வியாழன், 25 ஜனவரி, 2018

 மாட்டுத்தீவன ஊழலின் மூன்றாவது வழக்கில்
லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை!
இன்று வெளியான தீர்ப்பு!
----------------------------------------------------------------------------------
1) சிறையிலேயே செத்துப் போய் விடுவார் லாலு
பிரசாத் யாதவ் என்று தெரிகிறது.
2) இன்று (24.01.2018) வெளியான மூன்றாவது தீர்ப்பில்
லாலுவுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்தது
ராஞ்சி சிறப்பு CBI நீதிமன்றம்.
3) முன்னாள் காங்கிரஸ் முதல்வரும் பார்ப்பனருமான
ஜெகநாத் மிஸ்ராவுக்கும் ஐந்தாண்டு சிறை தண்டனை
விதித்தார் நீதியரசர்.
4) இன்றைய தீர்ப்பில் மொத்தம் 56 பேரில்
50 பேர் தண்டனை பெற்றனர்.
ஆறு பேர் விடுவிக்கப் பட்டனர்.
5) இன்று தீர்ப்பு வெளியான வழக்கு, பிரிக்கப்படாத
பீஹார் மாநிலத்தின் சாய்பாசா கருவூலத்தில்
இருந்து (தற்போது ஜார்கண்டில் உள்ளது)1992-93இல்
ரூ 33,67 கோடி முறைகேடாக பணம் எடுத்தது
தொடர்பானது.
6) லாலு மிஸ்ரா இருவருக்கும் தலா ரூ 5  லட்சம்
அபராதமும் விதிக்கப் பட்டது. 
7) லாலு பெற்றுள்ள தண்டனைகள் விவரம்:
(தீர்ப்பு வந்துள்ள 3 வழக்குகளில்)
------------------------------------------------------------------------
அ) RC 68A/96..Rs 33,67 கோடி ஊழல் ..
5 ஆண்டு சிறை  (24.01.2018)
ஆ) RC 64A/96....Rs 89.27  கோடி ஊழல்.....
3.5 ஆண்டு சிறை (23.12.2017)
இ) RC 20A/96.....Rs 37.7 கோடி ஊழல்........
5 ஆண்டு சிறை (30.08.2013).
8) இந்த வழக்கில் பீஹார் முன்னாள் தலைமைச்
செயலாளர் சஜால் சக்கரவர்த்தி உள்ளிட்ட சில
IAS அதிகாரிகளும் தண்டிக்கப்பட்ட 50 பேரில்
அடங்குபவர்.   
9) மேலும் 3 வழக்குகளில் தீர்ப்பு விரைவில் வெளிவர
உள்ளது.
10) தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடியுறைந் தற்று.
***********************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக