சனி, 13 ஜனவரி, 2018

மோடியை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்!
--------------------------------------------------------------------------------------------
மோடி ஒரு அறிவியல் அறிஞர்
மோடி ஒரு பொருளியல் நிபுணர்
மோடி ஒரு தத்துவஞானி

இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லிக்
கொள்ளுங்கள். எனக்கு ஆட்சேபணை இல்லை.

ஆனால் மோடி ஒரு சிறந்த கவிஞர் என்று மட்டும்
சொல்லாதீர்கள்! ஆனால் மோடியை உலகப்
பெருங்கவிஞர்கள் வரிசையில் நிறுத்துகிறார்
கவிப்பேரரசு வைரமுத்து.

மோடியின் கவிதைகள் (?????) வெளீயிட்டு விழாவில்
பங்கேற்றுப் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து
மோடியை கம்பனை விஞ்சிய கவிஞராக
வர்ணித்தார்.

விருது படுத்தும் பாடு!!!! வைரமுத்து இதற்கு
நாணுவாரா?

நாளை ஹெச் ராஜாவின் கவிதைகள் (?????)
வெளியீட்டு விழாவிலும் பேசுவார் வைரமுத்து.
ஹெச் ராஜாவின் கவிதைகளை பாரதியின்
கவிதைகளோடு ஒப்பிடுவார்.

நல்லவேளையாக அது நடக்காமல் போய்விட்டது.

பின்குறிப்பு: மோடி குஜராத்தி மொழியில் எழுதிய
"கவிதை"களை  சமஸ்கிருதப் பேராசிரியை
ராஜலட்சுமி சீனிவாசன் தமிழில் மொழி பெயர்த்து
இருந்தார். விழாவில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா
சீதாராமன் மோடியின் கவிதைகளை (மொழிபெயர்ப்பை)
வெளியிட்டார். பொன்னார் தமிழிசை ஆகியோர்
நிகழ்வில் பேசினார். வைரமுத்து மட்டுமே  அந்த
நிகழ்வில் பங்கேற்ற ஒரே கவிஞர். நிகழ்வு நடந்த
நாள்:19 நவம்பர் 2017.

பின்குறிப்பு-2: இதற்கப்புறமும் நீங்கள் வைரமுத்துவை
நம்புகிறீர்களா? அட மூடர்களே!

படத்தில் இருபெருங் கவிஞர்கள்!
வலம்: கவிஞர் மோடி; இடம்: கவிஞர் வைரமுத்து/ 
*************************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக