மாட்டுத்தீவன ஊழல் வழக்கு!
இந்திய வரலாற்றின் நெடிய ஊழல்!
முழு விவரங்கள் அடங்கிய கட்டுரை!
---------------------------------------------------------------------
1) மாட்டுத் தீவன ஊழல் வழக்கு என்பது
ஒற்றை வழக்கு அல்ல. மொத்தம் 53 வழக்குகள்
கொண்டது இது.
2) இந்த 53 வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் மீது
மட்டும் 6 வழக்குகள் உள்ளன. இவற்றில்
இதுவரை 2 வழக்குகளில் தீர்ப்பு வந்துள்ளது.
3) 2013இல் லாலு தொடர்புடைய முதல் வழக்கில்
தீர்ப்பு வந்தது. லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை
கிடைத்தது.
4) தற்போது இன்று (06 ஜனவரி 2017) இரண்டாவது
வழக்கில் வந்த தீர்ப்பில் லாலுவுக்கு மூன்றரை
ஆண்டு சிறை கிடைத்துள்ளது.
5) இந்த 53 வழக்குகளிலும் சேர்த்து மொத்தம்
சுமார் 700 பேர் குற்றம் சாட்டபட்டனர். இந்த
700 பேரில் இதுவரை சுமார் 600 பேருக்கு தண்டனை
வழங்கப் பட்டு விட்டது. அதாவது மொத்தமுள்ள
53 வழக்குகளில் பெருவாரியான வழக்குகளில்
தீர்ப்பு ஏற்கனவே வெளிவந்து விட்டது.
6) 20, 30 ஆண்டுகளாக நீடித்து நடந்து வரும்
ஊழல் இது. லாலு 1990 முதல் 1997 வரை பீகாரின்
முதல்வராக இருந்தார். லாலுவுக்கு முன்பு
காங்கிரசின் ஜெகநாத் மிஸ்ரா என்ற பார்ப்பனர்
முதல்வராக இருந்தார். இந்த இரண்டு முதல்வர்களின்
பதவிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்தான் இந்த
மாட்டுத் தீவன ஊழல்.
7) ரூ 1000 கோடி அளவிலான ஊழல் இது. என்றாலும்
ரூ 200 கோடி அளவிலான ஊழலுக்கு மட்டுமே
இந்த வழக்கு (53 வழக்குகளும்) தொடுக்கப்
பட்டுள்ளது.
8) காங்கிரசின் நரசிம்மராவ் பிரதமராக இருந்த
1991-1996 காலக் கட்டத்தில், 1996ல் இந்த ஊழல் வெடித்தது.
அதன் பின்னர் தேவ கவுடா பிரதமராக இருந்த
போது (ஜூன் 1996 முதல் ஏப்ரல் 1997 வரை)
புலன் விசாரணை முடிவுற்று CBI லாலு உள்ளிட்ட
அனைவர் மீதும் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில்
விசாரணைக்கு வந்தது.
9) இதைத் தொடர்ந்து ஐ கே குஜ்ரால்
பிரதமராக 1997 ஏப்ரல் முதல் 1998 மார்ச் வரை
இருந்தார். அவர் காலத்தில்தான் லாலு 25 ஜூலை,
1997ல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து லாலு சிறையில் அடைக்கப் பட்டார்.
லாலுவின் ராஜினாமாவைத் தொடந்து அதே நாளில்,
அவரின் மனைவி ராப்ரி தேவி பீஹார் முதல்வராகப்
பதவி ஏற்றார். காங்கிரசின் ஆதரவுடன் நம்பிக்கை
வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.
10) டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த
காலத்தில் (2004-2014), 2004 முதல் மாட்டுத் தீவன
ஊழல் வழக்கில் ஒவ்வொன்றாக தீர்ப்புகள்
வெளிவரத் தொடங்கின.
11) காங்கிரஸ் மற்றும் லாலு கட்சியைச் (RJD)
சேர்ந்தவர்கள், MLAகள், கால்நடை மருத்துவர்கள்,
அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் தண்டனை
பெற்றனர். 1 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை
பலரும் தண்டனை பெற்றனர். இடையில் குற்றம்
சாட்டப்பட்ட சுமார் 50, 60 பேர் இறந்து போயினர்.
சுமார் 30 பேர் அப்ரூவர்களாக மாறினர். சுமார்
600 பேர் வரை தண்டிக்கப் பட்டனர்.
12) டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது,
வெளிவந்த தீர்ப்பில் காங்கிரஸ் முதல்வராக
இருந்த ஜெகநாத் மிஸ்ரா என்ற பார்ப்பனர்
4 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். லாலு
5 ஆண்டு சிறை தண்டனை பெற்றார்.
13) மீதமுள்ள வழக்குகளிலும் லாலுவுக்கு
உறுதியாக தண்டனை கிடைக்கும். ஏனெனில்
இந்த 53 வழக்குகளும் OPEN AND SHUT வழக்குகளே.
திட்ட வட்டமான நிரூபணம் ஒவ்வொரு
வழக்கிலும் கிடைத்துள்ளது.
14) நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,
எவன் நம்மை என்ன செய்து விட முடியும் என்ற
அராஜக மனப்போக்கில் பார்ப்பன ஜெகந்நாத மிஸ்ராவும்
லாலுவும் செய்த ஊழல்
காலப்போக்கில் வெளிவந்து விட்டது லாலுவின்
அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது.
ஜெகநாத் மிஸ்ராவுக்கு தற்போது வயது 90.
அவருக்கு அரசியல் வாழ்க்கை எதுவும் இல்லை.
15) தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடியுறைந் தற்று. (குறள்)
**********************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக