸ்து சகாப்தத்தில்
குறிப்பிடுக என்று இருக்கும். இன்று திடீரென
ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும்போது,
கிறிஸ்து சகாப்தம் என்பதை பொது சகாப்தம்
என்று மாற்றினால்தானே குழப்பம் இருக்காது.
வேறு நல்ல சொல் கிடைக்கும் வரை சகாப்தம்
என்ற சொல்லக் கைவிட முடியாது.

ERA என்பது a period of time என்ற பொருளைத்
தருவதால், ஆண்டு என்பது ஏற்புடையது அல்ல
என்பது என் கருத்து. 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக